search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவல்"

    • தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.
    • நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் பொங்கல்(சங்கராந்தி) பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

    இதில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்த பந்தயங்களுக்கென்று இப்பகுதிகளில் சேவல்கள் தனித்துவமான முறையில் வளர்க்கப்படுகின்றன.

    அவற்றுக்கு தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களைப் பார்த்து ஆந்திராவில் வளர்க்கப்படும் பந்தய சேவல்களை வாங்க தாய்லாந்தில் இருந்து 4 பேர் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு பகுதிக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் அனைவரும் ரங்காபுரம் என்னும் ஊரில் பந்தய சேவல்களை வளர்க்கும் ரத்தைய்யா என்பவரை சந்தித்து ரூ.3 லட்சம் கொடுத்து பந்தய சேவல்களை தங்களது நாட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

    இதைப் பார்த்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் என்னிடம் வந்து ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்ற சேவலை விலைக்கு கேட்டனர்.

    அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் ரூ.3 லட்சம் கொடுத்து மற்றொரு பந்தய சேவலை அவர்கள் வாங்கிச் சென்றனர் என்றார்.

    • சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையர் பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), சூரமங்கலம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி (44), சுபாஷ் (30), பிரபு (33),ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 11 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான்.

    தெலுங்கானா மாநிலம் மகபூப நகர் மாவட்டத்தில் உள்ள பூரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சேவல் ஒன்றை கையில் பிடித்து சென்றான். அந்த சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான். அதே நேரம் அந்த சேவல் யாருடையது என தெரியாததால் போலீசார் அதை பாதுகாப்பதற்காக முடிவு செய்து சேவலை போலீஸ் நிலைய சிறையிலேயே அடைத்து வைத்து அதற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தனர்.

    இந்த செய்தி அப்பகுதியில் பரவ தொடங்கியதும் மக்கள் பலரும் போலீஸ் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை பார்த்து வருகிறார்கள்.

    • காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பவானியை சேர்ந்த சுரேஷ்(வயது 38,), ஈரோட்டை சேர்ந்த பாஸ்கரன்( 48,) கனகராஜ்( 28,) குப்பாண்டபாளை யத்தை சேர்ந்த சவுந்தர்( 27,) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல்.
    • வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்று போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சுந்தரபெருமாள் கோவில் மணவாளம்பேட்டை தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் ஆதிகேசவன் (வயது 19), சுந்தர பெருமாள் கோவில் வெள்ளாளர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (19) ஆகிய 2 பேரும் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதன் பேரில் சேவல் சண்டை நடத்திய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4 ஆயிரம் மதிப்பிலுள்ள சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி. சப்-இன்ஸ்பெக்டர். மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்திய அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோகுல்(வயது 23), ராஜகோபால்(26), பவானி, இளங்கோவன்(43), ஈரோடு எலக்ட்ரீசியன் தினேஷ்(29), ஈரோடு நிதி நிறுவன அதிபர் உதயன்(32), ஈரோடு, போட்டோ கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன்(28) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கம் கெடுகிறது.
    • அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என டாக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.

    போபால்:

    இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது:

    எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

    அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என சஞ்சய் சிங் தெரிவித்தார்.

    • பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவயிடம் விரைந்து சென்றுள்ளனர். அப்போது பவானி வடக்கு பள்ளி வீதியை சேர்ந்த செந்தில் (47), பாலக்கரை வீதியை சேர்ந்த கோகுல் (20), ஒருச்சேரிபுதூரை சேர்ந்த கதிர்வேல் (47) பவானி காவேரி வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 4 பேர் வெள்ளை கலரில் 2 சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    • பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கால் நடை வளர்ப்புப் பகுதியில் பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பெருந்துறை சப்- இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகாமியின் மகன் தினேஷ்குமார் (30) மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    மேலும், சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 8 சேவல்கள், சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்திகள் 21 மற்றும் சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    ×