search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி"

    • நகர்ப்புறங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்த சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    • சபை கூட்டங்கள் ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும்.

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு 2-வது நாளாக இன்று பாளை தியாகராஜ நகரில் நடைபெற்றது.

    இதில் தலைமைகுழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் வரி வருவாயில் இருந்து 10 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்வது போதுமானதாக இல்லை. கேரளாவில் மாநில அரசின் வரி வருவாயில் 38 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்வதை போல தமிழகத்திலும் 30 சதவீதமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    அரசியல் சட்டத்திருத்தம் 74-ன் படி மாவட்ட அளவில் திட்டக்குழு அமைக்க வேண்டும். மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த குழு தமிழகத்தில் இல்லை. அதனை உடனடியாக அமைக்க வேண்டும். கிராமப்புற 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயர்மட்ட குழு அமைத்ததை போல நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் வழங்க வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்.

    நகர்ப்புறங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்த சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த சபை கூட்டங்கள் ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும். போராட்டங்கள் நடத்தக்கூடிய அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாநில அரசு பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் ரவி காரில் புறப்பட்டுச் சென்றார்.
    • கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து போலீசார் 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு வந்தார். அவர் இன்று காலை தனது மனைவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் ரவி காரில் புறப்பட்டுச் சென்றார்.

    ராஜபாளையத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திசிலை ரவுண்டானா பகுதியில் இன்று காலை மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடியுடன் திரண்டனர்.

    அவர்கள் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் உடனே களைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து போலீசார் 70-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாக இருந்தது.

    • மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது.
    • புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    ஊத்துக்குளி :

    வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சமத்துவமின்மை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ந்து மத்திய அரசின் தாக்குதலாலும், பாஜக. அல்லாத மாநிலங்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, தொடரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மார்ச் 27,28 ந்தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது. அதன்படி ஊத்துக்குளி தாலுகா, புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    எம்.தொட்டிபாளையம், தென்றல் நகர், சொட்டகவு ண்டம்பாளையம், ராஜீவ் நகர்,தெற்கு சாணார்பா ளையம், பல்லகவுண்ட ன்பாளையம் நால்ரோடு, கூனம்பட்டி, கூனம்பட்டிபுதூர் காலனி, ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், பாச்சாங்காட்டுபாளையம், சுக்காகவுண்டன்புதூர் கா லனி, செங்காளிபாளையம், சுண்டக்காம்பாளையம், எம்.ஜி.ஆர்.காலனி, தாளப்பதி, விருமாண்ட ம்பாளையம், செங்கப்பள்ளி வரை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    இதற்கு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வி.காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணியன் மற்றும் சிவராஜ், சந்திரமூர்த்தி, அர்ஜுனன், லிங்கப்பன், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேனி மாவட்ட செயலாளர் இளையராஜா என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் இளையராஜா தன்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக குணசேகரன் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது உறவினரான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
    • மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது,

    அவினாசி :

    கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது, தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவினாசி ஒன்றிய குழு சார்பில் மங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சி ஐ டி யு .விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகம், உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்தும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் கடுமையாக உயர்த்தியதை கண்டித்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்ததை கண்டித்தும், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கி, ஏழை மக்களின் மீது வரிச்சுமையை அதிகரித்த மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கோரிக்கைகளை விளக்கி இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் பிரவீன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மயிலாத்தாள், முருகசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரிசி மீதான ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்யக் கோரி தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா் சத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:- மத்திய அரசு அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.மேலும், உணவுப்பொருள்களின் மீதான ஜிஎஸ்டி. வரி உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

    ×