search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னோர்கள்"

    • ஸ்ரீமந் நாராயணனே, ராம மற்றும் கிருஷ்ண அவதாரத்தின் போது பித்ரு பூஜை செய்ததாக கூறப்படுகிறது
    • மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம்.

    பித்ரு வழிபாடு

    ஒருவர் மரணம் அடைந்த பிறகு, அவர் ஆத்மா என்ன ஆகிறது? எங்கு போகிறது? எப்போது மறுபிறப்பு எடுக்கிறது? இந்த கேள்விகளுக்கு உலகம் முழுவதும் மாறுபட்ட, முரண்பட்ட தகவல்களே பதில்களாக உள்ளன. ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை.

    ஆன்மா மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை செய்து வழிபடுகிறார்கள். உலகில் பெரும்பாலான மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பித்ரு வழிபாட்டை ஆதி தமிழர்கள் இறை வழிபாட்டுக்கு நிகராக கடை பிடித்தனர்.

    ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம் (15 நாட்கள்), வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என பல விதமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டு, மிக, மிக துல்லியமாக பித்ரு வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் நாள், ராசி, திதி ஆகியவை ஒன்று சேருவதை கணக்கிட்டு பூஜைகள், விரதங்களை மேற்கொண்டனர்.

    அவர்களது இத்தகைய துல்லியமான கணக்கீடுதான் அவர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பலன்களைப் பெற்று கொடுத்தது. அந்த வரிசையில்தான் ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும் மாதமாகிய புரட்டாசியில் மகாளய பட்ச அமாவாசை தர்ப்பண வழிபாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.

    மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருவதை கணக்கிட்டு பித்ருக்கள் பசியாற தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் பித்ரு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக மகாளய பட்சத்தின் சிறப்புப் பற்றி கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    அது மட்டுமின்றி ஸ்ரீமந் நாராயணனே, ராம அவதாரத்தின் போதும், கிருஷ்ண அவதாரத்தின் போதும் பித்ரு பூஜை செய்ததாக புராணங்களில் தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் இவற்றையெல்லாம் மறந்து விட்டோம். முந்தைய யுகங்களில் வாழ்ந்தவர்கள், மிக சரியான முறையின் பித்ரு வழிபாடுகளை செய்ததால், மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம். தற்போதைய கலியுகத்தில் அவை சாத்தியம் இல்லாமல் போய் விட்டது என்கிறார்கள்.

    என்றாலும் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.

    • முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
    • தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.

    தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது. காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

    ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம் எனவே பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

    அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.

    தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

    எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.

    முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அன்று இருட்டாக இருந்தாலும் கூட அது நல்லநாளாகவே கருதப் படுகிறது.

    • உங்க முன்னோர்களின் ஆசியும், வழிகாட்டலும் கிடைக்கும்..
    • குழந்தை தாமதத்தால் தவிப்பவர்களுக்கு இது நல்ல பரிகாரம் ஆகும்.

    இதுவரைக்கும் திதி தர்ப்பணம் எங்க குடும்பத்துல எங்க அப்பா,தாத்தா யாரும் கொடுத்தது இல்லை..எனக்கும் அப்படீன்னா என்னன்னே தெரியாது... எங்க முன்னோர்கள் யாரையும் நினைச்சு கோயிலுக்கு போய் திதி தர்ப்பணம் இதுவரை கொடுத்ததே இல்லை... என்பவர்கள் வரும் மகாளய பட்ச அமாவாசையில் உங்க முன்னோர்களை நினைச்சு திதி தர்ப்பணம் கொடுங்க.. உங்க பிள்ளைகள் எதிர்காலம் சிறக்கும்.. அவர்களுக்கு உங்க முன்னோர்களின் ஆசியும், வழிகாட்டலும் கிடைக்கும்..

    அமாவாசையில் பசுக்களுக்கு கோதுமை தவிடு 2கிலோ, வெல்லம், அகத்தி கீரை கலந்து ஊறவைத்த உணவை தரலாம்.. ஏழைகளுக்கு அன்னதானம்தரலாம்... ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோர்க்கு உதவிகள் செய்யலாம். இதனால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் தீரும்..

    உங்க முன்னோர்களின் ஆசியும், வழிகாட்டலும் கிடைக்கும்..இது முக்கியமான ஜோதிட பரிகாரம் ஆவதால் அஷ்டம சனி, ஏழரை சனி, முன்னோர் சாபம், பித்ரு சாபம், புத்திர தோசத்தால் குழந்தை தாமதத்தால் தவிப்பவர்களுக்கு இது நல்ல பரிகாரம் ஆகும்... காவிரி, அமிர்த நதி, காவிரி, பவானி மூன்று முக்கிய நதிகள் கூடும். பவானி கூடுதுறை அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் செய்வது மிக சிறப்பு.

    • புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
    • காவிரி கரையில் உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து சென்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடலில் காவிரி கலக்கும் சங்கமுக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த மூன்று அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதாவது ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

    மஹாளய அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வருகின்றனர். காவிரி கரையில் உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து சென்றனர்.

    • திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • திருராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித குளத்தில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது.

    முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி இன்று ஆடி அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட லட்சணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் காவிரி ஆறில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலில் சென்று வழிபட்டனர்.கும்பகோணத்தில் மகாமகக்குளம், பகவத்ப–டித்துறை, சக்கரப்படித்துறை ஆகிய இடங்களில் பூஜை பொருட்களை வைத்து வேத மந்திரங்களை சொல்லி முன்னோர்களையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திரு ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித குளத்தில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கடல் அதாவது சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் பொதுமக்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சீர்காழி,மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் இருந்து பூம்புகாருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் இன்று பலிகர்ம பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்துபோன தங்களின் முன்னோர்களுக்கு பச்சை, அரிசி, தேங்காய் காய்கறிகள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகளை வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து பின்னர் கடலில் புனித நீராடி வழிபட்டனர். பின்பு வேதாரண்யம் வேதாரண்யஸ்ர சுவாமி ஆலயத்தில் மணிகர்ணிகை திர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    ×