search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஜி. ஆய்வு"

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசாருக்கு உத்தரவு
    • கைப்பற்றப்பட்ட வாகனங்களை விரைவில் அப்புறப்படுத்த அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை பிரிவில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்துவதை தடுக்கவும், ரெயில் மூலம் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், மாநிலம் மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் அரிசி கடத்தலை தடுக்க சோதனைகளையும்,ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அரசுக்கு பறிப்பிழக்கம் செய்து விரைவில் அப்புறப்ப டுத்தவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு வேலூர் சரக டி.எஸ்.பி நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • வழக்கு கோப்புகள் சோதனை
    • மரக்கன்றுகள் நட்டினார்

    செய்யாறு:

    செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி என். கண்ணன் நேற்று முன் தினம் நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வு செய்ய வந்த ஐ.ஜி. கண்ணனை திருவண்ணாமலை எஸ்பி கி.கார்த்திகேயன், செய்யாறு டிஎஸ்பி வி. வெங்கடேசன் ஆகியோர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    செய்யாறு காவல் உட்கோட்டத்தில் உள்ள 6 போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புகளை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்தார்.

    மேலும் போலீசாரின் தேவைகள் உட்பட பல தகவல்களை எஸ்.பி, டிஎஸ்பி இடம் கேட்டறிந்தார். ஆய்வுக்கு பின்னர் டிஎஸ்பி வளாகத்தில் தென்னை மரக்கன்று ஐஜி கண்ணன் நட்டு வைத்தார்.

    • நாளை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது
    • போலீஸ் நிலைய பணிகள் குறித்து சோதனை செய்தார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சரக போலீசிக்கு உட்பட்ட, வாணியம்பாடி நகரம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மாம் பேட்டை, அம்பலூர், உதயேந்திரம் உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    இந்த சிலைகள் அனைத்தும் நாளை (வெள்ளிகிழமை) கரைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென வாணியம்பாடிக்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி, வாணியம்பாடியில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் இடங்களையும், விநாயகர் ஊர்வலம் கொண்டு செல்லப்படும் சாலைகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின் போது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×