என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தெருநாய் தொல்லை"
- கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.
- பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.
அருவங்காடு,
குன்னூர் நகரமன்ற மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலாகேத்ரின் தலைமையில் நடந்தது.
நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் வாசிம்ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.
வாசிம்ராஜா:
உழவர் சந்தை பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு நீண்ட நாட்களாக பணிகள் முடியவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு உள்ள காலியிடத்தில் சிறப்பு நிதிஒதுக்கீடு செய்து, சமுதாயக் கூடமோ, உள்விளையாட்டு அரங்கமோ கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜாகிர்உசேன் (தி.மு.க):
குன்னூர் நகராட்சியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஒருசிலர் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்து உள்ளது. அத்தகைய நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுசீலா: நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும் தெருநாய் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி: எனது வாடில் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகளை கண்டித்து வரும் நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.
முன்னாள் நகராட்சி கமிஷனர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட 2 கட்டிடங்களுக்கு சீல் வைத்து உள்ளார். ஆனால் இந்தக் கட்டிடங்கள் அனுமதி இன்றி திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தவர் யார்?
நகராட்சி கமிஷனர்:
அதிகாரிகள் சீல் வைத்த கட்டிடங்களை யார் திறந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு குன்னூர் மாநகராசி கூட்டத்தில் விவாதம் நடந்தது.
- கேரளாவில் தெருநாய்களின் தொந்தரவு குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
- தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் பள்ளிக் குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த ஏர் கன் துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்