search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசி"

    • குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
    • 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 11வது தலமாகும்.

    காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

    21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

    பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

    குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

    மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.

    பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

    இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    • காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
    • இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.

    ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.

    இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மகாலட்சுமி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

    • ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா ெரயில் விடப்படுகிறது.
    • மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

    மதுரை

    இந்திய ெரயில்வே உணவு சுற்றுலா கழகம் சார்பில் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு 'பாரத் கவுரவ்' சுற்றுலா ெரயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ெரயில் மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும். இதனை தொடர்ந்து கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மே மாதம் 6-ந் தேதி ஒடிசா மாநிலம் பூரி செல்லும்.

    அங்கு ஜெகநாதர் கோவில், கொனார்க் சூரிய கோவில் ஆகிய தலங்களில் தரிசனம் செய்யலாம். மே 8-ந் தேதி கொல்கத்தாவில் காளி கோவில் தரிசனம். 9-ந் தேதி பால்குனி நதியில் நீராடி முன்னோர் பித்ரு பூஜை. அதன் பிறகு மகா போதி கோவில் தரிசனம். மே 10-ந் தேதி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்கள் தரிசனம். 11-ந் தேதி அயோத்தியா சரயு நதியில் நீராடி ராம ஜென்ம பூமி, அனுமன் கோவில்கள் தரிசனம். 12-ந் தேதி பிரக்யாராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி அனுமன் கோவில் தரிசனம். 14-ந் தேதி சுற்றுலா ெரயில் மீண்டும் கொச்சுவேலி வந்து சேரும். இந்த சுற்றுலா ெரயி லுக்கான பயண சீட்டுகள் பதிவு நடந்து வருகிறது.

    • மிகச்சிறிய கருவறையில் இரண்டு மூன்று பூசாரிகள் நின்றுகொண்டு ஆரத்தி காட்டுகிறார்கள்.
    • ‘ஜெய் விஸ்வநாத் ஜி’ என்ற பக்தர்களின் கோஷம் காதுகளை நிறைக்கிறது.

    இந்துக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வர விரும்பும் புண்ணியத் தலங்களுள் முக்கியமானவை, காசியும் ராமேஸ்வரமும். தெற்கே இருக்கும் ராமேஸ்வரமும், வடக்கே இருக்கும் காசியும் புனிதத் தலங்கள் மட்டுமல்லாமல், மோட்சத்துக்கான வழிபாட்டுத் தலங்களாகவும் கருதப்படுகின்றன. இப்போது காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி தமிழகத்திலிருந்து ஆன்மிகவாதிகள், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் காசிக்குச் சென்று வருகிறார்கள். காசிக்குப் போனால் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன? எத்தனை நாட்களுக்குள் அவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத் திரும்புவது சாத்தியம் என்பவர்களுக்காக இக்கட்டுரை…

    காசி எனப்படும் வாராணசி பாரதத்தின் தொன்மை வாய்ந்த பழைமையான நகரம். வாரணாசி என்ற பெயர் வந்ததற்குப் பின்னணியில் இரண்டு ஆறுகள் இருக்கின்றன. வருணா மற்றும் அஸி என்ற இரு ஆறுகள் சங்கமமாகி கங்கையில் கலப்பதால்தான் இந்த நகரத்துக்கு வாரணாசி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

    பண்டைய புராணங்களிலும் இலக்கியங்களிலும் காசியின் புனிதத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், காசியில் ஓடிக்கொண்டிருக்கும் புனிதமான, அப்பழுக்கற்ற கங்கை நதி!

    காசியில் கங்கா ஸ்நானம் செய்தால் போதும், நம் பாவங்கள் எல்லாம் தொலைந்துவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதற்குக் கட்டியம் கூறுவதுபோல இங்கு தடையின்றி ஓடிக்கொண்டே இருக்கிறாள் கங்கை. காசிக்குச் செல்பவர்கள் கங்கையில் ஸ்நானம் (கங்கையில் முழுகிக் குளிப்பதை) செய்வதை பிரதானமாகக் கடைப்பிடிக்கிறார்கள். கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரையும், அன்னபூரணியையும், விசாலாட்சியையும் வழிபடுவது வழக்கம்.

