search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
    • கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

    கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார்

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்.
    • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்துவார்.

    அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார்.

    • நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்
    • நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாடு அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது

    பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இன்று 140 கோடி மக்களாக இருக்கும் நாம் ஒன்றுபட்டால் 2047 க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கலாம்.

    இந்த ஆண்டும், கடந்த சில ஆண்டுகளாகவும் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்கள் நம்மை கவலை கொள்ள செய்கிறது. இயற்கைப் பேரிடரில் பலர் தங்கள் குடும்ப சொந்தங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர். தேசமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இன்று, அவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்

    ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. நாடு முழுவது் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதன் உற்பத்தியில் பெருமை கொள்ள தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தார்.

    • இது பிரதமர் மோடியின் 11-வது சுதந்திர தின உரையாகும்.
    • மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.

    இந்நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார். மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    • இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


    • பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தேசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ராணுவத்தின் மதிப்புமிக்க சொத்து.
    • வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாக நாம் ஒவ்வொரு கஷ்டத்துக்குப் பிறகும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறோம்.

    பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் சுதந்திர தின பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர், ராணுவத்தை பலவீனப்படுத்துவது அரசை பலவீனப்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் கூறுகையில் "எந்தவொரு சக்தியாலும் நாட்டை சீரழிக்க (குறைமதிப்பிற்கு உட்படுத்த) முடியாது. நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும், நாட்டை பலவீனப்படுத்துவதற்கு சமமாகும்.

    டிஜிட்டல் பயங்கரவாதத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் இடையே பிளவை உருவாக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகளுக்கு மத்தியில் தேசிய ஒற்றுமையை காப்பது முக்கியமானது.

    பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தேசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ராணுவத்தின் மதிப்புமிக்க சொத்து. எந்தவொரு எதிர்மறை சக்தியாலும் இந்த நம்பிக்கை மற்றும் அன்பின் உறவை பலவீனப்படுத்த முடியவில்லை அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடியாது.

    வரலாற்று ரீதியாக, ஒரு தேசமாக நாம் ஒவ்வொரு கஷ்டத்துக்குப் பிறகும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறோம். நாட்டிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. நமது படைகள் அதை உறுதியுடன் தொடர்ந்து பாதுகாக்கும்" என்றார்.

    • நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
    • டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

    இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோல முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சுதந்திரத்தினத்துக்கு முன்பு அல்லது அடுத்த நாள் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

    காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் பேசியதை இடைமறித்து கேட்ட உளவுத் துறையினர் இதுபற்றி மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லி அல்லது பஞ்சாபில் நாசவேலைக்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும்.
    • பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது.

    சென்னை:

    சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படும். அந்தவகையில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம்.

    ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. மேலும், தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாக செங்கோட்டையைச் சுற்றி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது
    • செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, 'விக்சித் பாரத்' என்ற சிந்தனையோடு கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. நாளை சுதந்திரதின விழா எப்படி நடைபெறுமோ அதைப்போல நேற்று விழா நடத்திப் பார்க்கப்பட்டது. இதில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முப்படை வீரர்களும் பங்கேற்றனர். மேலும் துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி. உள்ளிட்ட மாணவர் படையும் பங்கேற்றது.

    நிகழ்ச்சியையொட்டி தேசியக்கொடி ஏற்றி வணக்கம் தெரிவித்தனர். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மேலே பறந்து பூக்களை தூவப்பட்டது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் ஒருகட்டமாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகையும் நடத்தப்பட்டது.

    ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாக செங்கோட்டையைச் சுற்றி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. டெல்லி ஒத்திகை போல நாடு முழுவதும் முக்கிய அமைப்புகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஆகியோர் செங்கோட்டையின் வெளிப்புறப் பகுதிகளில் நிறுத்தப்படுகிறார்கள்.

    செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

    டெல்லி செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சுதந்திர தினவிழாவில் பல்வேறு தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி ஊழியர்கள், 'ஒன் ஸ்டாப்' மைய ஊழியர்கள், குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்கிறார்கள்.

    • தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • சென்னை முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் வருகிற 15-ந்தேதி 78-வது சுதந்திர தினவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினவிழா பேருரை ஆற்றுகிறார்.

    வீர-தீர செயல் புரிந்த வர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களையும் வழங்கு கிறார். இந்த விழாவுக்கு வருகை தரும், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்காக புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சுதந்திர தினவிழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இரவு-பகலாக இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலக பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    இதையொட்டி சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியும் கோட்டை கொத்தளத்தில் நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரை மோட்டார் சைக்கிள் புடைசூழ காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    வெள்ளை நிற போலீஸ் திறந்த ஜீப்பில் ஒருவரை நிறுத்தி அணிவகுப்புகளை பார்வையிடுவது போன்றும், குதிரைப்படை, கமாண்டோ படை, ஆயுதப்படை உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்றும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி கோட்டை கொத்தளத்தில் விருதுகள், பதக்கங்கள் வழங்குவது போன்றும் ஒத்திகை நடத்திப் பார்க்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுவார்.
    • சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதியான ரிஸ்வான் அலி என்பவர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ரிஸ்வான் அலி டெல்லியில் முக்கிய பிரமுகர்களின் வீடுகளை நோட்டமிட்டது தெரிய வந்ததையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    அதே நேரத்தில் மற்ற மாநிலங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் சுதந்திர தின பாதுகாப்பு பணிகளில் இப்போதே ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    சுதந்திர தினத்தையொட்டி ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேகத்துக்கிடமாக யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுவார். இதையொட்டி போலீஸ் அணிவகுப்பும் நடைபெறும். இதனால் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடல் வழியாக மர்ம நபர்கள் யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    • தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன.
    • சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர்.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 'ஹர்கர் திரங்கா எனப்படும் இல்லம்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ் மூவர்ண கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி https://harghartiranga.com என்ற இணையதளத்தில் தங்கள் சுய புகைப்படங்களைப் (செல்பி) பதிவேற்Independence Day, National Flag, சுதந்திர தினவிழா, தேசிய கொடிகள்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை எழுச்சியாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் தயாராகி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பட்டொளி வீசி பறக்க தேவையான தேசியக்கொடி தயாரிக்கும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன. தற்போது சுதந்திர தினத்திற்காக திருப்பூர், கோவையில் தேசியக்கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் மோகன் கூறியதாவது:-

    சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாட உள்ளது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரியவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி அளித்ததால் ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேசியக்கொடிகளை விற்பனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம். 9-ந்தேதி முதல் தேசியக்கொடிகளை ஏற்றலாம் என்பதால் ஆர்டர் பெற்ற தேசியக்கொடிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.

    பல பின்னலாடை நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தேசியக்கொடியை தைத்து வருகின்றன. 10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.25 முதல் ரூ.250 வரை தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×