என் மலர்
நீங்கள் தேடியது "காதலன்"
- உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
- போலீசார் விரைந்து சென்ற , திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுவேதா (வயது 21), பி.காம். பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.
இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர்.
அதன்படி சுவேதாவுக்கும், வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா மகன் எம்.பி.ஏ. பட்டதாரி லோகநாதன் (27) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் பேசி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இருவருடைய திருமணம் நேற்று காலை நடைபெறவிருந்த நிலையில், காதலன் கவியரசனுக்கு சுவேதா செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.
உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
இதனால் காவல் துறையின் உதவி எண் 100-க்கு கவியரசன் தொடர்பு கொண்டு, தனது காதலிக்கு சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க உள்ளனர். எனவே உடனடியாக தடுத்து நிறுத்தி என்னையும், காதலியையும் சேர்த்து வையுங்கள் என தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து காவல் துறை கட்டுப்பாடு அறை மூலமாக வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம், விசாரித்தனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாழப்பாடி மகளிர் போலீசார், சுவேதாவை மீட்டு காதலன் கவியரசனுடன் சேர்த்து வைத்தனர். மேலும் பாதுகாப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மணமகன் தரப்பினர், திருமணம் நிறுத்தப்பட்டதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். திருமணத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம், என புகார் கொடுத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்தார்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது21). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.
பிரசாந்தும், செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து 2 வீட்டு பெற்றோரும், பிரசாந்த் மற்றும் இளம்பெண்ணின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். பெற்றோர் சம்மதத்தின் பேரில் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர்.
கடந்த 5-ந் தேதி பிரசாந்தின் காதலியான தன்யாவுக்கு பிறந்த நாள். காதலியின் பிறந்த நாளை கொண்டாடவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும் பிரசாந்த், கடந்த 4-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில், தன்யாவின் வீட்டிற்கு சென்றார். கேக்குடன் சென்று தன்யாவை வெளியே வரும்படி கூறி அழைத்தார்.
நள்ளிரவில் வந்து சத்தம் போட்டதால் தன்யாவின் பெற்றோர், பிரசாந்த்தை கண்டித்தனர். அப்போது அங்கிருந்த தன்யாவின் தாய்மாமாவான விக்னேசுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேசை கைது செய்தனர்.
இதற்கிடையே தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்தார். யாரிடமும் பேசாமல், தனி அறைக்குள் முடங்கி கிடந்தார். பெற்றோர் ஆறுதல் கூறியும் அவர் சமாதானம் அடையவில்லை.
காதலன் இறந்த துக்கத்தை எண்ணி நாள்தோறும் கவலையடைந்தார். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்த தன்யா திடீரென விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவரை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த பின்னரும், அவர் தனது காதலன் கொல்லப்பட்டதை நினைத்து வருந்தினார். இதனால் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
மகள் தொடர்ந்து மனவேதனையில் இருந்ததால், மீண்டும் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் அவரது பெற்றோர் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்தனர்.
அவர்கள் வெளியில் செல்ல வேண்டிய தேவை இருந்தால் தன்யாவுக்கு உதவியாக அவரது பாட்டியை வைத்து விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.
நேற்று தன்யாவின் தாய், தந்தை இருவரும் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர். மாணவி தனியாக இருப்பதால் அவருக்கு துணையாக அவரின் பாட்டியை வீட்டில் இருக்க சொல்லி விட்டு சென்றனர்.
வீட்டில் தன்யாவும், அவரது பாட்டியும் மட்டுமே இருந்தனர். தன்யாவுக்கு தனது காதலன் இல்லாத உலகத்தில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. அவன் சென்ற இடத்திற்கே சென்று விடுவது என நினைத்து தான் முதலில் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பெற்றோர் காப்பாற்றி விட்டனர். இதனால் மீண்டும் அவரது மனதில் தற்கொலை எண்ணம் தோன்றியது.
உடன் பாட்டி இருந்ததால், அவரை வெளியில் அனுப்ப முடிவு செய்த தன்யா, தனது பாட்டியிடம், தனக்கு வயிறு வலிப்பதாகவும், அதற்கு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி வா என்று தெரிவித்து, அவரை வெளியில் அனுப்பி வைத்தார்.
