என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணல் திட்டு"
- குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது.
- விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.
குளச்சல்:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.
தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.
இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.
- மணல் திட்டில் ஏறி மீன் பிடிக்க சென்ற நிலையில் எதிர்பாராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.
- உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதகுசாலை கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த மாதம் 18-ம் தேதி இரவு, கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டில் ஏறி, மீன் பிடிக்க சென்ற நிலையில்,எதிர்பா ராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.
இதில் கொளஞ்சிநாதன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற ஆகாஷ், மனோஜ் ,ராஜேஷ் ஆகிய 3 பேரும் பலியாகினர். இந்நிலையில், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா .அருள்மொழி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம. க. ஸ்டாலின் மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க நிர்வாகிகளுடன் இணைந்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது அவர்கள் கூறும்போது:- உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தகுதியான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். 15-ம் தேதிக்குள் இது குறித்து அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால், வன்னியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்