என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ்"
- காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது.
- கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் திடீர் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பொங்கல் விழாவை நடத்தியது புதுவை தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகள் பேசினர். இதனால் காங்கிரஸ், தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் அஜோய்குமார், ஹரீஸ் சவுத்ரி ஆகியோர் புதுவைக்கு வந்தனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளோடு அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என தி.மு.க.வுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினர். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இம்முறை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் அமோக வெற்றி பெற அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
2 நாட்கள் முன்பு தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கத்தையும், என்னையும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்து, கூட்டணி தத்துவத்தை மீறியுள்ளனர்.
காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. தி.மு.க. தலைவர்கள் இந்தியா கூட்டணியில், மதச்சார்பற்ற கூட்டணியில் பல போராட்டங்களை இணைந்து நடத்தியுள்ளோம்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசையும், அவர்களின் ஊழலையும், மத்திய மோடி அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற தேர்தல் நேரம். நானும், வைத்திலிங்கமும், முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோம்.
மத ஒற்றுமை, மோடி அரசால் சிறுபான்மையினர் தாக்கப்படுவது, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியின் ஊழல், மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை விளக்கினோம்.
அந்த கூட்டத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான நேரு கலந்து கொண்டார். அவர் எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. நாங்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியைத்தான் விமர்சித்தோம். இதுதான் அங்கு நடந்தது. இதற்காக தி.மு.க. தலைவர்கள் எங்களை ஒருமையில் பேசி, விமர்சித்து, மக்கள் மத்தியில் எங்களுக்கு கெட்டபெயர் உருவாக்க சிலர் திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளனர்.
நாங்கள் எந்த காலத்திலும் கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. கூட்டணி தர்மத்தை மீறியது தி.மு.க.தான்.
வில்லியனூர் தொகுதியில் ஷாஜகான் காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்தார். அவரை தி.மு.க.வில் சேர்த்தது யார்? மணவெளி தொகுதி காங்கிரஸ் செயல்தலைவர் சண்முகத்தை தி.மு.க.வில் இணைத்தது யார்? கூட்டணி தர்மத்தை மீறி இவர்கள் செயல்பட்டு விட்டு, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது.
வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்ய உரிமை உண்டு, கட்சியை வளர்க்க உரிமை உண்டு. தங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க உரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தவறாக விமர்சித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
முதலில் நாம் நம் நடவடிக்கையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க மாட்டோம். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளது. கூட்டணியில் தி.மு.க. குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.
சீட் ஒதுக்கீடு செய்வது கூட்டணி கட்சித் தலைவர்கள்தான். கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, 'இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவர் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வர். யாரை சொன்னாலும் அவர்களுக்கு வேலை செய்வோம்' என்றார். முதுகில் குத்தும் காங்கிரஸ் என தி.மு.க., கடுமையாக விமர்சனம் செய்துள்ளதே என அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அதை நாங்கள் நேரடியாக கேட்கவில்லை. எனவே அதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் காதில் அப்படிப்பட்ட விமர்சனம் விழவில்லை என்றார்.
- இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை.
- கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க எல்லோரும் ஒன்றுபட்டு பா.ஜனதாவை வீழ்த்துவோம். எல்லா கட்சிகளுக்கும் கூடுதல் சீட்டுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம். கண்டிப்பாக கூடுதல் தொகுதிகளை தி.மு.க. தலைமையிடம் கேட்போம். தேர்தலில் தி.மு.க. எந்த நிதியும் எங்களுக்கு தந்தது கிடையாது. நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க. வினரின் செலவுக்கு தேவைப்படும் நிதியை வாங்கி தி.மு.க.வினரிடமே கொடுத்து விட்டோம். இந்த முறையும் அப்படித்தான். அவர்களிடம் நிதி வாங்கி நாங்கள் தேர்தல் செலவுக்கு பயன்படுத்த மாட்டோம் என்றார்.
- இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது.
- காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது. அதற்கு துணை போகும் வகையில் சில கட்சிகளும் ராகுலை பிரதமராக ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும். அதை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை. காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும். அகில இந்திய கட்சியாக இருந்து கொண்டு மாநிலக் கட்சிகள் வளர காங்கிரஸ் துணைபோக கூடாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்
- காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளார்.
இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலை முன்பு 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகம் வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மாநில இணைச்செயலாளர் கமலா கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டபோதும் எங்களை அவமதிக்கும் நோக்கில் மாநில தலைவரும், கிழக்கு மாவட்ட தலைவரும் ஈடுபட்டு வருகிறார்கள். பாராளுமன்ற தொகுதிக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்று உள்ளது.
மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் எந்த ஒரு ஆலோசனைகளையும் பெறாமல் இதுபோன்ற சம்பவங்களில் கிழக்கு மாவட்ட தலைவர் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.
எனவே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது.
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் வாட்ஸ்-அப் குரூப்பில் நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர் திசையன்விளை கூட்டத்திற்கு கே.எஸ். அழகிரி வரும்போது வெடிகுண்டு வெடிக்கும் என்று பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் உள்வாய் சாத்தான்குளத்தை சேர்ந்த நிர்வாகி அம்புரோஸ் என்பவர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
- பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை:
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு.
மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றப்படாலாம்.
அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.
நான் மீண்டும் திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்புகிறேன்.
நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோனதை தடுத்து இருப்பேன்.
பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
5 மாநில தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன், சூர்யா பழனியப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- எனக்கு... உனக்கு... என்று மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் பலர்.
