search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பாட்ட போட்டி"

    • சிங்கப்பூரில் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த திருமங்கலம் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான 8 பேர்களில் மதுரை மாவட்டத்தில் இவரும் ஒருவர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சியோன் நகரை சேர்ந்த ராஜசேகரன் மகன் கேரிகிப்ட்சன் சாம்(வயது10). மறவன்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பாட்டத்தில் ஆர்வமுடைய இவர், சிங்கப்பூரில் நடந்த சர்வதேச போட்டிக்கு தேர்வானார். இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான 8 பேர்களில் மதுரை மாவட்டத்தில் இவரும் ஒருவர். தாயார் ரூபி, சிலம்ப மாஸ்டர் பொன்னுசாமி ஆகியோருடன் சிங்கப்பூர் சென்ற கேரி கிப்ட்சன் சாம் 10 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார்.

    இவருக்கு உலக சிலம்பாட்ட தலைவர் டென்னிசன், சிங்கப்பூர் சிலம்பாட்ட தலைவர் சந்திரபிரபு ஆகியோர் பதக்கமும், சான்றிதழும் வழங்கினர். திருமங்கலம் திரும்பிய மாணவர் கேரிகிப்ட்சனை பொதுமக்கள் பாராட்டினர்.

    • சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற சிவகாசி சகோதரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் இந்தியா சார்பில் இந்த சகோதரிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த சரவணன். அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி. பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள்கள் அஸ்வினிபிரியா 11-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் இந்தியா சார்பில் இந்த சகோதரிகள் பங்கேற்றனர்.

    இதில் 16 வயதிற்குட்பட்ட பிரிவில் அஸ்வினிபிரியாவும், 15 வயதுக்குட்பட்ட பிரிவில் ஹேமலதாவும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த சகோதரிகளின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற திருத்தங்கல் சகோதரிகளை பள்ளி தாளாளர் கணேசன் மற்றும் தலைைமை ஆசிரியர் ஆகியோரும் பாராட்டினர்.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலையில் அத்தனாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தொடங்கி வைத்தார்.

    மேலும் இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) வரை நடைபெறுகின்றன.

    தொடக்க விழா போட்டியிற்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ ஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கினார்.

    மேலும் இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்கள், பள்ளியின் மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில சிலம்பாட்ட போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
    • ஆண்கள் தனிப்பிரிவு போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரியின் 2-ம் ஆண்டு தாவரவியல் துறை மாணவர் 2-ம் இடம் பெற்றார்.

    மதுரை

    மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்நாடு சிலம்பம் பேடரேசன் சார்பில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் பெண்கள் சிலம்பம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    ஆண்கள் தனிப்பிரிவு போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரியின் 2-ம் ஆண்டு தாவரவியல் துணை மாணவர் நவீன் பிரசாத், 2-ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் மோதிலால், வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி, உடற்கல்வித் துறை இயக்குநர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • மாநில சிலம்பாட்ட போட்டியில் கம்பம் மாணவர்கள் முதல் 5 இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
    • சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

    கம்பம்:

    மாநில அளவிலான குழு போட்டியும், தனி சிலம்பாட்ட போட்டியும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை மற்றும் கூடலூரை சார்ந்த இரட்டைவால் அக்னி ஆகிய தற்காப்பு பயிற்சி பட்டறைகள் சார்பில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு முதல் 5 இடங்களை பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

    இவர்களுக்கு பாராட்டு விழா கம்பத்தில் ராணா ஸ் லாடபதி பயிற்சி பட்டறையின் பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமையில் நடத்தப்பட்டது. கூடலூர் பயிற்சியாளர் திருமால் முன்னிலை வைத்தார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் எம். எல். ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

    கம்பம் நகர்மன்றத் துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார், தி.மு.க. தெற்கு நகர பொறுப்பாளர் சூர்யா செல்வகுமார் மற்றும் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

    ×