search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மீது"

    • அரிசி கடத்தலில் ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை தலைவர் ஜோசி உத்தரவுப்படி கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி, ஈரோடு சரக டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் சம்பவத்தன்று காரில் 2 டன் ரேஷன் அரிசியை விற்பனை க்காக கடத்தி சென்றதாக ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சக்திவேல் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலைமையில் உள்ளன.

    இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர் முட்டைக்காடு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த சஞ்சய் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சஞ்சய் மீது அதி வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மிக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    நாகர்கோவில், அக்.13-

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்.தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி உஷா (வயது 39).

    இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு அமலேஷ் (7) என்ற மகன் உள்ளான். தற்பொழுது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பணிக்கு வந்திருந்த உஷா இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.

    கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவரது மோட்டர் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட உஷா படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு உஷா சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்கு பிறகு உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட் டது. அவரது உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினார்கள். பெண் போலீஸ் உஷா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் எது என்பது குறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர் முட்டைக்காடு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த சஞ்சய் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சஞ்சய் மீது அதி வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மிக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • கூலிதொழிலாளி பாரத் (26) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • இந்த நிலையில் வளர்மதியை பாரத் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நடுவலூரை சேர்ந்தவர் வளர்மதி (வயது 21). இவர் அேத பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டயப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கெங்கவல்லியை சேர்ந்த கூலிதொழிலாளி பாரத் (26) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் குழந்தை இல்லாததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 9 மாதங்களாக கணவரை பிரிந்து, வளர்மதி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் வளர்மதியை பாரத் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த வளர்மதி, கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது குறித்து அவர் அளித்தபுகாரின்பேரில் கெங்கவல்லி போலீசார், பாரத் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×