search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவறை"

    • சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டியுள்ளது.
    • ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும், 2-வது பெரிய நகரமாகவும் பாகூர் விளங்குகிறது. பாகூரின் முக்கிய பகுதியான மேரி வீதியில் தாலுகா, கொம்யூன், வங்கி, கருவூலம், பதிவு என பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் செயல்படும் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி குறுகிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் பள்ளியின் நுழைவாயில் பகுதியிலேயே 2 சிறிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிறுநீர் கழிக்கவும், தண்ணீர் குடிக்கசெய்வதும் வழக்கம். ஆனால் இப்பள்ளியில் மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது.

    ஒரு சிறிய கழிவறையில் ஒரேநேரத்தில் 5 மாணவிகள் சென்று வருவதால் சுகாதாரம் என்பது அங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

    அங்குள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும் இதேநிலைதான் இருப்பதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி கூடுதல் கழிவறை கட்டித் தருவதுடன் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
    • நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

    • தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ரெத்தினம் (வயது 30). இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் பொறியியல் பட்ட படிப்பை முடித்த அனிஷ் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்.

    இதற்காக அவருக்கு உறவினர்கள் பல இடங்களில் சிகிச்சை யளித்தும் நோய் குணமாகாத நிலையில் தற்போது தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது கழிவறையின் உள்ளே கால் வழுக்கியதில் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதில் அனிஷ் பின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    உறவினர்கள் உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் அனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், குப்பைமேடு பகுதியில் சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாயக்கூடம், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன் முன்னிலையிலும் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு, சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்தவாறு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை கைது செய்தனர்.

    • 48 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 54 பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • கழிவறை தொட்டிக்குள் விழுந்ததாக கூறி வீரப்படையான்பட்டி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பூதலூர்:

    பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று வீரப்புடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 48 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 54 பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போதுபள்ளியின் பின்புறம் பயன்படு த்தப்படாத கழிவறை பகுதியில் தூய்மை பணி செய்தபோது எதிர்பாராத விதமாக தொட்டியின் மேல் பகுதி உடைந்து விழுந்ததில் 7 பெண்கள் உள்ளே விழுந்து காயம் அடைந்தனர்.அவர்களை மீட்டு பூதலூர் மற்றும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டனர்.

    இந்த நிலையில் மருத்துவ மனையில் அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், பள்ளியில் பணி செய்யும் போது அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், பெண் பணியாளர்களை மிரட்டி வேலை செய்ய வற்புறுத்தியதால்தான் கழிவறை தொட்டிக்குள் விழுந்ததாகவும் கூறி வீரப்படையான்பட்டி பஸ் நிலையம் அருகே இன்று காலை பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட னர்.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் நடந்த சாலை மறியலால் பூதலூர்- செங்கிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×