search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சடலம்"

    • சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
    • குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    கிழக்கு டெல்லி சதாரா மாவட்டத்தில் உள்ள பார்ஷ் பஜார் போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த முகவரிக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு கிடந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அந்த பையில் ஒரு பெண்ணின் பிணம் திணிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெண்ணின் பெயர் ஷாமா (23) என்பது தெரிய வந்தது. அவர் நியூ சஞ்சய் அமர் காலனியை சேர்ந்தவர் ஆவார்.

    தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த போது அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த பெண்ணை யாரோ கழுத்தை நெரித்து கொன்று பையில் அடைத்து வீட்டு அருகே போட்டு சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறிய போது, 'பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளோம். இதுவரை நடந்த விசாரணையில் சந்தேகமான நபரை பற்றி வலுவான தடயங்கள் கிடைத்துள்ளன. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

    • இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
    • இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு.

    ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங் (58) மற்றும் நரேந்திர சிங் (25) ஆகியோர் குடிபோதையில் சுடுகாட்டிற்கு சென்று அங்கு தகன மேடையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலின் சதையை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த செவ்வாய்கிழமை காலை பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்த 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம்பெண்ணின் உடல் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களில் நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் சடலத்தை பீய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த படாசாஹி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இருவரிடமும் போலீசார் விசாரித்ததில், திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொள்வது தங்களுக்கு சக்தியைத் தரும் என்றும் அதனால் சடலத்தை சாப்பிட்டதாகவும் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் கூறினர். போதையில் இருவரும் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    • பொன்னையா ரோஸ்லி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
    • இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. அதன் பிறகு அவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் மறுகால்தலையை சேர்ந்தவர் பகவதி முருகன். இவருடைய மனைவி பொன்னையா ரோஸ்லி (வயது 57). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக கடந்த 6 மாதமாக தாயார் வீட்டில் சிகிச்சை பெற்ற அவர் சில தினங்களுக்கு முன்பு தான் மறுகால் தலையில் உள்ள வீட்டுக்கு வந்தார். ஆனால் கடந்த 2 நாட்களாக பொன்னையா ரோஸ்லி வீடு திறந்து இருந்தது. ஆனால் அவர் வெளியே வரவில்லை.

    இதனால் அருகில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பொன்னையா ரோஸ்லி இறந்து கிடந்தார்.

    இது குறித்து அவரது தம்பி செல்லத்துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பிறகு சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. அதன் பிறகு அவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்.

    ×