என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உணவகம்"
- தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.
- தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்றது.
தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும், தலைஞாயிறு பேரூராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், ஒன்றிய குழுதலைவர் தமிழரசி, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆருர் மணிவண்ணன், கற்பகம் நீலமேகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் அன்பரசு, ஜெய்சங்கர், பாரிபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா, இளைஞர் அணி விக்னேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
- இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது. இருந்தாலும் உணவகம் அதே இடத்தில் செயல்பட்டு வந்தது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் காலை, மதியம் சாப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென மேற்கூரை (பால் சீலிங்) கீழே சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் அதிர்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டன.
- 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உடுமலை :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், கோடீஸ்வரன், பாலமுருகன், சிரஞ்சீவி, ரகுநாத் ஆகியோர் உடுமலையில் கல்பனா ரோடு, பழனி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் பேக்கரிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்த பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கெட்டுப்போன சாயம் ஏற்றப்பட்ட 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட ஒரு உணவகம் ,இரண்டு பேக்கரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு பயோடீசல் தயார் செய்வதற்காக உரிய விலைக்கு வழங்க வேண்டும்.
சமையல் எண்ணெயை, சில்லறை விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பில் புத்தகத்தில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அச்சிட்ட பேப்பரை உணவுகளை மடித்து கொடுக்கும்போது சூடான உணவுப் பொருளில் அதில் உள்ள கெமிக்கல் கலந்து வயிறு தொடர்புடைய பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதே பிளாஸ்டிக் மூலப்பொருள் உருகி மனித உடலில் கலந்து கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளன. எனவே அவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தனர்.
- உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
- தரமற்ற உணவு தயாரித்ததால் அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் அங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உணவருந்த வசதியாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.மேலும் தனியார் மூலமாகவும் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவருந்திய 4 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் உணவகத்தை சீல் வைத்து மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மாநகர நகர்நல அதிகாரி பொறுப்பு ஜான் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ஆல்ரின்,வருவாய் உதவியாளர் முருகன் ஆகியோர் இன்று காலை அந்த உணவகத்திற்கு சென்றனர்.
அங்கு மதியம் உணவு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த உணவை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு தயார் செய்த உணவுகள் அனைத்தையும் மாநகராட்சி வண்டியில் ஏற்றினார்கள். பின்னர் அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உணவகம் சீல் வைக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் உணவகத்தில் உள்ள உணவு கூடம் மிக மோசமாக இருந்தது.
மேலும் இங்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டபோது தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்