search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள்"

    • அரியலூர் மாவட்டத்தில் 314 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி

    அரியலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 314 சிலைகள் பிரஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா.பழூர்திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் உள்ளிட்ட 314 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீடுகளிலும்,விநாயகர் சிலைகள் வைத்து, அவல், பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர்.

    அரியலூர் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    இந்த ஆண்டு 3 முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    கீற்று கொட்டகையை தவிர்த்து தகரத்தால் ஆன தகடுகள் அமைத்த கொட்டகையில் தான் சிலைகள் வைக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்ததந்த பகுதி இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.
    • இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர் உள்ளிட்ட தாலுகா பகுதியில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டன.

    இதில் இந்து அமைப்புகள் சார்பில் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளன. இது தவிர பொதுமக்கள் சார்பில் தனியாக 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க போலீ சார் அனுமதி அளித்து ள்ளனர்.

    விநாயகர் சிலைகள் கரைக்கும் போது, அசம்பா விதங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சப்-டிவிசன்களிலும் போலீசார் கடந்த ஒருவாரகாலமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் 1500 போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.

    இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் அந்தந்த நீர் நிலை களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது. இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகளைவெடிக்க க்கூடாது. கோஷங்களை எழுப்ப கூடாது. பூஜைக்காக பொது இடங்களில் வைக்க ப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அனுமதி க்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

    பிற மதத்தினர் ஆலயங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது போலீசாரின் வழிகாட்டு தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோ போன்றவற்றில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மினி லாரி, டிராக்டர் ஆகியவ ற்றிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து கரைத்து விட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர் ஜனப்ப சத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர் பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன.

    இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.

    அப்போது விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் தடுப்பு அமைப்பு ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக, மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

    டி.எஸ்.பி. சாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கரூரில் 160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது
    • இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம், முழுவதும் இந்து முன்னணி சார்பில், 160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கரூரில் இன்று மாலை, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டு, காவிரியாற்றில் கரைக்கப்படுகிறது.

    நாடு முழுவதும் நேற்று, விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கரூர் மாவட்டத்தில், இந்து முன்னணி சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, அர வக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், விநாயகர் 160 சிலைகள் சிறப்பு பூஜைகளுடன், பிர திஷ்டை செய்யப்பட்டன.

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன் நேற்று அதிகாலை, 10 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய் யப்பட்டது. அப்போது, பக்தர்கள் வழிப்பட்டனர்.

    கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று மாலை, ஆறு மணிக்கு, 80 அடி சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. பிறகு, அங்கிருந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் கரைக்கப்பட உள்ளது. அதே போல், க.பரமத்தி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள், அமராவதி ஆற்றிலும் இன்று மாலை கரைக்கப்படுகிறது.

    அதேபோல், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, குளித்தலையில் நாளையும், சின்ன தாராபுரத்தில் வரும், 3ம் தேதி விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகின்றன.

    • இன்று முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பொதுமக்களே கடற்கரைக்கு வந்து விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்றனர்.
    • நாளை (வெள்ளி) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க அதிக அளவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து பூஜை செய்தனர்.

    இந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராம கிருஷ்ணாநகர் இடங்களில் பொதுமக்கள் எடுத்து வந்தனர். அங்கு சிறிது நேரம் பூஜை செய்து கடல் தண்ணீரில் கரைத்தனர்.

    இன்று முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பொதுமக்களே கடற்கரைக்கு வந்து விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்றனர்.

    நாளை (வெள்ளி) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க அதிக அளவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மணலி, வில்லிவாக்கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், விசாயர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம், கொளத்தூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கே.கே.நகர், மேடவாக்கம், பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளன.

    • 27 காவல் நிலைய எல்லைக்கு உட்பட சுமாா் 655 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
    • உரிய அனுமதி கோரி இதுவரை 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் நாளை மறுநாள்(புதன்கிழமை) விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 27 காவல் நிலைய எல்லைக்கு உட்பட சுமாா் 655 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. உரிய அனுமதி கோரி இதுவரை 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இன்னும் 2 நாட்கள் உள்ளதால் சிலைகள் வைக்க அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பீடத்துடன் சோ்த்து 10 அடி உயரத்துக்கு உட்பட சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கடந்த முறை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 655 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டன. நிகழாண்டிலும் அதே எண்ணிக்கையில் வைக்க அனுமதி வழங்கப்படும். பிரச்சினை இல்லாத பகுதியாக இருந்தால் கூடுதல் அனுமதி வழங்கப்படும் என்றாா்.

