என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "10 ஆண்டு சிறை"
- மாடு மேய்த்து கொ ண்டிருந்த மூதாட்டியை தாக்கி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இவ்வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழகாமக்காபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் குமரேசன்(31). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து திருமண த்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த செல்வம் மனைவி பொன்னுத்தாய்(56) என்பவர் தவறான தகவல்களை தெரிவித்து குமரேசனுக்கு திருமணம் நடக்காமல் இடையூறு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாடு மேய்த்து கொ ண்டிருந்த பொன்னு த்தாயை குமரேசன் தாக்கி ெகாலை செய்ய முய ன்றார். இது குறித்து பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் ஜெயமங்க லம் போலீசார் வழக்குபதிவு செய்து கும ரேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சா ட்டப்பட்ட குமரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை யும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
- கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட புதூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துச் சென்ற பெண்களை மது போதையில் கேலி செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், ராமன் ஆகிய 3 பேரும் ரகளையில் ஈடுபட்ட அறிவழகனை தடுத்து நிறுத்தி தட்டி கேட்டுள்ளனர். இதனால் அறிவழகனுக்கும் சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன் மற்றும் ராமன் ஆகிய 3 ேபரையும் அறிவழகன் கத்தியால் குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த 3 பேரும் போடி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நிறைவுற்று அறிவழகன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அறிவழகன் மதுரை மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார்.
- வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் சோனையன் அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத 33 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் சோனையன் (வயது 54). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத 33 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் சோனையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பில் ஜோதி ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட சோனையனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.
- காசாளர் மனோஜ்க்கும், விமலராஜிக்கும் கைகலப்பு நடந்தது.
- விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கடை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கீழவாஞ்சூர் தனியார் மதுக்கடையில், நாகூர் பனங்குடி, சங்கமங்கலம் காலனி தெருவை சேர்ந்த வடிவேல் மகன் விமல்ராஜ்(வயது30) காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 16.11.2019 அன்று இரவு, கடை காசாளர் மனோஜ்க்கும், விமலராஜிக்கும் நடந்த கைகலப்பில், காரைக்கால் நிரவியைச்சேர்ந்த காசாளர் மனோஜ், கடை ஊழியர்கள் காரைக்கால்மேடு கோபால்(39), தாமனாங்குடி அலெக்சாண்டர்(29) ஆகிய 3பேரும் சேர்ந்து விமல்ராஜை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கடை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
மறுநாள் காலை விமல்ராஜின் , உறவினர் யோசுவா இதனை பார்த்து, நாகை மாவட்டம் நாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அழைத்துசென்றார். அன்று மாலை மீண்டும் உடல்நிலை பாதித்த விமல்ராஜ், மேல் சிகிச்சைக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விமல்ராஜ் இறந்துபோனார்.
இது குறித்து, காரைக்கால் திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில், 19.11.19 அன்று, மதுக்கடைக்கு வந்த 3 பேரையும், திரு.பட்டினம் காவல்நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கைது செய்து, மாவட்ட துணை கலெக்டரும், சப்-மாஜிஸ்ரேட்டுமான ஆதர்ஷ் முன் ஆஜர்படுத்தினர். ஆதர்ஷ் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 3 பேரும், புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை இறுதிகட்ட விசாரனை முடிவுக்கு வந்ததையடுத்து, நீதிபதி அல்லி, குற்றவாளிகளான 3 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். தொடர்ந்து, 3 பேரையும், தற்போதைய இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் காரைக்கால் சிறையில் அடைத்தனர்.
- போக்சோவில் கைது
- திருவண்ணாமலை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
திருவண்ணாமலை:
காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் திருப்பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 24), கார் டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யாவை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு தொடர்பான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
10 ஆண்டு சிறை இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜெயசூர்யாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயசூர்யாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சில்மிஷம் செய்துள்ளார்.
- இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
சேலம்:
சேலம் மல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் வேலு(வயது25) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 25-ல் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சில்மிஷம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் படி மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர் வேலுக்கு 10ஆண்டு சிறை தண்டனையுடன் 6000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
- கொலை வழக்கில் மாட்டு வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
- இதில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
தேனி:
கம்பம் அருகே சுருளிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த மாட்டு வியாபாரி காரமணி(58). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதேபகுதியில் தனது மோட்டார் சைக்கிளை பாதையை மறித்து நிறுத்தினார். இதனை கூலித்தொழிலாளி அய்யாதுரை என்பவர் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அய்யாத்துரையின் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளியதில் அவர் பேச்சுமூச்சில்லாமல் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அய்யாத்துைரயை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து காரமணியை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா காரமணிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சரவணன், நீதிமன்ற காவலர் கிறிஸ்துராணி ஆகியோரை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் ேடாங்கரே பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்