search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 265457"

    • திருமணம் ஏக்கத்தில் விஷம் குடித்தார்
    • நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்றை பகுதியைச் சேர்ந்தவர் சிவநாடான். இவரது மகன் பிரபு (வயது37).

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊருக்கு திரும்பினார். பின்னர் வெளிநாடு செல்லவில்லை. அவருக்கு திருமணமும் நடக்கவில்லை.

    இதனால் கடந்த சில நாட்களாக பிரபு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு தனது வீட்டருகில் உள்ள தாயின் கல்லறையருகே விஷம் அருந்தி வாந்தி எடுத்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் ஜெகன் மணவாளக் குறிச்சி போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது.
    • கல்லறைகள் தூய்மை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபட்டனர்.

    பூதலூர்:

    கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த மூதாதையர்களின் நினைவு கூறப்படும் நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்–பட்டு இறந்த தங்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களைநினைத்து வழிபடுவார்கள்.

    கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளில் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது. திருப்பலியில் பேராலயஅதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மீக தந்தையர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்கள்.

    திருப்பலி முடிந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட் தந்தையாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் பேராலயத்தின் உள்ளே அமைந்துள்ள லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. லூர்து சேவியர் கல்ல–றையை பேராலய அதிபர் சாம்சன்புனிதம் செய்து வழிபட்டார்.

    அதனை தொடர்ந்து புள்ளி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள அருட்தந்தை ராயப்பர் கல்லறை புனிதம் செய்தனர்.இதனை தொடர்ந்து பூண்டி பேராலய இணைந்து உள்ள கிராமங்களில் சென்று அங்குள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகள்புனிதம் செய்யப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மை செய்து வெடிவெடித்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் மாலை அணிவித்து வழிபட்டனர்.

    • தந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார்.
    • ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை வி.ஐ.பி காலனி சேர்ந்தவர் பிரவீன் சாமுவேல். இவரது தந்தை ரிச்சர்ட் அசரியா. வயது மூப்பின் காரணமாக கடந்த ஜூன் 12-ம் தேதி அவர் இறந்தார்.

    அந்த சமயத்தில் தொப்பம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதி சிறிய இடமாக இருந்ததால் யாரும் அங்கு கல்லறை கட்ட அனுமதி வழங்கவில்லை. ஆனால் பிரவீன் சாமுவேல் மற்றும் குடும்பத்தினர் தனது தந்தைக்கு கல்லறை கட்ட விரும்பினார்.

    இதற்காக ஊட்டியில் இவர்களது குடும்பத்தினர் உறுப்பினராக உள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து கல்லறை கட்ட அனுமதி கிடைத்தது. தந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார்.

    மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பலகட்ட விசாரணைக்கு பிறகு சடலத்தை தோண்டி எடுக்க வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி கிடைத்தது. இதனை அடுத்து 3 மாதங்களுக்கு பின்பு நேற்று வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்பு உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஊட்டிக்குகொண்டு செல்லப்பட்டது.

    அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து பிரவீன் சாமுவேல் கூறும் போது, தந்தைக்கு கல்லறை கட்ட வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    ×