search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.
    • 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    16 அணிகள் பங்கேற்கும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் பிற்பகலில் தொடங்கிய முதல் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சிராக் சுரி 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீம் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் (2 சிக்சர்கள் 1 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய காசிப் தாவுத் 15 ரன்களும் விரித்யா அரவிந்த் 18 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    • இந்தியா வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
    • காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பும்ரா விலகினார்.

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி, இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்
    • இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும்.

    இஸ்லாமாபாத்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.

    போட்டி தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தீபக் சாஹரும் காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது ஒருபுறமிருக்க, இந்தியாவின் முக்கிய போட்டி அணியாக கருதப்படும் பாகிஸ்தான் அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த அவர் விரைவில் அணியில் இணைய உள்ளார்.

    இந்த சூழ்நிலைகள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு வலுவாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கை இன்னும் மேம்படுத்த வேண்டும். இந்தியா தற்போது பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அவர்களிடம் பும்ரா இல்லை. அது பெரிய இழப்பு. ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் உடற்தகுதி பெற்று விளையாடினால், எங்களின் வேகப்பந்து வீச்சு மேலும் வலுவடையும். சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது, எனவே பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி 20 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
    • காத்திருப்போர் பட்டியலில் முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய்

    7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23ந் தேதி எதிர் கொள்கிறது. இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் ஹர்ஷல் படேல் அணியில் இடம் பிடித்துள்ளார். தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் வைக்கப்பட்டுள்ளனர்.

    20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பின்வருமாறு: ரோகித் ஷர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்

    ×