search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2வது ஒருநாள் போட்டி"

    • முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
    • இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் அனாமுல் ஹக் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்திய வீரர் சிராஜ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

    • முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
    • தலா ஒரு வெற்றி மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சம நிலையில் உள்ளது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்து. இந்நிலையில் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து 28.1 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிபட்சமாக அந்த அணி வீரர் லிவிங்ஸ்டோன் 38 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானிமேன் மலான், வான்டெர் டஸன், மார்க்ராம் ஆகிய 3 பேரும் டக்-அவுட் ஆனார்கள்.

    இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மொயீன் அலி, ரீஸ் டாப்லே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

    ×