பாட்டியும் பேத்தி கூறியதை உண்மை என நம்பி மருந்து வாங்க கடைக்கு சென்றுவிட்டார். பாட்டி சென்ற பின்னர் தனது அறைக்குள் சென்ற தன்யா, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தன்யாவின் பாட்டி, மருந்து கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தன்யாவை காணவில்லை. இதனால் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியானார். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதனை பார்த்ததும் பாட்டி கதறி அழுதார். மேலும் தனது மகனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலன் கொல்லப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த இளம்பெண் முதல் முறை தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்த நிலையில், 2-வது முறையாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் செய்து வந்தனர்.
- பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடலை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது23). இவர் சென்னையில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் வசித்து வரும் சரவணன் மகன் வினோத் குமார்(27). இவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இருவரும் கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காதல் செய்து வந்த நிலையில் வினோத்குமார், பாக்கிய லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை தகாத உறவு வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாக்கியலட்சுமி கர்ப்பிணியானார். தற்போது 5மாத கர்ப்பிணியான பாக்கியலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி வினோத்குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். திரு மணம் செய்து கொள்வதை மறுத்த வினோத்குமார் கருவை கலைத்து விடு மாறு கூறியுள்ளார். பாக்கிய லட்சுமி அதனை மறுக்கவே தனது பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்ப தாக கூறியுள்ளார். மேலும் காதலன் வினோத் குமார்தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோத்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் வினோத்குமார், பாக்கியலட்சுமியை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வினோத்குமாரிடம் பாக்கியலட்சுமியை திரு மணம் செய்து கொள்ளு மாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்ற வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் உள்பட இருவீட்டார் சம்ம தத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
- பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
- அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் ஷாஜகான் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுக்கும் ஷாஜகானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த ஷாஜகான், காதலியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- இன்னொரு ஜோடியும் சிக்கியதால் பரபரப்பு
- பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் பள்ளி சீருடையை மாற்றிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் டிமிக்கி
நாகர்கோவில், ஜூன்.16-
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல தொடங்கினர். இதையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலையங்களில் காலை, மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலை பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இளம் பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் சுற்றித்திரிந்தார். போலீசார் அந்த ஜோடியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பிடிபட்ட வாலிபர் வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இளம்பெண் அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த பெண் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறினார்.
மேலும் வீட்டிலிருந்து இன்று காலை புறப்பட்டு பள்ளிக்கு செல்லாமல் பஸ் நிலையத்திற்கு வந்ததாகவும் பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் பள்ளி சீருடையை மாற்றிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்துவிட்டு மாற்று உடையில் காதலனுடன் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரியும் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு போலீஸ் பிடியில் இருந்த தனது மகளை தாயார் சரமாரியாக தாக்கினார். சகோதரியும் அவர் பங்குக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரையும் போலீசார் எச்சரித்தனர். இதே போல் இன்னொரு ஜோடியும் போலீசாரிடம் சிக்கியது. நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த போது போலீசார் அவர்களை பிடித்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் போலீசாரிடம் ரோந்து பணியின் போது காதல் ஜோடிகள் சிக்கினர். அந்த ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் நடமாட்டம் பஸ் நிலையத்தில் மட்டும் இன்றி நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.
- மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியை அவளது காதலன் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்து உதவுமாறும் காதலனிடம் மாணவி கேட்டிருக்கிறார். இதையடுத்து அவர், தனது நண்பர்கள் சிலரை சந்திக்குமாறு கூறி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
மாணவியும் காதலன் கட்டாயப்படுத்தியதன் காரணமாக, காதலனின் நண்பர்கள் 5பேரை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் மாணவியை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனால் அந்த மாணவி உடலளவில் பாதித்திருக்கிறார்.
அதனுடனேயே பள்ளிக்கு மாணவி சென்றுவந்தபடி இருந்திருக்கிறார். மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது. ஆனால் மாணவி பள்ளி நிர்வாகத்திடம் முதலில் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்பு தனதுகாதலன் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை தெரிவித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவியிடம் சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில் அந்த மாணவி, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆகவே அதுபற்றி சைல்டு லைன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6பேரிடமும், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
- பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள்.
அணைக்கட்டு:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.
கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.
இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.
வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலனுடன் மாயமாகி கர்ப்பிணியான பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது.
- வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கம்மாள் (வயது 18). இவர் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற வாலிபரை தீவிரமாக காதலித்து வந் தார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே மகளுக்கு திருமண ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்தனர். இதனை அறிந்த ஜக்கம்மாள் கடந்த 23.5.2023 அன்று காதலன் பிரவீன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே–றினார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு–பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதி–மன்றத்திலும் வழக்கு நிலு–வையில் இருந்தது. இதற்கி–டையே மாயமான ஜக்கம் மாள் 7 மாத கர்ப்பிணியா–னார். மேலும் கோர்ட்டில் நடந்த வழக்கில் காதலன் பிரவீன்குமார் விடுதலையா–னார்.கர்ப்பிணியாக இருந்த ஜக்கம்மாள் தனது பெற் றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி ஜக்கம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஓரிரு நாளில் அந்த குழந்தைக்கு மூச்சு, பேச்சு இல்லாமல் போனது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுதொடர்பாக ஜக்கம் மாள் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை ஒருவர் குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தாராம். நடிகை அழகில் மயங்கிய நடிகர்கள் பலர் நடிகைக்கு வலை விரித்தார்களாம். ஆனால், நடிகையோ யாரிடமும் சிக்காமல் தன் வேலையை மட்டும் பார்த்து வந்தாராம். இப்படி இருந்த நடிகை திடீரென தூர தேசத்தில் இருப்பவர் ஒருவரை காதலிக்கிறேன் என்றதும் வலை வீசிய நடிகர்களுக்கு எல்லாம் இதயம் நொறுங்கிவிட்டதாம்.
தன் காதலனுடன் ஊர் ஊராக சுற்றுப்பயணம் சென்ற நடிகை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாராம். குழந்தை பிறந்ததும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் பழைய காதலனை விட்டு விட்டு புதிய காதலனை தேடிக்கொண்டாராம். இப்போது அந்த காதலனுடன் தேசம் தேசமாக சுற்றி வருகிறாராம்.
- இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர்.
- காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெய்ஜிங்:
காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.
சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருவரும் 'லிப்லாக்' எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர்.
இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர்.
இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர்.
- பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 29-ந்தேதி பனிந்திரா தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்தார். அதன்படி இளம்பெண் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார்.
மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பண்ணை தேடி வந்தனர். பனிந்திரா தனது காதலியை அழைத்துக்கொண்டு கோபால பட்டினத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர். அந்த கடற்கரையில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்திற்கு கீழே பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. அதில் ராட்சத அலைகள் வந்து சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.
அதனை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் திடீரென தவறி கீழே விழுந்தார்.
உயரமான இடத்தில் இருந்து விழுந்த அவர் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். அலைகள் இருந்ததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. மேலும் அப்போது இருட்ட தொடங்கியது.
இதனால் பயந்து போன பனிந்திரா தனது காதலியை காப்பாற்ற எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தார். இரவு நேரமானதால் கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
பாறை இடுக்குகளில் சிக்கி விடிய விடிய தவித்தார். அதிகாலை நேரத்தில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டனர். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பெற்றோரை போலீசார் எச்சரித்தனர். கடலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் தவறி விழுந்து விட்டேன்.
இந்த சம்பவத்திற்கும் காதலன் பனிந்திராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இளம்பெண் உறுதியாக கூறினார்.
காதலியை தவிக்க விட்டு காப்பாற்றாமல் தப்பி ஓடிய காதலன் பனிந்திராவை செல்போனில் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
- வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவருக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த பெண், தனது கணவரை பிரிந்துசென்றார். அவர் தனது காதலன் சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண், 7 வயதான தனது இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன், பெண்ணின் இளைய மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் மூத்த மகள் தாய் மற்றும் சகோதரி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அவரிடம் தனக்கு நேர்ந்த விஷயங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிசுபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை நடந்துவந்த போதே, சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியின் தாய் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் அவருக்கு ரூ20ஆயிரம் அபராதமும் விதித்தார்.
40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் இரு மகள்களும் தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.