    படகுப் பயணம்: காசி நகரின் மையத்தில் கங்கை பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறாள். கங்கை நதியைச் சுற்றியும் சுமார் 84 படித்துறைகள் (அவற்றை `காட்'கள் என்கிறார்கள்!) உள்ளன. தசஸ்வமேத காட், மணிகர்னிகா காட், கேதார் காட், அரிச்சந்திரா காட், லலிதா காட், மானசரோவர் காட், அகல்யாபாய் காட், சேட் சிங் காட், அஸி காட், பஞ்சகங்கா காட், ராஜேந்திர பிரசாத் காட் என்று ஒவ்வொரு படித்துறைக்கும் ஒவ்வொரு பெயர். இதில், தசஸ்வமேத காட், மணிகர்னிகா காட், அரிச்சந்திரா காட் போன்றவை மிகவும் முக்கியமானவை.

    இந்தப் படித்துறைகள் முழுவதையும் படகில் அழைத்துப் போய் சுற்றிக் காட்டுகிறார்கள். இதற்கெனக் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட `காட்'களை மட்டும் பார்த்தால் போதும் என்றால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள். நமது நேரத்தையும், செலவிடும் தன்மையையும் பொருத்து படகை அமர்த்திக் கொள்ளலாம். கங்கையில் படகு சவாரி செய்வது மிகவும் ரம்மியமானது.

    மணிகர்னிகா காட்: மணிகர்னிகா என்பதற்கு காதுகளில் அணியப்பட்ட ஆபரணம் என்று பொருள். சதி தேவியின் (பார்வதி தேவியின் மறுபெயர்!) உடலை சிவபெருமான் தன் இரு கைகளிலும் ஏந்தி ருத்ர தாண்டவம் ஆடியபோது, அவளது காதுகளில் இருந்த ஆபரணம் விழுந்த இடம்இது என்பது ஐதீகம். காதுகளில் அணியப்பட்ட ஆபரணம் விழுந்த இடம் என்பதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுபவர்களும் உள்ளனர். காசி மாநகரில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்த படித்துறைக்கு அருகில்தான் எரியூட்டப்படுகின்றன. நாள்தோறும் சுமார் 200 சடலங்கள் எரிக்கப்படுகிறதாம்.

    நாம் படகில் செல்லும்போதே மணிகர்னிகா காட்டிலும், அரிச்சந்திரா காட்டிலும் (அரிச்சந்திர மகாராஜாவின் பெயரால் இந்தப் படித்துறை அழைக்கப்படுகிறது) சடலங்கள் எரிந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

    கேதார் காட்டில் கௌரி குண்ட் என்ற சிறிய குளம் உள்ளது. இங்கு கேதாரேஸ்வரர் என்ற சிவன் கோயில் இருக்கிறது. இங்கு சென்று வழிபட்டால், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில் வழிபட்ட பலன் கிடைக்குமாம்.

    தசஸ்வமேத காட் என்பது பிரம்மாவுடன் தொடர்புடையது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற யாகத்துக்கு பிரம்மா தன்னுடைய 10 குதிரைகளை அளித்தார் என்பதால் இதற்கு தச (பத்து) – அஸ்வமேத (குதிரைகள்)காட் என்று பெயர்.

    இப்படி… ஒவ்வொரு படித்துறையின் பெயருக்குப் பின்னும் ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது.

    முன்பெல்லாம் கங்கை நதி மாசுபட்டு, குளிக்கவே முடியாத அளவுக்கு கருநிறமாக இருக்கும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில் கங்கையை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், தூய்மையான நீர் சலசலத்து ஓடுகிறது என்றும் காசிக்கு அடிக்கடி வருபவர்கள் சொல்கிறார்கள். அது உண்மைதான் என்பது தூய்மையான கங்கையைப் பார்க்கும்போதே புரிகிறது. கங்கா ஸ்நானம் செய்தபின், அங்கே சிறு காகிதத் தட்டுகளில் வைத்து விற்கப்படும் அகல் விளக்கை வாங்கி தீபமேற்றி நதியில் தவழவிட்டு, கங்கா மாதாவை வணங்குவது வழக்கம். மலர்களுக்கு நடுவே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அகல் விளக்கு, தண்ணீரில் மிதந்து செல்வது கண்கொள்ளாக் காட்சி.