    • கருட விநாயகர் என 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடி என 5 வகையில் தயாராகி உள்ளது.
    • மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர்:

    வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக திருப்பூரில் சில இடங்களில் மும்முரமாக நடந்து வந்தது. சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளதையடுத்து அந்தந்த பகுதிகளுக்கு லாரிகள் , வாகனங்கள் மூலம் சிலைகள் அனுப்பப்பட்டு வருகிறது.வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில் அனுமன் தூக்கி செல்வது போல், ரத விநாயகர், சிம்மவாகனம் விநாயகர், யானை வாகனம், ஆஞ்சநேயர் விநாயகர், கருட விநாயகர் என 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடி என 5 வகையில் தயாராகி உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இதில் திருப்பூரில் 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளது.கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ளதால் பிரம்மாண்டமாக நடத்த இந்து முன்னணியினர் திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பூரில் செப்டம்பர் 3-ந் தேதி விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. மேலும் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்பில் இந்து முன்னணியினர் கொண்டாடுகின்றனர்.

    இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள இடங்கள், விஜர்சனம் ஊர்வலம் நடக்கும் ரோடு உள்ளிட்டவற்றை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சில நாட்களுக்கு முன் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து அமைப்புகளுக்கு பல்வேறு அறிவுரை தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பான முறையில் சிலைகளை வைக்க வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உட்பட முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் நடப்பதால் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக மற்ற மாவட்டத்தை சேர்ந்த போலீசாரை பணிக்கு அழைக்க உள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை உள்ளிட்டவை முடிவு செய்யப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.  

    • பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
    • விதிமுறைகளை மீறி கூடுதல் சிலைகளை வைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    கோவை 

    கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பாக இன்று இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். விசர்ஜன ஊர்வலத்தின்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காதவாறு செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறி கூடுதல் சிலைகளை வைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

    • விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

    கோவை

    விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களி மண்ணால் செய்யப்பட்டது, பிளாஸ்டா் ஆப் பாரிஸ், தொ்மாகோல் போன்ற கலவையில் தயாரிக்கப்பட்ட சிலைகளை தவிர சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

    சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுா்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள்
    • மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.இதையடுத்து இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள். வீடுகளிலும், பொது இடங்களிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் 30-ந் தேதி சில இந்து அமைப்புகள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். மேலும் 31-ந் தேதி காலையிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் செய்யவும் இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்து உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் அடுத்த மாதம் 2,3,4-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கன்னியா குமரி, சொத்தவிளை, சின்னவிளை சங்குதுறை, பள்ளிக்கோணம், வெட்டுமடை, மிடாலம், தேங்காப்பட்ட ணம், கடற்கரை பகுதிகளிலும் திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது.

    விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு ஊர்வலங்கள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிதாக இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லும்போது அதற்கென ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.அடுத்தவர் மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர். ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 2000 போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • பாம்பா ர்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித தூள், சொறி மரங்களின் விதைகள் மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் வடிவமை ப்பாளர்கள் தெரிவித்துள்ள னர்.

    கொடைக்கானல்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொடைக்கா னலில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை களை கோயில்களில் வைத்து வழிபட்டு மேலும் 4-ஆம் தேதி கொடை க்கானல் ஏரிச்சாலை மற்றும் அண்ணா சாலை பஸ் நிலையப் பகுதி மூஞ்சிக்கல் வழியாக அரசு மேல்நிலை ப்பள்ளி அருகே உள்ள ஆற்றில் கரைப்பார்கள்.

    இந்நிலையில் பாம்பா ர்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1 அடி முதல் 25 அடி வரையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித தூள், சொறி மரங்களின் விதைகள் மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் வடிவமை ப்பாளர்கள் தெரிவித்துள்ள னர்.

    சிறியது, பெரியது என சுமார் 1065 விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக பாம்பார்புரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக கொடைக்கானல் பகுதியில் இயற்கை மூலப்பொரு ட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் வருகிற 31ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு போலீசாருக்கு தெரியாமல் சிலைகள் வைக்கக்கூடாது, விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்பது உள்பட சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விழா கொண்டாடுவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    ஆலோசனை கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    இதில் இந்து முன்னணியினர், விநாயகர் சிலைகள் வைப்பவர்கள், செய்பவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    ×