என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருக்குறள்"
- 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
- திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் 6-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லியில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை சுத்தமல்லி பங்கில் 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோல் இலவசமாகவும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோல் இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதையடுத்து சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் அங்கு திரண்டு வந்து திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சார்பில் ரூ.100-க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் செய்திருந்தார்.
உலக பொதுமறையை கற்றுக் கொடுக்கும் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இலக்கியவாதிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.
- எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்க வேண்டும்.
- தமிழர்களுக்கு திருக்குறள் தான் வேதம். அந்த போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து பாருங்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலன் ஓட்டல் வளாகத்தில் புத்தக கண்காட்சி நடக்கிறது.இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 'புத்தகம் எனும் போதிமரம்' என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசியதாவது:- இந்த வினாடியை அனுபவிக்க யாருக்கும் தெரிவதில்லை. அனைத்தையும் ஆவணப்படுத்தி வைக்க நினைக்கிறோம்.
நினைவு அலைகளை விட, ஆவண அலைகள் பெரிது கிடையாது. எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்க வேண்டும்.
புத்தகம் வாசிப்பு என்பது ஒரு அற்புதமான கலை. அது ஒரு பொழுதுபோக்கு கிடையாது. புத்தகம் ஒரு மோதிமரம். புத்தகங்களை இளைஞர்கள் மத்தியில் கடத்தும் காலகட்டத்தில் உள்ளோம். மரங்களில் உள்ள ஒவ்வொரு வித்தியாசங்களை போன்று ஒரு புத்தகத்தை வாசிக்க, வாசிக்கத்தான் அதன் அருமையை உணர முடியும்.ஒரு புத்தகத்தை எடுத்தால் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டும். வெறும் சொல், கருத்து ஏற்றினால் அது மந்திரம். தமிழர்களின் வரலாறு தமிழ் தான். மொழி தான் வரலாறு. தமிழர்களுக்கு திருக்குறள் தான் வேதம். அந்த போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்
- அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்.
புதுடெல்லி:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். திருக்குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
- முழுமையாக குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் அரசு சான்றிதழ்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசின் மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
2022-23-ம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளிடம் இருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறல் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
திருக்குறளின் அடைமொழிகள், சிறப்பு பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யபெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர்.
1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
ஏற்கனவே இந்த பரிசை பெற்றவர்கள் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்க கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் இயங்கும் தமிழர் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் tamilvalarchithurai. tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு 04362-271530 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருப்பூர் :
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறனுள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10ஆயிரம் பரிசு தொகை மற்றும்பாராட்டுச்சான்று வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு (2022 - 23) திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நேரடியாகவோ, https://tamilvalarchithurai.tn.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 31ந்தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகம், அறை எண் 608, 6வது தளம், கலெக்டர் அலுவலகம் திருப்பூர் என்கிற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். ddtamil.607@gmail.com என்கிற முகவரிக்கு இ-மெயிலிலும் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971183 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், உரை ஆசிரியர் விவரங்கள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள திறனாய்வுக்குழு முன்னிலையில் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே பங்கேற்று பரிசு பெற்றோர் மீண்டும் பங்கேற்க முடியாது.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்,
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ- மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்குறம் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கொள்ளப்பெறும்.
திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிகுழுவின் முன்னி லையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும்.
ஏற்கனவே முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டு்ம் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோ தலுக்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalar chithurai.com என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 04575-241487 (99522 80798) என்ற தொலைபேசி எண்ணி்ல் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ மாணவியர் வருகிற 25-ந் தேதிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை 630 561.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்
- 196 நாடுகளின் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவணம் செய்ய வேண்டும்
கரூர் :
உலகத்துக்கே கல்வி நூலாக திகழும் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சென்னை குறள் மலை சங்கம் மற்றும் கரூர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியோடு இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து கரூர் வள்ளுவர் கல்வி குழும தாளாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
உலக பொதுமுறையாக விளங்கும் திருக்குறளை மலைக் கல் வெட்டில் பதித்து திருக்குறளைமாமலை உருவாக்குவதும், உலகத்து–க்கு முக்காலத்திற்கு பொருந்தும் வகையில் எழுத–ப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும் எனவும், திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாடுகளில் இருந்து 196 நாடுகளின் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவணம் செய்ய வேண்டும் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நோக்கங்களுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பயனாக கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இனிவரும் காலங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் குரல் மலை சங்கம் நடத்தும் அனைத்துக் கூட்டங்கள், கருத்தரங்கள், மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்கும் வாய்ப்புகளை பெறுவதோடு குறல் மலை சங்கம் வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
முக்கியமாக இச்சங்கத்தின் உறுப்பினராகவும் வாய்ப்பையும் இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெறுவார்கள். வள்ளுவர் கல்லூரியில் குறள் மலை சங்கத்தின் மூலம் நடத்தப்படும் கூட்டங்கள், கருத்தரங்குகள் மாநாடுகள் ஆகியவற்றை தலைமை ஏற்று நடத்துவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொழியியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் மாணவர்கள் நேர்மையான வாழ்க்கை திறன் மேம்படுவதோடு, இனிவரும் சமுதாய வளர்ச்சிக்கு நேர்மையான சிந்தனை கொண்ட அற்புத மனிதரை உருவாக்கும் வாய்ப்பு இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்படும் என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்