    கங்கா ஸ்நானம் ஆன பிறகு, காசி விஸ்வநாதரைத் தரிசிக்கச் செல்வது சிறப்பு. இரண்டு பேருக்கு மேல் போக முடியாதபடி மிகக் குறுகலாக இருக்கும் காசியின் சிறிய சந்துகள் (வீதிகளில்) வழியாக நடந்து செல்ல வேண்டும்.

    கோயிலுக்கு நான்கு புறமும் வாயில்கள் உள்ளன. பிரதான வாயிலுக்கு அருகில் பால், பிரசாத இனிப்புகள் விற்கப்படுகிறது. ஒரு டம்ளர் பால் ரூ.10- க்கு கிடைக்கிறது. அதை வாங்கி நம் கைகளாலேயே விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யலாம்.

    கோயிலின் பிரதான வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெண்ணிறப் பளிங்குத் தரை முற்றம். நடுநாயகமாக காசி விஸ்வநாதரின் கருவறை. வாயிலிலிருந்தே தொடங்குகிறது பக்தர்களின் நீண்ட வரிசை. கருவறைக்கும் நான்கு வாசல்கள் உள்ளன. எந்த வரிசையில் வேண்டுமானாலும் நிற்கலாம். கடைசியில் அந்த வரிசை கருவறையில்தான் முடியும். கருவறையின் கீழே, தரையோடு தரையாக நடுநாயகமாக, வெள்ளி நாகாபரணம் அணிவிக்கப்பட்ட மிகச்சிறிய லிங்க வடிவில், வண்ண மலர்களுக்கு நடுவே காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார். அவரைச் சுற்றிலும் நான்கு புறங்களிலும் மழைநீர்ப் போக்கி போல குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. நாம் கொண்டு சென்றிருக்கும் பாலை அந்தக் குழாய்களில் ஊற்றினால், அவை நேரே விஸ்வநாதரின் திருவடிகளை அடைந்துவிடுகிறது.

    மிகச்சிறிய கருவறையில் இரண்டு மூன்று பூசாரிகள் நின்றுகொண்டு ஆரத்தி காட்டுகிறார்கள். `ஜெய் விஸ்வநாத் ஜி' என்ற பக்தர்களின் கோஷம் காதுகளை நிறைக்கிறது.

    விஸ்வநாதரைத் தரிசித்த பிறகு சுற்றிலும் அருள்பாலிக்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர், ராமர் சந்நிதிகளை வலம் வருகிறோம். அங்கிருக்கும் நந்தி தேவரின் சிலைக்கும் சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுகிறது. சுற்றிலும் உள்ள சந்நிதிகளில் பல்வேறு பெயர்களில் அமைந்த சிவலிங்கங்கள், காசி விஸ்வநாதரைப் போன்றே தரையில் அமைந்திருக்கின்றன. வழிபாடு முடிந்தபின் எந்த வழியில் வந்தோமோ அதே பிரதான வாயில் வழியே வெளியே வந்தால், பேடா, லட்டு போன்ற இனிப்புப் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளலாம்.

    விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து இரண்டே நிமிட நடை தூரத்தில் அன்னபூரணி கோயில். தங்கக் கவசத்தில் தகதகவென ஜொலிக்கிறாள் அன்னை. கைகளில் அன்னப் பாத்திரமும், கரண்டியும் ஏந்தி, உலக உயிர்களுக்கெல்லாம் குறைவின்றி உணவு வழங்கும் தாயாக, கருணையே வடிவாகக் காட்சியளிக்கும் அன்னபூரணியை மனம் குளிர வணங்கிவிட்டு வெளியே வருகிறோம்.

    மீண்டும் குறுகலான பல சந்துகள் வழியாகப் பயணித்தால், காசி விசாலாட்சி கோயில் வருகிறது. தெருவில் யாரைக் கேட்டாலும் வழி சொல்கிறார்கள்.

    விசாலாட்சி குடிகொண்டிருக்கும் ஆலயமும் மிகச் சிறியதுதான். பக்தர்கள் பலர் அன்னைக்கு, விதவிதமான வண்ணப் புடவையை சார்த்தி வழிபடுகிறார்கள். அன்னையின் மீது சார்த்திய புடவைகளை ஆலயத்துக்குள்ளேயே விற்பனையும் செய்கிறார்கள்.

