என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தக்காளி விலை கடும் வீழ்ச்சி"
- உச்சாணிக்கொம்பில் இருந்து அதலபாளத்துக்கு சரிந்தது
- மத்திய-மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து உரிய விலை தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, கெம்மராம்பாளையம், தோலம்பாளையம், மருதூர், பெள்ளாதி, ஓடந்துறை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அங்கு உள்ள வி வசாயிகள் கறிவேப்பிலை, கத்தரி, தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
இங்கு விளையும் பொருட்களை விவசாயிகள் மேட்டுப்பாளையம், காரமடை காய்கறி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் குடும்பத்த லைவிகள் மிகுந்த கவலை க்கு ஆளாகினர். அந்தளவுக்கு தக்காளியின் விலை அப்போது உச்சா ணிக்கொம்பில் இருந்தது.ஆனால் இன்றைக்கு அதே தக்காளியின் விலை தற்போது அதலபாளத்துக்கு சரிந்து உள்ளது. மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தேக்கம்ப ட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னராஜ் என்பவர் கூறு கையில், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டா ரப்பகுதிகளில் விலை அதிக மாக விற்றதன் காரணமாக, நாங்கள் அதிக பரப்பளவில் தக்காளி பயிரிட்டோம். இதனால் தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.250-க்கு விற்பனையான தக்காளி, தற்போது ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது 25-27 கிலோ டிப்பர் ஒன்றின் விலை அதிகபட்சமாக ரூ.400 வரை மட்டுமே விற்பனையாகிறது.
மேட்டுப்பாளையம் பகுதியில் ஏற்கனவே வேலையாட்கள் கூலி, உரம், நடவு கூலி அதிகரித்து உள்ளது. எனவே தக்காளி சாகுபடியில் சொற்பமான தொகையே வருவாயாக கிடைத்து வந்தது. இந்த நிலையில் தக்காளியின் விலைவீழ்ச்சி எங்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தோட்டத்தில் பறித்த தக்காளியை இருப்பு வைத்து விற்கவும் முடியாது. மேலும் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் தக்காளி விரைவில் அழுகி விடும். எனவே கிடைக்கின்ற விலைக்கு விற்று வருகிறோம். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து, அதற்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.
- தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
- பெரும்பாலானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிளவனூர், நடுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். அய்யலூரில் தக்காளிக்கென 5 மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன.
திருச்சி, கரூர், சேலம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் பெய்த மழையால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அவர்கள் வேதனையில் இருந்தனர். இந்த நிலையில் கொடி தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர். மேலும் பருவமழை கைகொடுத்த நிலையில் ஆர்வமாக தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர்.
இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. தற்போது 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5 ஆக சரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பெரும்பா லானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த கிட்டங்கியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.3 முதல் ரூ.5வரை மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. தினசரி மாலை நடைபெறும் இந்த சந்தையில் சுற்றுவட்டார கிராமங்களான மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் வடமதுரை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்த நிலையில் விலை கடுமையாக வீழ்ச்சிஅடைந்துள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளது.
இதனால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.3 முதல் ரூ.5வரை மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் தக்காளி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும், சாஸ் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே அதிகாரிகள் இதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மேலும் தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் ஆய்வு செய்து நஷ்டஈடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்