- டெல்லி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு போட்டி போடுகிறார்களோ இல்லையோ கட்சியில் பதவிக்கு போட்டி போடுவதில் முன்னணியில் நிற்பது தமிழக காங்கிரஸ் கட்சி.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைவர்கள் திட்டமிட்டதுதான் உண்டு.
எனக்கு... உனக்கு... என்று மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் பலர். யாரை நியமிப்பது என்று முடிவெடுக்க முடியாத நிலையில் டெல்லி தலைவர்கள் தமிழக தலைகளிடம் ஆலோசனை கேட்போமே என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
அழைத்து கேட்டவர்கள் எல்லோருமே தனக்கு அந்த பதவியை தர வேண்டும் என்பதையே முதல் கோரிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இவர்களிடம் போய் ஆலோசனை கேட்டோமே என்று டெல்லி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.
- டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.
- கே.எஸ்.அழகிரியோ எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே கடினம். வரப்பில் ஏறும் நண்டை மற்ற நண்டு இழுத்து தள்ளுவது போல்தான் கோஷ்டி பூசல் நிகழும்.
ஆனால் கே.எஸ்.அழகிரியின் அதிர்ஷ்டம் 4 ஆண்டுகளை கடந்தும் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய தலைவர் நியமனம் பற்றி விவாதம் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
தற்போது பாராளுமன்ற கூட்டம் முடிந்துவிட்டதால் அடுத்தக்கட்டமாக கட்சி மேலிடம் கட்சி பணிகளை கையில் எடுக்கும். எனவே விரைவில் கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்ற தகவலை வைரலாக்கி வருகிறார்கள்.
ஆனால் கே.எஸ்.அழகிரியோ எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. களத்தில் நிற்கும் வரை கிடைக்கும் பந்துகளை அடித்து ஆடுவது என்ற பாணியில் தீவிரமாக உள்ளார்.
வட்டார தலைவர்கள் மாநாடு விரைவில் நடத்தவிருப்பதால் வட்டாரங்களை பிரிக்காதவர்கள் பிரித்து வருகிற 14-ந்தேதி தன்னிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். இதை நிறுத்தி வைக்க டெல்லி சென்று போராடி இருக்கிறார்கள் எதிரணியினர். ஆனால் டெல்லி மேலிடத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காததால் ஆட்டத்தில் தீவிரமாக இருக்கிறார் அழகிரி. 'நான் தலைவராக இருக்கிறேன். எனது பணியை நான் செய்கிறேன்' என்கிறார் கூலாக.
- தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி செல்கிறார்கள்.
நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை, 8 எம்.பி.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலில் வெற்றி பெறவும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக உழைக்க டெல்லி மேலிடம் அறிவுரைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதற்கிடையில் ஒன்றிரண்டு முறை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.
எனவே நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர்களை வருகிற 4-ந்தேதி டெல்லிக்கு வரும்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே அழைத்துள்ளார்.
மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, 8 எம்.பி.க்கள் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இவர்களுடன் டெல்லியில் அகில இந்திய தலைவர் கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம், கட்சி செயல்பாடு, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் கடிதங்கள், தலைவர் பதவிக்கான காய் நகர்த்தல்களிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- பி.பி.எல். அடையாள அட்டை இருந்தால் தான் வேலை வழங்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டத்தில் அத்தகைய நடைமுறை கையாளப்படுவதில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அடையாளஅட்டை வழங்குவதில் பல விதிமுறைகளை பா.ஜ.க. அரசு புகுத்தியிருக்கிறது. இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிற பி.பி.எல். அடையாள அட்டை இருந்தால் தான் வேலை வழங்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டத்தில் அத்தகைய நடைமுறை கையாளப்படுவதில்லை. அதேபோல, 100 நாள் வேலை திட்டத்திலும் பி.பி.எல். அட்டை இருப்பவர்களுக்கு தான் வேலை என்று இதுவரை நிர்ப்பந்தம் செய்ததில்லை. ஆனால், சமீபத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதித்துள்ள நிபந்தனையின்படி 100 நாள் வேலை திட்டத்திற்கு பி.பி.எல். அட்டை கட்டாயம் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கிராமப்புற தொழிலாளர்களிடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதற்கான பி.பி.எல். அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக காங்கிரசை திறம்பட நடத்தி வரும் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு உண்மை காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் பக்க பலமாக இருப்போம்.
- விஷமிகள் தலைவரை இன்று மாற்றி விடுவார்கள் நாளை மறுநாள் மாற்றி விடுவார்கள் என்று அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று நாலரை ஆண்டு காலத்தில் சட்ட மன்றத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை கட்சிக்கு பெற்று தந்திருக்கிறார்.
அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினர் டெல்லியை நோக்கி படையெடுத்துக் கொண்டு உள்ளனர் இவர்களுக்கு எல்லாம் நான் கேட்கும் ஒரே கேள்வி என்ன வென்றால் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாரையும் நசுக்கி வருகின்றது அதானிக்கும் அம்பானிக்கும் பொது மக்கள் பணத்தை தாரை வார்த்து கொடுத்தார்கள் என்று பாராளுமன்றத்தில் முறையாக கேள்வி கேட்டு பாராளுமன்றத்தை முடக்கிய நேரத்தில் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து அவர் வாழும் வீட்டை பறித்து வீதிக்கு அனுப்பினார்கள்.
அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது இந்த சூழ்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பி.ஜே.பி. அரசை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் விஷமிகள் தலைவரை இன்று மாற்றி விடுவார்கள் நாளை மறுநாள் மாற்றி விடுவார்கள் என்று அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக காங்கிரசை திறம்பட நடத்தி வரும் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு உண்மை காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் பக்க பலமாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்