    விசாலாட்சியை தரிசித்துவிட்டு வெளியே வந்து, மீண்டும் குறுகிய பல சந்துகள் வழியாகப் பயணித்தால் பிரதான சாலையை அடையலாம். காசி வீதிகளில் ஆங்காங்கே சுடச்சுட தேநீர் விற்கப்படுகிறது. சிறிய மண் குவளைகளில் நிறைத்துத் தருகிறார்கள். விலை ரூ.5 மட்டுமே. குமிட்டி அடுப்பில் உடனுக்குடன் தயாரித்து வழங்குகிறார்கள்.

    காசிக்குச் செல்வோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நிகழ்வுகளில் முக்கியமானது, மாலையில் நடைபெறும் கங்கா ஆரத்தி. காலை முதல் மாலை வரை காசியிலிருக்கும் கோயில்கள், கடைகளுக்கெல்லாம் சென்றுவிட்டு, மாலை சரியாக 5 மணிக்குள் தசஸ்வமேத காட்டுக்கு அருகே இருக்கும் மேடைக்கு பக்தர்கள் வரத் தொடங்கி விடுகிறார்கள். அங்குதான் மாலை சுமார் 6.30 மணியளவில் கங்கா ஆரத்தி தொடங்குகிறது. கங்கா ஆரத்தியை படித்துறை மேடையில் போடப்படும் நாற்காலிகளில் அமர்ந்தும் பார்க்கலாம், கங்கையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளில் (படகுகளில் அமர்ந்து பார்க்க நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணம்!) அமர்ந்தும் பார்க்கலாம்.

    கங்கா ஆரத்தி தொடங்குவதற்கு முன் பக்திப் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுகிறது. படித்துறையிலும், படகுகளிலும் நம் நாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பயணிகள் என்று பலரும் திரளாகக் கூடுகிறார்கள். வானத்தில் கருமை படர ஆரம்பிக்கும் நேரத்தில், படித்துறை மேடைக்கு வருகிறார் தலைமை பூசாரி. அவரைத் தொடர்ந்து மேலும் 6 பூசாரிகள் மேடையேறுகிறார்கள்.

    பூசாரிகள் முதலில் கங்கைக் கரைக்கு வந்து, அன்றைய தினம் யாருடைய சார்பில் பூஜை நடைபெறுகிறதோ அந்தக் குடும்பத்தினரை அழைத்து சில மந்திரங்களைக் கூறி, கங்கைக்கு தீப தூப ஆராதனை காட்டுகிறார்கள். பிறகு ஆரத்தி காட்டுகிறார்கள். பிறகு மீண்டும் மேடைக்குச் சென்று பலவிதமான வழிபாடுகளைச் செய்கிறார்கள்.

    இதில் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், பூசாரிகள் எல்லோருமே ஒரே மாதிரியாக, கொஞ்சமும் பிசகாமல் ஒரே தாள கதியில் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து பூஜை செய்வதுதான்.

    கருமை பூத்த வானமும், கங்கையின் பிரவாகமும், மணியோசையும், பூஜைப் பொருட்களின் நறுமணமும் சேர்ந்து நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது நிஜம். ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் நம் மனதை இறைவனுடன் ஒன்று கலக்கச் செய்துவிடும் அற்புத அனுபவம் இந்த கங்கா ஆரத்தி. கங்கா ஆரத்தி முடிந்ததும், பூஜை நடந்த மேடைக்குப் போய் ஆரத்தியைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொள்ளலாம். சிறு சிறு வெண்ணிற மணிகளைப் போன்ற இனிப்புருண்டைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    அந்த இரவில் படகுப் பயணம் செய்ய விரும்புபவர்கள், படகில் ஏறிப் பயணிக்கலாம். இரவு நேரத்தில் கங்கையைச் சுற்றிக்காட்ட தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பகலில் கங்கையைப் பார்த்து ரசிப்பது ஒருவித அனுபவம என்றால், இரவில் மெய் சிலிர்க்க பவனி வருவது வேறொரு வகையான அனுபவம். உண்மையில், `எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்றுதான் நினைக்கத் தோன்றியது.

    காசியில் மேற்கூறிய இடங்களைத் தவிர, சற்றே தொலைவில் இருக்கும் கால பைரவர் கோயிலும் வெகு பிரசித்தம். போக வர ஒரு மணி நேரம் ஆகலாம். ஆட்டோ அல்லது ரிக்‌ஷாவில் பயணிக்க முடியும். நேரமிருப்பவர்கள் காசியில் இருக்கும் சங்கர மடம், அங்கு எழுந்தருளியிருக்கும் சிவன் கோயிலுக்கும் போய் வரலாம். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், மகாகவி பாரதியார் தங்கியிருந்த வீடு என்று சில முக்கிய இடங்களும் உள்ளன.

    காசியில் முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்க இரண்டு தினங்கள் போதுமானது. காசியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) சென்று, திரிவேணி சங்கமத்தில் நீராடி, அங்கிருக்கும் சில ஆலயங்களைத் தரிசித்துவிட்டு, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லமான ஆனந்த பவனத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினால், மேலும் ஒரு நாள் தேவைப்படும். வாரணாசி நகரம் முழுவதும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப சுற்றுலா விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். சென்னையில் இருந்து காசிக்கு ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதியும் உள்ளது.

    - ஜி.மீனாட்சி

    • 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    காசி ஆன்மீகப் பயணத்தில் அா்ச்சகா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அா்ச்சகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாசு விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை மூலம் ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தகுதி வாய்ந்த 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். இதனால் பூசாரிகள், அா்ச்சகா்களின் பக்தி அனுபவம் அதிகரிப்பதுடன், பக்தா்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு செய்யவும், ஏனைய பக்தா்கள் காசி யாத்திரை சென்று வர அனுபவ ரீதியாக சொல்லவும் உதவியாக இருக்கும். மேலும் நாள் முழுவதும் கோவிலில் பணியாற்றும் அா்ச்சா்களுக்கு இந்த ஆன்மிகப் பயணம் புத்துணா்ச்சி அளிப்பதாக இருக்கும். 200 பக்தா்கள் செல்லும் ஆன்மிக பயணத்தில், அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.

    தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஆன்மீக சுற்றுலா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    கடந்த ஆண்டு மே மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியக் கோரிக்கையின் போது, 60 வயதிற்கு மேல் 70 வயதுக்கு உள்ளே இருக்கும் 200 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தோம்.

    அதற்குரிய 5 லட்சம் ரூபாய் செலவுத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த பயணத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் தேர்வு செய்யப்படும் முதியவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குளிர்காலம் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதியை பெற்று காசிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தற்போது அந்த வீட்டில் பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
    • பாரதி சிலையுடன் கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன

    உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இங்கு மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து  மேலும் அவர் கூறியுள்ளதாவது:

    பாரதியார் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவே நான் கருதுகிறேன். அந்த வீட்டில் தற்போது பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். 


    சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் பாரதியார் எப்படி தனது கவிதைகள் மூலம் அணுகினார் என்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும்.

    பாரதி வாழ்ந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன்கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீவிரம்
    • கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காசியை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட காசி மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காசி மீது பாலியல் புகார் உள்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இதையடுத்து வழக்கானது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி மீதான வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் ஆதாரத்தை அழித்ததாக கூறி அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அதே சமயம் அஞ்சுகிராமம் அருகே கண்ணன்குளத்தை சேர்ந்த கவுதம் என்பவர் தலைமறைவாக இருந்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த 8 வழக்குகளில் 6 வழக்குகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 2 வழக்குகளில் கவுதமுக்கு தொடர்பிருந்ததால் அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. காசிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவுதம் வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தார். இதுதொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவனந்தபுரம் சென்று விமான நிலையத்தில் இருந்த கவுதமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கவுதமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கவுதமனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் கவுதமை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். காசிக்கும், கவுதமுக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் காசிக்கு உதவியாக பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து மீண்டும் கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    • காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து 51 பேர் புறப்பட்டனர்.

    • போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டன.
    • இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவரது மகன் காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினியர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் அளித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காசி மீது அடுத்தடுத்து இளம்பெண்கள் புகார் அளித்தனர். அந்த வகையில் வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காசியின் நண்பர் ஒருவரை கைது செய்தனர்.மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக தங்கபாண்டியனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் காசி மற்றும் தங்கபாண்டியன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஏற்கனவே கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணைக்கு இன்று காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் நேரில் ஆஜராகினர்.

    இதுவரை 12-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்கு மூலம் அளித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று டாக்டர்கள் வந்து சாட்சி அளித்தனர். பின்னர் காசி மற்றும் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி மற்றும் தங்கபாண்டியன் மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ×