search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்லறை பணவீக்கம்"

    • ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிர்ணய வரம்புக்குள் சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதமாக குறைந்துள்ளது
    • கிராமப்புறங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் டிசம்பரில் 6.05 சதவீதமாக குறைந்துள்ளது

    புதுடெல்லி:

    2022 டிசம்பர் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சில்லறை பணவீக்கம், ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைவதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதமானது அக்டோபர் மாதம் 6.77 சதவீதமாகவும், நவம்பர் மாதம் 5.88 சதவீதமாகவும் இருந்த நிலையில், டிசம்பர் மாதம் மேலும் சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிர்ணய வரம்பான 6 சதவீதத்துக்குள் சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதமாக தொடர்ந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிராமப்புறங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் நவம்பரில் 6.09 சதவீதமாக ஆக இருந்தது. டிசம்பரில் 6.05 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் 6.05 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.39 சதவீதமாகவும் உள்ளது.

    • ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதத்தில் இருந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்தில் இருந்த சில்லறை பணவீக்கம் இந்த மாதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 7.62 சதவீதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காலணிகள் மற்றும் எரிபொருள், விளக்குகள் ஆகியவற்றின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முட்டை விலை சற்று குறைவாக இருந்துள்ளது.

    இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்பாடுகள் காரணமாக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×