search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடி விரியன் பாம்பு"

    • வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர்.
    • வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ராசிபுரம் பிரிவு ரோட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சீட் பகுதியில் பாம்பு சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர். பாம்பை மீட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார். பின்னர் உயிருடன் பிடித்த பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இருசக்கர வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விவசாய நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புகாளை வட்டம், வடக்குப்பாட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் முரளி இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, முரளியை கடித்தது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூர் கிராமத்தை சேரந்தவர் வசந்தன். இவர் வீட்டில் நேற்று இதனை பார்த்த கண்ணாடி விரியன் பாம்பு திடிரென வீட்டிற்கு நுழைந்தது.

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞா.இரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் மீட்டு திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்று கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    • வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
    • பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக இருந்தது

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்ள புதரில் கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு பதுங்கி இருப்பதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து உள்ளனர். உடனே இது பற்றி கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் செல்வன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர் சிவா தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் புதருக்குள் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    அந்த பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் வனத்து றையினர் அந்த பாம்பை பாதுகாப்பான காட்டுப்ப குதியில் கொண்டு விட்டனர்.

    • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திருமலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது.
    • தீயணைப்புத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ளது வீர காளியம்மன் கோவில் தெரு. இப்பகுதியில் வசித்து வரும் வீர சின்னம்மா என்பவர் தனது வீட்டில் இன்று காலை சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு சமையல் கட்டில் இருந்து வெளிவந்தது. இதை பார்த்ததும் பதறி அடித்து வெளியே வந்த வீர சின்னம்மாள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பரண் மேல் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட சுமார் 4 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    ×