search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் விடுதி"

    • பரமக்குடியில் அரசினர் மாணவிகள் விடுதி புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார்.

    பரமக்குடி 

    பரமக்குடி பொன்னையாபுரத்தில் தாட்கோ மூலம் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 சதுர மீட்டர் பரப்பளவில் கல்லூரி மாணவிகள் விடுதி புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலை வர் சேது.கருணாநிதி, மதுரை கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் பச்சவ டிவு, உதவி பொறியாளர் சிதம்பரம் தானு, நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத், நகர மாணவரணி செயலாளர் மகேந்திரன், வார்டு செயலாளர் அருண்குமார் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த விடுதி ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட மலைகிராம மாணவிகள் தங்கி கல்வி பயில நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
    • மாணவிகள் நன்கு கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    ஓசூர்,

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஓசூரில் ரூ.3 கோடியே 69 லட்சத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.

    அதை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

    இதையொட்டி ஓசூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றி மாணவி களுக்கு இனிப்புகளை வழங்கி, உணவு பரிமாறி னார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள் மற்றும் 11 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 46 விடுதிகள் இயங்கி வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் தாலுகாவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி 100 மாணவிகள் எண்ணிக்கையுடன் 02.03.2014 அன்று தொடங் கப்பட்டு செயல்பட்டு வரும் விடுதிக்கு தற்போது ரூ.3 கோடியே 69 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு முதல் அமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேற்படி விடுதியில் 100 மாணவிகள் தங்கும் அளவிற்கு 3 தளங்களில் 30 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுதிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, குளிரூட்டும் பெட்டி, கிச்சன் சிம்னி, நவீன மாவரைக்கும் எந்திரம், மிக்சி, அனைத்து வகை சமையல் எந்திரங்கள், சமையல் எரிவாயு உபகர ணங்கள், உணவருந்தும் மேசை, கம்யூட்டர் மேசை போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த விடுதி ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட மலைகிராம மாணவிகள் தங்கி கல்வி பயில நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. எனவே, மாணவிகள் நன்கு கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சாமிநாதன், உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், உதவி பொறியாளர்கள் ஜெசிந்தா பவளமல்லி, சேகரன், தாசில்தார் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.
    • சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி விடுதியை திறந்து வைத்து கலெக்டர் பேசியதாவது:-

    44 விடுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகளும், 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகிறது. கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை வேண்டி அதிகளவில் விண்ணப்பங்கள் வரப்பெறுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பர்கூர் தாலுகாவில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி 100 மாணவிகள் எண்ணிக்கையுடன் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பர்கூர் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி இன்று தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் துவங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தினமும் புதிதாக மாற்றப்பட்ட உணவுப்பட்டியலின்படி காலை மற்றும் இரவு உணவாக இட்லி, இடியாப்பம் , பூரி, பொங்கல், சப்பாத்தி, தோசையும், மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், கூட்டு, சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக ஜமுக்காளம், ஆண்டுக்கு 3 முறை இலவச மருத்துவ பரிசோதனையும், பற்பசை, சோப்பு, எண்ணெய் போன்றவை வாங்க கல்லூரி மாணவிகள் ஒருவருக்கு மாதம் ரூ.150-ம், மாணவிகள் தினமும் படிக்க செய்தித்தாள்களும், கலை திருவிழா மற்றும் மாணவிகள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெறு ஏதுவாக புதியதாக செம்மொழி நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், பேரூராட்சி உறுப்பினர் கார்த்திகேயன், தாசில்தார் பன்னீர்செல்வி, பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு சார்பில் மாணவிகள் விடுதி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது.
    • கழிவறை வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்து மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி இடை நின்றலை தடுக்கவும், தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலை கல்வி கற்கவும், குழந்தை திருமணம் தடுக்கவும், அரசு சார்பில் மாணவிகள் விடுதி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது.

    இந்த விடுதியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு வரை 50 மாணவிகள் தங்கி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாணவிகள் விடுதியை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் தங்கும் விடுதியில் அறைகளையும், பாதுகாப்பு மற்றும் கழிவறை வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்து மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் வடிவேல், தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சீனிவாசன், நாகராஜ், தேன்கனிக்கோட்டை மாவட்ட துணை ஆய்வாளர் சுரேஷ்பாபு ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சர்தார், சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×