search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 256543"

    • நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கு களப்பயிற்சி வழங்கப்பட்டது.
    • தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கான களப்பயிற்சி வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதியில் எண்ணெய் வித்து பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது. இதனால் விவசாயி கள் நிலக்கடலை மற்றும் எள் பயிரிட்டுள்ளனர்.

    நிலக்கடலை பயிரில் ஜி.ஜே.ஜி.9, பி.எஸ்.ஆர்.2, தரணி ஆகிய ரகங்களின் ஆதார நிலை–1 விதை ப்பண்ணை காஞ்சிகோவில் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ளது.

    இப்பண்ணைகளை விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

    பின்னர் நிலக்கடலை ரகங்களின் மகசூல் திறன், குணாதி சயங்கள், வயலாய்வு மேற்கொள்ளும் நடை முறைகள், கலவன்களை கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறை குறித்து விதைச்சான்று அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் நிலக்கடலை பயிர் உற்பத்தி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • விதைச்சான்று இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று இயக்குநர் வளர்மதி பரமக்குடி பகுதியில் உள்ள உரம் மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். பஸ் நிலையம் அருகே உள்ள கே.எஸ்.ஆர். உரம் மற்றும் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வின் போது, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, விதையின் தரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பதை சரி பார்த்தார். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரம் மற்றும் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, உச்சிப்புளி வட்டாரத்தில் இயங்கி வரும் அரசு தென்னங்கன்று பண்ணையை பார்வையிட்டு விற்பனைக்கு தயாராக உள்ள தென்னங்கன்றுகளின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வு துணை இயக்குநர் துரைகண்ணம்மாள், விதைச்சான்று உதவி இயக்குனர்கள் சிவகாமி, துரைசாமி, திருப்புல்லாணி வட்டார உதவி இயக்குநர் அமர்ரால், விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார்.
    • தற்போது பவானி அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து வம்பன் 8 ஆதாரநிலை விதையின் சுத்திப்பணி நடைபெற்று வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குரும்பநாய்க்கன்பாளையத்தில் அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இவ்விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் அமைக்க ப்படும் விதைப்ப ண்ணைகள் விதைச்சான்று அலுவலரின் ஆய்வின் போது பயிர் விலகுதூரம் பிற ரக கலவன்கள், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் முதலிய வயல் தரங்களில் தேர்ச்சி பெற்றவுடன் அறுவடை செய்யப்படும்.

    பின்பு விதைக்கு வியல்கள் முத்திரை யிடப்பட்டு இவ்விதை சுத்தி நிலை–யத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்தி செய்யப்படும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட விதைக்குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு, விதை பகுப்பாய்விற்காக விதை ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

    இங்கு முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலவன் விதைகள் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவுடன் சான்றட்டை பொருத்த ப்பட்டு விவசா யிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்ப––டும்.

    தற்போது பவானி அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து வம்பன் 8 ஆதாரநிலை விதையின் சுத்திப்பணி நடைபெற்று வருகிறது.

    இவ்விதை விரைவில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயி களுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது பவானி விதைச்சான்று அலுவலர் நாசர்அலி, வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் உதவி பொறியாளர் கவுதம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விதைச்சான்று இயக்குனர் வளர்மதி (சென்னை) தலைமையில் தாராபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- உலகத்துக்கே உணவு வழங்கும் உற்பத்தித் தொழிலான விவசாயத்தின் முக்கிய இடுபொருளாக விதைகள் உள்ளது.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை உற்பத்தி செய்யும் பணியை விதை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை தன்னிறைவு பெறச் செய்ததில் நமது மாவட்டத்தின் பங்கு முக்கியமானது. தற்போது விவசாயிகளிடையே குண்டு நெல் ரகங்களான சாவித்திரி, சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது. தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக அரசு கொள்முதல் நிலையங்களில் சிகப்பு நிற மட்டை அரிசி ரகமான டிகேஎம் 9 ரகம் கொள்முதல் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.கே.எம். 9 ரகம் தவிர அனைத்து குண்டு ரகங்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.

    எனவே விதை உற்பத்தியாளர்களும் டிகேஎம் 9 தவிர மற்ற ரக நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விதைச் சான்றுத்துறை அலுவலர்களை நேரடியாக ஒரே இடத்தில் சந்தித்து பயன் பெறும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விதை வளாகம் கட்டப்படவுள்ளது. இதற்கென ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விதைச் சான்றுத்துறை, விதை ஆய்வுத்துறை மற்றும் விதை பகுப்பாய்வு நிலையம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமையவுள்ளது. இது விவசாயிகளுக்கும் விதை உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இ்வ்வாறு அவர் கூறினார்.  

    ×