என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மலைப்பாதை"
- கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது.
- வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் அனுமதி இல்லை.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து 2 கி.மீ. தூரத்திற்கு இந்த மலைப்பாதையை புதுப்பிக்கும் பணியை சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, இதற்கான பூமி பூஜை சிவன்மலை முருகன் கோவில் அடிவா–ரத்–தில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணிகள் சில நாட்கள் நடைபெற்றது. பின்னர் தை மாதத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் சாலையை சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலைப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் படி வழியை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
- மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கரடையூர் அடுத்த நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 36). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் குடிபோதையில் நடுவூரிலிருந்து கொளகூர் செல்லும் மலைப்பாதையில் வளைவில் உள்ள ஒரு திட்டில் அமர்ந்திருந்தார்.
அப்போது திடீரென மணி பின்னால் இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிகுந்த சிரமத்துக்கு இடையில் பள்ளத்தில் இருந்து மணியை மீட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சுரேஷ், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை பொது மக்கள் மற்றும் மணியின் உறவினர்கள் பாராட்டினார்கள். இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்குமார் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
தற்போது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன.
குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
கிட்டத்தட்ட 2 ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கையாக விடுத்தனர்.
மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கோரிமேடு வழியாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 24-ந்தேதி தொடங்கின.
இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதர இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அயோத்தி யாப்பட்டணம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலை வழியாக சென்றன.
15 நாட்களுக்கும் மேலாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் . இதனிடையே சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்நிலையில் சாலை பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில் இன்று அதிகாலை முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் குப்பனூர் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்பு போல சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் கூடுதலாக காவலர்களை சோதனை சாவடியில் நிறுத்தி வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
- இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை முதல் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வருடம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. உடனே இந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதி தரப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்ப்படாமல் இருக்க மீண்டும் மணல் மூட்டைகள் வைத்து சிமெண்ட் கலவை பூசும் பணி இன்று காலை தொடங்கியது.
இதனால் இன்று காலை முதல் வருகிற வெள்ளிக்கிழமை வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.
மாற்று பாதையான சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம், குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குப்பனூர் வழியாக அரசு பேருந்துகள், கார்கள் சென்று வருகிறது. குப்பனூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை வரை இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு மே மாதம் இறுதியில் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை ஒட்டி மலை பாதை முழுவதும் சாலை சீரமைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.
- நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
ஊட்டி
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுனர்களும், வெளி மாநில வாகன ஓட்டுனர்களும் மிகவும் ஆசையுடன் வாகனங்களை இயக்குவதற்கு முக்கிய காரணமே இயற்கை எழில் சூழ்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள சாலையில் இதமான சூழ்நிலையில் செல்வததால் தான்.
இதன் காரணமாக நீலகிரி சாலைகளில் பயணிக்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான முதுமலைக்கு ஊட்டியில் இருந்து கல்லட்டி சாலை வழியாக செல்லாம். இந்த சாலையானது 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை வளைவு பாதையாகும்.
இந்த சாலையில் பல்வேறு ஆபத்துகளும், தொடர் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தொடர் விபத்துக்களால் அந்த சாலையில் வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
கல்லட்டி மலைப்பா தையில் உள்ள மிகப்பெரிய இறங்கு முகமான பாதையில் வாகனத்தை இயக்குபவர்கள் இருபுறமும் இயக்கும் வகையில் அந்த சாலை இருந்தது.
அந்த பகுதியில் சிலர் வேகமாக வாகனங்களை இயக்குவதால் பாதுகாப்பு கருதி அந்த சாலையின் இடையே கீழ் இறங்கும் வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லக்கூடிய வேகக்கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி மெதுவாக செல்லும் வகையிலும், மேல் நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித தடையும் இன்றி மேலேறி வரும் விதமாக சாலைகளின் நடுவே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இனிவரும் காலங்களில் வேகமான பயணம் இந்த சாலைகளில் இல்லாமல் மிதமான வேகம் உயிர் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தும். இது போன்ற செயல்பாடுகள் அனைத்து தரப்பினரினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்