என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மது போதை"
- மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
- கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்தவர் பழனிசாமி(வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிசாமி மீன்பிடிதுறைமுகத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறங்கி இறால் பிடித்து, அதை விற்று, அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி, தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
ஆற்றில் இறங்கி இறால் பிடித்த பழனிசாமி வெகு நேரம் ஆகியும் காணாததால், கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி சேரில் மூழ்கி கிடந்த பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி, நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.
- அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது.
- பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர்கள் வேட்டைக்காரன் (35), முனுசாமி மகன் மெய்யப்பன் (45) கூலி தொழிலாளர்களான இருவரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு ஒரு கொட்டகையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்யப்பன் வேட்டைக்காரனை திட்டி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து, மெய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடிய அன்பழகன் மாலையில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார்
- பின்னர் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய அன்பழகனுக்கு போதை தலைக்கேறியது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள ரெட்டிமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடிய அன்பழகன் மாலையில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார்.
பின்னர் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய அன்பழகனுக்கு போதை தலைக்கேறியது. இருந்தபோதிலும் நண்பர்களிடம் கூறிவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் தடுமாறியவாறு வீட்டுக்கு புறப்பட்டார். ஒருகட்டத்தில் பாதையே தெரியாத அளவுக்கு வாகனம் ஓட்டிய அன்பழகன், சிறுகனூர்-தச்சங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மணல் நிறைந்த அந்த சாலையில் சில மீட்டர் தூரம் சென்ற அவர் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
ஆனால் அந்த வழியாக யாரும் வராததால் உதவி கிடைக்காமல் நீண்ட நேரமாக போராடிய அன்பழகன் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் அன்பழகனை தேடி அலைந்தனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்தது அன்பழகன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அன்பழகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
- சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 35). இவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் . நேற்று செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் பின்பு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இறந்து போனவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணையை கொண்டு வருகின்றனர்.
- இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.
- பலத்த காயமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் (வயது 50) என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.இதனை மருத்துவமனை கம்பவுண்டர் சதாசிவம்(40) தட்டி கேட்டார்.
இதில் அப்துல்ரகுமான் ஆத்திரமடைந்து பாட்டிலால் சதாசிவத்கொதை குத்தி னார். மேலும் தன்னை தானே குத்தி கொண்டார். இதில் பலத்த காயமமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சேசை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்