search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் போர்"

    • சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் தயாராகி வருகிறது.
    • உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.

    ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் போரிட்டு வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைனில் சுதந்திர தின விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில் சுதந்திர தினத்தில் உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "இந்த வாரம் ரஷிய படைகள் தீய செயல்களை செய்ய முயற்சிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.

    சுதந்திர தினத்திற்கு முன்பாக ரஷியா மிகப்பெரிய கொடூரமான தாக்குதலை நடத்தலாம் என்று நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ஆயுதப்படைகளின் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் (ரஷியாவின் ஆதரவு நாடு) தயாராகி வருகிறது.

    பெலாரசில் இருந்து மட்டுமல்ல, கருங்கடல் மற்றும் ரஷியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தலாம் என்றார்.

    இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.

    • போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.
    • இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை:

    உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. அவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை. உக்ரைன் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது. இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.
    • மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்தார்

    புதுடெல்லி:

    உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. அவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை, குறிப்பாக உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் மாநில அரசின் முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லையா எனவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை இங்கு உள்ள மருத்துவக் கல்லுரிகளில் சேர்ப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா? எனவும் மக்களவை உறுப்பினர்கள் கவிதா மலோத் உள்ளிட்ட எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்றார். உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது என்றார்.

    'இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது' என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

    ×