என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேடுதல் வேட்டை"
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை
- நாகரில் ஓடும் பஸ்சில் 9 ½ பவுன் நகைஅபஸே்
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் நகை திருட்டு சம்ப வங்கள் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் 4 பேரிடம் 26 பவுன் நகை பறிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பெண் கொள்ளையர்கள் சிலரின் புகைப்படங்களை வெளி யிட்டும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது டிப்-டாப் உடைஅணிந்து வந்து பெண்கள் கைவரிசை காட்டி செல்வது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த கொள்ளை சம்பவங்களில் வெளியூர் கொள்ளையர்கள் ஈடுபடு வதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொள்ளை கும்பலை கைது செய்ய தனிப்படை போலீசார் புது வியூகங்கள் அமைத்து வருகிறார்கள். இதற்கிடையில் நாகர்கோவி லில் ஓடும் பஸ்சில் மேலும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவில் இருளப்பபுரம் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார். இவரது மனைவி ரதி (வயது 37). இவர் நேற்று கன்னக் குறிச்சியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல ராமன்புதூர் சந்திப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார்.
கோணம் தொழில் மையம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது ரதி கழுத்தில் கிடந்த 9½ பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து பஸ் நடுவழியில் நிறுத்தப் பட்டது. பயணிகள் அனை வரும் சோதனை செய்யப்பட்டனர். ஆனால் நகை சிக்க வில்லை.
இதுகுறித்து ரதி, ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரதியிடம் பெண் கொள்ளை யர்கள் தான் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள்.
நகையை திருடிய கும்பல் உடனடியாக பஸ்சை விட்டு இறங்கி தப்பி சென்று விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரதி ஏறிய பகுதியிலிருந்து கோணம் பகுதி வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.
நாகர்கோவிலில் அடுத்த டுத்து நடந்து வரும் அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர்மோள் (23). சம்பவத்தன்று இவர் ஆசாரிப்பள்ளம் பெரு மாள்நகர் 2-வது தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர்கள், திடீரென ஜெனிபர்மோள் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். ஆனால் தங்க சங்கிலி கொள்ளை யர்கள் கையில் சிக்க வில்லை. அது அறுந்து கீழே விழுந்தது. ஜெனிபர் மோள் கூச்சலிடவே கொள்ளை யர்கள் மோட்டார் சைக்கி ளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஆசாரிப் பள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீ சார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சி.சி.டி.வி.யில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்துள் ளது.
அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது.
- ட்ரோன் கேமரா மூலம் சேரம்பாடி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
- போலீசார் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டக் கழகம் பகுதியில் ஒரு சிறுத்தை பதுங்கி உள்ளது. இது கடந்த சில நாட்களாக அங்கு திரியும் ஆடுகள் மற்றும் நாய்களை அடித்து கொன்று வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறைக்கு புகாா் தெவித்தனா்.
புகாரின்பேரில் மாவட்ட வனஅலுவலா் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில், உதவி வனப்பாதுகாவலா் கருப்பையா மற்றும் ஊழியர்கள் சேரம்பாடிக்கு விரைந்து வந்து ஊருக்குள் பதுங்கி உள்ள சிறுத்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக ட்ரோன் கேமரா மூலம் சேரம்பாடி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதுதவிர போலீசார் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
- சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
- தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி :
தெங்கம்புதூரில் நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழா பாதுகாப்பு பணியில் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சரவணந்தேரியை சேர்ந்த ரமேஷ் ஈடுபட்டிருந்தார்.
ஆலயத்தில் சப்பர பவனி நடந்தபோது டாஸ்மாக் கடையின் எதிரே இருந்த பெட்டிக்கடையில் இருந்து சிலர் மது அருந்தி கொண்டி ருந்தனர். அப்போது ஏட்டு ரமேஷ் அவர்களை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் போலீஸ் ஏட்டு ரமேஷை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் தெங்கம்புதூரை சேர்ந்த விஷ்ணுகுமார் (40), பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த சிவனேசன், கொழுத்திராஜன் சக்திவேல், ராஜகோபால், சங்கர், விஷ்ணுகுமாரின் மனைவி நந்தினி, வடக்கு அஞ்சு குடியிருப்பை சேர்ந்த ராஜன் மற்றும் மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கொழுத்திராஜன், ராஜன் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விஷ்ணுகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று சிவனேசன் (50), ராஜகோபால் (54), லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (40) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் காட்சிகளை கைப்பற்றி, இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- 5 கிேலா கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் சம்பவத்தில் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டி கள் கடத்தி வரும் சம்பவம் அண்மை காலமாக அதிகரித் துள்ளன. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு படகுகளில் கடத்தி வரப்பட்ட 33 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கை யில் இருந்து கடல் வழியாக தங்கக்கட்டிகள் படகு மூலம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் மண்டபம் அருகே நல்ல தண்ணீர் தீவு கடல் பகுதியில் அதிகாரிகள், கடலோர காவல் படையினர் தீவிர ரோந்த மேற்கொண்ட னர். அப்ேபாது அந்த வழியாக பதிவு எண் இல்லாத படகு வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் படகில் இருந்தவர்கள் வேறு பகுதிக்கு திருப்பி வேகமாக சென்றார்கள்.
உடனே சுதாரித்து கொண்ட கடலோர காவல் படையினர் அவர்களை விரட்டினர். நொச்சியூரணி புதுமடம் கடற்கரையில் படகை நிறுத்தி விட்டு அதில் இருந்த 3 பேரும் தப்பினர். அங்கு வந்த அதிகாரிகள் அந்த படகை சோதனை செய்த போது அதில் 5 கிலோ தங்கக்கட்டி கள் இருந்தது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
படகில் பதிவு எண் இல்லாததால் தப்பியோடிய வர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்ைல. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடிக்க மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகி றார்கள். கடத்தல் காரர்கள் சிக்கிய பின்புதான் முழு விவரம் தெரியவரும்.
- ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
- ஆசிரியர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த 8-வது படிக்கும் மாணவி. இவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
இந்தப் பள்ளியில் பன்னீர்செல்வம் (வயது59) என்பவர் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அந்த மாணவியிடம் கையெழுத்து சரியில்லை என்று கூறி தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதே போல் அந்தப் பள்ளியில் பல மாணவிகளிடம் இயல்பாக பேசுவது போல கன்னங்களை பிடித்துக் கிள்ளுவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி தருமபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த ஆசிரியரின் சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
மாணவி புகார் கொடுத்த விபரம் தெரியவந்ததும் அவர் தப்பி சென்று தலைமறைவாகி உள்ளார். இதனால் அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என போலீசார் தேடி வருகின்றனர்.
இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குணசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.
இன்னும் ஒரு வருடத்தில் பன்னீர்செல்வம் ஓய்வு பெற இருக்கிறார். அவர் இந்த சம்பவத்தில் சிக்கி இருப்பது மற்ற ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்