search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 252918"

    • அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயி கள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தக்கலை, அருமநல்லூர், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது.

    அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 50 கன அடியாக குறைக்கப்பட் டுள்ளது. பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களிலும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தேவை யான அளவு தண்ணீரை வெளியேற்றவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.62 அடி யாக இருந்தது. அணைக்கு 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக இருந்தது. அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    டிரைவர் உள்பட 2 பேர் கைது

    நாகர்கோவில், மார்ச்.14-

    குமரி மாவட்டம் வழியாக கேரளா வுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய் துறை அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையிலான போலீசார் இன்று காலை இருளப்பபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்கவில்லை. வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனம் மூலமாக டெம்போவை துரத்தி சென்று பீச்ரோடு சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்தனர். டெம்போவை போலீஸ் மடக்கியதும் டெம்போவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். எனினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    இதைத் தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 2,100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் டெம்போ டிரைவரான கோட்டாரை சேர்ந்த தளபதி (வயது 52) என்பவரையும், தப்பி செல்ல முயன்ற கிளினரான பன்னீர் செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ரேஷன் அரிசியை டெம்போவோடு சேர்த்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை மஜீத் வீதியை சேர்ந்தவர் சலீம். இவர் பெருந்துறை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பேகம் (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஈரோட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக சலீம் மற்றம் பேகம் இருவரும் ஈரோடு சென்று விட்டு பின்னர் பெருந்துறை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.

    பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார். உடனடியாக சலீம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டம் உத்சுகி பகுதியை சேர்ந்தவர் சோட்டுபுனியா (30). இவர் ஈேராடு மாவட்டம் பெருந்துறை அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் சுகான்புனியா கொடுத்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×