search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைப்படுத்தும் பணி"

    • பரமக்குடி நகர் பகுதியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
    • 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

    பரமக்குடி

    பரமக்குடி நகர் தெளிச்சாத்தநல்லூர் முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்.எல்.ஏ., பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, துணைத்தலைவர் குணா, பொதுப்பணித் துறை வருவாய்த்துறை ஊராட்சித்துறை நகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    ஊட்டி,

    கோத்தகிரியில் தமிழக அரசின் சார்பில் தூய்மையான நகரங்களை உருவாக்கும் நோக்கில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள பொது நடைபாதைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையை வாகன நிறுத்துமிடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது நடைபாதை அமைக்கப்பட்டது. இருப்பினும் சிலர், அந்த நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்படி நேற்று பேரூராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் நவீன எந்திரத்தின் உதவியுடன் சுமார் 200 மீட்டர் நடைபாதையை கழுவி சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டனர்.

    • காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

    கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பல நூறு கோவில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இக்குளத்தில் நீராடிய பின் காஞ்சி ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் மேலும் ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண உற்சவத்தின் போது தீர்த்தவாரி நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இத்திருக்குளத்தில் நீத்தார் ஈம சடங்குகளை நடத்தி வழிபாடு செய்வது வழக்கம் மேலும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் இதில் மிதந்துள்ளதால் பக்தர்கள் நீராட செல்வதில்லை.

    இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி தன்னார்வர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மேயர் மகாலட்சுமி துவக்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குளத்தில் மிதந்து கிடந்த கழிவுகள் மற்றும் நடைபாதைகள் இருந்த கழிவுகள் என அனைத்தையும் அகற்றும்பணியில் ஈடுபட்டனர்.

    இது போன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருக்குளங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக செவிலிமேடு, சதாவரம் ஆகிய பகுதிகளிலும் குளங்கள் தூர் வாரப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆய்வாளர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×