search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
    • கவஜா 6 ரன்னில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அதனையடுத்து அஸ்வின் - அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 1 ரன் பின் தங்கி உள்ளது.

    ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் 1 சிக்சர் உள்பட 5 பவுண்டரிகளை விளாசினார். கவாஜா 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்துள்ளது. ஹெட் 40 பந்துகளில் 39 ரன்களுடனும் மார்னஸ் லாபுசாக்னே 19 பந்துகளில் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    • அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அதனையடுத்து அஸ்வின் - அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை கம்மின்ஸ் பிரித்தார். அஸ்வின் 37 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. ஒரு முனையில் அதிரடியான ஆட்டத்தை வெளியப்படுத்திய அக்சர் படேல் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த சமி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 1 ரன் பின் தங்கி உள்ளது.

    ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விராட் கோலி 44 ரன்கள் எடுத்த போது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
    • விராட் கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியேறுவது இது 3 முறை ஆகும்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-நாள் உணவு இடைவேளை வரை 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து விராட் கோலி - ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.

    விராட் கோலி 44 ரன்கள் எடுத்த போது நடுவரின் நிதின் மேனனின் சர்ச்சைக்குரிய முடிவால் ஆட்டமிழந்தார். மேத்யூ வீசிய 50-வது ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனபோது இந்த சம்பவம் நடந்தது. பந்து பேட் மற்றும் பேடில் ஒரே நேரத்தில் பட்டது. எம்சிசி விதிப்படி பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் பேடில் பட்டால் நாட் அவுட் ஆகும்.

    ஆட்டமிழந்து வெளியேறிய கோலி டிரஸ்சிங் அறையில் வைக்கப்பட்டிருந்த டிவியில் பார்க்கும் போது தான் அவுட் இல்லை என்பதை அறிந்து கோபத்தை வெளிக்காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டுவிட்டரில் நாட் அவுட் ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

    விராட் கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியேறுவது இது 3 முறை ஆகும்.

    • இந்திய கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 100-வது டெஸ்ட்டில் டக் அவுட் ஆன 2-வது இந்திய வீரர் என்ற புஜாரா ஆவார்.

    பார்டர்-கவாஸ்கர் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா விளையாடி வருகிறது.

    இந்த போட்டி புஜாராவுக்கு 100-வது போட்டியாகும். இந்திய அணி 53 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அப்போது களமிறங்கிய புஜாரா 100-வது போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் பந்துவீச்சில், எல்பிடபள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் மோசமான பட்டியலில் புஜாரா இணைந்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன, இரண்டாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    முன்னதாக இந்திய அணிக்காக விளையாடிய மற்றொரு வீரரான திலீப் வெங்சர்கார், கடந்த 1988-ம் ஆண்டு அவர் பங்கேற்ற தனது 100-வது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆனார். அதோடு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாம்பவானான ஆலன் பார்டர்,மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கோர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டெர் குக் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் ஆகியோரும், தங்களது 100வது போட்டியில் டக்-அவுட் ஆகியுள்ளனர்.

    மேலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, வீரேந்திர சேவாக், முகமது அசாருதின் ஆகியோருக்கு பிறகு, டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் புஜாரா இருக்கிறார்

    • ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • 100-வது டெஸ்ட்டில் விளையாடும் புஜாரா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 263 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. உஸ்மான் கவாஜா 81 ரன்னும், பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம் 72 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னும், லோகேஷ் ராகுல் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 242 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது.

    இந்த டெஸ்டிலும் தொடக்க வீரர் ராகுல் ஏமாற்றம் அளித்தார். அவர் 17 ரன்னில் நாதன் லயன் பந்தில் பெவிலியன் திரும்பினார். 100-வது டெஸ்டில் விளையாடும் புஜாரா, ரோகித் சர்மாவும் லாதன் லயன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யரும் நிலைக்கவில்லை. அவரும் 4 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 15 ரன்னிலும் விராட் கோலி 14 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • வார்னர் விலகியதால் அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் மேட்ரென்ஷா சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • அதே நேரத்தில் ரென்ஷா பந்து வீசுவதற்கு அனுமதி இல்லை என்பதை ஐ.சி.சி. மேட்ச் நடுவர் ஆண்டி பைகிராப்ட் உறுதி செய்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரரும், முன்னணி பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய பவுன்சர் பந்து வார்னர் ஹெல்மெட்டில் பட்டு காயம் ஏற்பட்டது. ஹெல்மெட்டில் பந்து பட்டதால் அவர் நிலை குலைந்தார். உடனடியாக ஆஸ்திரேலிய அணியின் டாக்டர் அவரை பரிசோதித்தார்.

    ஆனால் அவர் மூளை அதிர்ச்சி சோதனைக்கு உட்படுத்தவில்லை. மேலும் ஹெல்மெட்டில் அடிபட்ட பிறகு அதை மாற்றவில்லை. தொடர்ந்து விளையாடி அவர் ஆட்டம் இழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்த போது அவர் பீல்டிங் செய்ய களத்துக்கு வரவில்லை.

     

    இந்த நிலையில் வார்னர் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவர் இன்றும் பீல்டிங் செய்ய வரவில்லை. 2-வது இன்னிங்சில் அவர் விளையாட மாட்டார். வார்னர் விலகியதால் அந்த அணிக்கு பாதிப்பாகும்.

    இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்டில் அவர் ஆடுவாரா? என்பது உறுதியாகவில்லை. முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும்.

    வார்னர் விலகியதால் அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் மேட்ரென்ஷா சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் 2-வது இன்னிங்சில் வார்னர் இடத்தில் பேட்டிங் செய்கிறார்.தொடக்க வீரராக ஆடுவார்.

    அதே நேரத்தில் ரென்ஷா பந்து வீசுவதற்கு அனுமதி இல்லை என்பதை ஐ.சி.சி. மேட்ச் நடுவர் ஆண்டி பைகிராப்ட் உறுதி செய்தார்.

    • ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர்.
    • இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். அவர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி 50 எடுத்தது. இதன் ஜோடியை முகமது சமி பிரித்தார். அவர் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே - கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

    இந்திய சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினர். 4 பவுண்டகளுடன் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அஸ்வின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    அதன்பின் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இயன் போத்தம் உள்ளார்.
    • இந்தியாவின் கபில் தேவ் 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதலில் சிறப்பாக ஆடிய அந்த அணி 91 ரன்கள் எடுத்த போது 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அரை சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்திய கவாஜாவை ஜடேஜா வெளியேற்றினார்.

    இதன் மூலம் குறைந்த போட்டிகளில் பந்து வீச்சில் 250 விக்கெட்டும் பேட்டிங்கில் 2500 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

    இந்தியாவின் கபில் தேவ் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இயன் போத்தம் உள்ளார். இவர் 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-வது இடத்தில் இம்ரான் கான் (64 போட்டிகள்) உள்ளார்.

    • ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார்.
    • இந்த போட்டியில் தற்போது வரை அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த அந்த அணி சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. முக்கியமாக அஸ்வின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.

    இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெடுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை அஸ்வின் பிடித்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    • 100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை.
    • கபா டெஸ்டில் அடிவாங்கி அரைசதம் அடித்தது மறக்க முடியாத தருணம் என புஜாரா கூறினார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இந்த போட்டி இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். ஏற்கனவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, கும்பிளே, ஹர்பஜன்சிங், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் ஷர்மா, விராட் கோலி ஆகிய இந்தியர்கள் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடியுள்ளார்.

    இந்த சிறப்பை நினைவுகூறும் வகையில் புஜாராவுக்கு 100 என்று எழுதப்பட்ட சிறப்பு தொப்பியை அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வழங்கினார்.

    100-வது டெஸ்ட் போட்டியில் எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. முதல் இந்தியராக சதம் அடிக்க பிராத்திருக்கிறேன் என கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புஜாராவிற்கு புஜாராவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவர் ரோஹன் ஜெட்லி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். இந்திய அணியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சிறப்பு பரிசுக்கு வாங்கியதற்கு பிறகு புஜாரா பேசியதாவது:-

    ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் இருக்கும். இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், உங்களின் பலத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும், மேலும் கடந்த இரண்டு வருடங்களாக எனது ஆட்டத்தில் சில ஷாட்களைச் சேர்த்துள்ளேன், மேலும் கிரிக்கெட் வீரராக தொடர்ந்து வளர்ந்து வருகிறேன்.

    நான் அறிமுகமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களை எடுத்திருந்தேன். ஒருவேளை அந்த 72 ரன்கள் நான் எடுக்காமல் இருந்திருந்தால் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். 2024ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் இரண்டாவது இன்னிங்ஸ் சதம் அடித்தேன். துணைக் கண்டத்திற்கு வெளியே நான் அடித்த முதல் சதம். அது என் வாழ்வில் மறக்க முடியாது.

    அதேபோல், 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சின்னசாமியில் 92 ரன்களும், 2018-19 தொடரில் அடிலெய்டில் 123 ரன்களும், கபா டெஸ்டில் நான் உடலில் அடிவாங்கி சேர்த்த 56 ரன்களும் என்னால் என்றுமே மறக்க முடியாத தருணங்கள் என்றார்.

    புஜாரா இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 57-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. 25-ல் தோல்வியும், 17-ல் டிராவும் கண்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,900 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 27 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,778 ரன்களும் எடுத்துள்ளார்.

    டெஸ்டில் செஞ்சுரி அடிக்க உள்ள புஜாரா இதுவரை ஒரு முறை கூட கேப்டன் பதவியை அலங்கரித்ததில்லை.

    2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக ஜொலித்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை. அந்த ஏக்கத்தை புஜாரா தணிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    • ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த சுமித் 0 ரன்னில் அவுட் ஆனார்.
    • இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.

    இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் சூர்ய குமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ரென்ஷா, ஸ்காட் போலண்ட் ஆகியோருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், மேத்யூ குனேமேன் ஆகியோர் இடம் பெற்றனர். சுழற்பந்து வீச்சாளரான குனேமேன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

    இந்திய வீரர் புஜாரா 100-வது டெஸ்டில் களம் இறங்கினார். அவருக்கு சிறப்பு தொப்பியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். அவர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி 50 எடுத்தது. இதன் ஜோடியை முகமது சமி பிரித்தார். அவர் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே - கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

    இந்திய சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினர். 4 பவுண்டகளுடன் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அஸ்வின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 

    • இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளம் மெதுவான தன்மையுடன், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடுகளம் வறண்டு காணப்படுவதால் சீக்கிரமே வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இந்த டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜாவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ×