search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 249756"

    • பாலதண்டாயுதபாணி கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பூப்பல்லக்கு பவனி நாளை நடக்கிறது

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேரகன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் கோம்பை கரட்டின் அடிவாரத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று ஏராள மான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பூக்குழி இறங்கி னர். விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இன்று மாலை பட்டு பல்லக்கில முருகன் எழுந்த ருளி கோவில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலை அடைந்து கள்ளர் திருக்கண் வந்து அடைவார்.

    நாளை அங்கிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் முருகன் பூப்பல்லக்கில் எழுந்தருளு கிறார். தொடர்ந்து வீதி உலா வந்து நள்ளிரவு 12 மணிக்கு ேகாவிலை வந்தடைகிறார்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை யொட்டி மகாபாரதக் கதைக்கேற்ப கதாபாத்தி ரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதனை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதா னத்தில் தெளித்தனர்.

    பின்னர் பூ வளர்த்தனர் மாலை 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டை கிராமம், முதலியார் கோட்டை கிராமம், ரெயில்வே பீடர் ரோடு வழியாக மார்க்கெட் ரோடு, நான்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாரியம்மன் கோவில் பூக்குழி விழா இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந் 4-ந் தேதி விழா தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விழாவில் நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதனை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டி, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் களை செலுத்தினர்.

    நேற்று பெண்கள் உள்பட திரளானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ெசலுத்தினர். பின்னர் பால்குட ஊர்வலமும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை காமன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் பாண்டியன், ஊர் தலைவர் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • கீழவளவு வீரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கீழவளவு வீரகாளியம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தியும், பெரியமந்தையில் இருந்து ஊர்வலமாக சென்று வீரகாளியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் கீழவளவு, வாச்சம்பட்டி, குழிச்சேவல்பட்டி, வடக்கு வலையபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • 8 பட்டறை பத்திரகாளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 பட்டறை பத்திரகாளி முத்து மாரியம்மன் கோவில் கொல்லர்திடலில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் 25-வது ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 30-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    மாவிளக்கு எடுத்தல், திருவிளக்கு பூஜை, அக்னிச்சட்டி எடுத்தல் போன்றவை விமரிசையாக நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 12-ம் நாள் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கினர். பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • மானாமதுரை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூக்குழி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் பக்தி பரவசத்துடன் நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.

    விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் உற்சவ விழா மற்றும் முளைப்பாரி நடைபெற்றது. இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் கோவிலுக்கு எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வேண்டுதல் நிறை வேற்றினர். பல பக்தர்கள் இடுப்பில் குழந்தைகளை கட்டிக்கொண்டு தீ மிதித்தனர்

    அதன்பின் மாரியம்ம னுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
    • சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் பாத்திமா அஸ்ஸனா உஸ்ஸனா தர்காவில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இதில் பங்கேற்பார்கள். 500 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த விழாவானது இப்பகுதி மக்களால் சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாராப்பூரில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவில் பெண்கள் உள்பட ஏராளமானோர் புனித நீராடினர். தொடர்ந்து ஆண்கள் மட்டும் 3 முறை (நெருப்பு தணலில்) பூக்குழியில் இறங்கினர். பின்னர் சந்தனம் பூசுதல் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகாலை வரை நடந்தது.

    திருழாவை முன்னிட்டு தப்பாட்டம், கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வாராப்பூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழிநாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நோய் தொற்று காரணமாக எந்த ஒரு விழாக்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இத்திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுதோறும் ஆடி மாதம் கொடை விழாவும் பூக்குழி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்
    • அம்மன் சன்னதியில் 108 கலச பூஜை அபிஷேகங்கள் சுவாமிகள் பாயாச குளியல் அலங்கார தீபாராதனை

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி முப்பந்தல் ஸ்ரீ ஆலமூடு அம்மன் திருக்கோவில் கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இசக்கி அம்மன் ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீ ஆலமூடு அம்மன் ஆலயம். ஆண்டுதோறும் ஆடி மாதம் கொடை விழாவும் பூக்குழி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று அதிகாலை மகாகணபதி ஹோமம் அபிஷேக கறிவகைகள் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகழியின் ஊற்று பிள்ளையார் கோவில் முன்பு இருந்து யானைகள் பூங்கரம் அபிஷேகங்கள் முளைப் பாத்தி பறவைக்காவடி சூரிய காவடி ஊர்வலத்தை ஆலமூடு அம்மன் டிரஸ்ட் நிர்வாகி டாக்டர் அருணாசலம் தலைமையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். அதன் பின்பு நடந்த அன்னதான நிகழ்ச்சியை குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அம்மன் சன்னதியில் 108 கலச பூஜை அபிஷேகங்கள் சுவாமிகள் பாயாச குளியல் அலங்கார தீபாராதனை அக்னிச்சட்டி எடுத்தல் அம்மன் தேரில் பவனி வருதல் பூக்குழி பூசையும் அக்கினி பக்தர்கள் பரவசத்தோடு பூக்குழி இறங்கி விளையாடினார்கள் அதன்பிறகு அலங்கார தீபாராதனை ஊட்டும் படைத்தல் நடைபெற்றது.

    இன்று பொங்கல் வழிபாடு தீபாவளி மஞ்சள் நீராடுதல் அன்ன தானம் ஆகியவை நடைபெற உள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தியும் கலந்து கொண்டார்கொ டை விழா ஏற்பாடு களை ஸ்ரீ ஆலமூடு அம்மன் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் டாக்டர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் சேவா சங்கம் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    ×