search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி திருவிழா"

    • அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.
    • புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.

    புரட்டாசி மாத திருவிழா

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி நடைபெற்ற இத்திருவிழாவில் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் சாமிகளுக்கும் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி நிழலில் பூஜை பொருட்களை கொண்டு சென்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. பெலாப்பாடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து வசதியில்லாத நிலையிலும் பாத யாத்திரையாகவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்க ளிலும், சுற்றுப்புற கிராம மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் வாழப்பாடி பேளூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்க ளுக்கு பொங்கல் உருண்டைச்சோறும், முன்னோர் வழியில் மொச்சை, அவரைக் கொட்டை குழம்பும் கோவில் பிரசா தமாக அன்னதானமாகவும் வழங்கப்பட்டது.

    • இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

    திருவொற்றியூர்:

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

    இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும்,கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.

    பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது.

    இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது.

    தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருடவாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திரவாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.

    விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணி விடை, 9மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார்.

    தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன்.

    திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பரிமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 வைகுண்ட சோபனம், அண்டநாமம், திரு நாமக்கொடி இறக்குதல், பள்ளி யுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொரு ளாளர். பி. ஜெயக் கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே. ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    • குரும்பபட்டி ஊராட்சியில் உள்ள ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குரும்பபட்டி ஊராட்சியில் உள்ள ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    இதைதொடர்ந்து, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மேளதாளம் முழங்க சாமி முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தார். பின்னர், சுவாமிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சீரங்க கவுண்டர் வகையார் தர்மலிங்கம் ஊர் கவுண்டர் வெங்கடாசலம் ஆகியோர் செய்து இருந்தனர். 

    • மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • வருகிற 11-ந் தேதி வைகை ஆற்றில் கரகம் எடுக்கச் செல்லுதல் மற்றும் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம், சோழ வந்தான் அருகே மேலக் கால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திரு விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். திருவிழாவில், முக்கிய திருவிழாவான வரும் 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றில் கரகம் எடுக்கச் செல்லுதல் மற்றும் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. 12-ந் தேதி (புதன்கிழமை) காலை அம்மனுக்கு கோயில் வாசலில் பொங்கல் வைத்தல் இரவு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வருதல், 13-ந் வியாழக்கிழமை முளைப் பாரி எடுத்துச் சென்று வைகை ஆற்றில்கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை, மேலக்கால் கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள் மற்றும் முதன்மை காரர்கள் செய்து வருகின்றனர்.

    • பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 22-ந் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

    உடன்குடி:

    உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருநாளான 17-ந் தேதி இரவு 9 மணிக்கு அலங்கரி க்கப்பட்ட பூஞ்சைபுரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வந்தார். இரவு அன்னதானம் நடந்தது.

    வருகிற 22-ந் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். 23ந் தேதி இரவு 12 மணிக்கு சிறப்பு ஆலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன், பவளமுத்து விநாயகர் முக்கிய வீதியுலா நடை பெறும்.ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா சுந்தர ஈசன் மற்றும் விழாக்குழுவினர் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    ×