என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடி தேரோட்டம்"
- கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம் நாளை நடக்கிறது.
- முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அலங்காநல்லூர்
108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளுகிறார். அதன்பின் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திருத்தேர் புதிய வண்ண அலங்கார திரைச்சீலை அமைத்தல், திருத்தேர் சக்கரங்கள், குதிரை உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதல் பிரேக் ஆகியவை புதுப்பித் தல் பணி மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்றது. மேலும் தேரோட்டத்தை பக்தர்கள் காண ஆங்காங்கே அகன்ற திரைமூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவில் துணை ஆணையர் இராமசாமி மற்றும் உள்துறை அலு வலர்கள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணி களை துரிதப்படுத்தியும், பணியாளர்களுக்கு ஆலோ சனை வழங்கியும் வருகின்ற னர். ஆடி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- காரைக்குடியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் புறப்பட்ட வேலங்குடி கிராம மக்கள் நேற்று இரவு மேலூரை வந்தடைந்தனர்.
- மாட்டுவண்டியில் பயணம் செய்து தேரோட்டத்தில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்துவது திருப்தியை தருவதாக தெரிவித்தனர்.
மேலூர்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் அருகே உள்ள வேலங்குடி கிராமத்தினர் ஆண்டுதோறும் அழகர்கோவில் ஆடித்தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து கலந்துகொள்வது வழக்கம்.
2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பங்கேற்க முடியாமல் இருந்த இந்த தேரோட்ட நிகழ்ச்சி இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக நேற்று மாலை காரைக்குடியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் புறப்பட்ட வேலங்குடி கிராம மக்கள் நேற்று இரவு மேலூரை வந்தடைந்தனர். இன்று நள்ளிரவில் அழகர் கோவிலை சென்றடையும் இவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கோவிலில் தங்கி இருந்து தேரோட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். பின்னர் மாட்டு வண்டியிலேயே கிராமத்திற்கு திரும்புகின்றனர்.
தங்களிடம் கார், இருசக்கர வாகனங்கள் இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி முன்னோர்களின் வழக்கப்படி பழமை மாறாமல் மாட்டுவண்டியில் பயணம் செய்து தேரோட்டத்தில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்துவது திருப்தியை தருவதாக தெரிவித்தனர்.
துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற போதிலும் தேரோட்ட திருவிழாவில் கட்டாயம் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆண்டு வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட குழு இளைஞர்கள் இணைந்து ரூ.3 லட்சம் செலவில மாட்டு வண்டியை நவீன வசதிகளுடன் தயார் செய்து கொண்டு வந்திருந்தது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- தேரோட்டத்தை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- 4 ரத வீதி வழியாக அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழா நிகழ்ச்சியில் தினசரி சுவாமி-அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாகி 4 ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியான அம்மன் திருத்தேரோட்டம் இன்று காலையில் கோவிலில் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி கோவிலின் கீழ் ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த மரதேருக்கு வருகை தந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 4 ரத வீதி வழியாக அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்