search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 269024"

    • சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும்.
    • அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.

    சங்க செயலாளார் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசி வணிகர் சங்க பொதுக்குழு தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    கூட்டத்தில், சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும், அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, ரவா, தயிர் போன்றவற்றிற்கு விதிக்கப்ப டும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

    பாபநாசம் ரெயில் நிலைய த்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விரைவு ரெயில்களையும் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் செயற்குழு உறுப்பினர் அசோகன் நன்றி கூறினார்.

    • கோதுமை ஏற்றுமதிக்கு தடை நீடிக்கும் என்று இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.
    • கோதுமை கொள்முதல் செய்யும் பணி நாடு முழுவதும் தொடங்கி விட்டது.

    புதுடெல்லி:

    இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே.மீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    உள்நாட்டு கோதுமை புழக்கத்தில் இன்னும் திருப்தியான நிலைமை வரவில்லை. எனவே, திருப்தியான நிலைமை வரும்வரை கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும்.

    சமீபத்திய மழையால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படாது. கோதுமை உற்பத்தி இலக்கு நிச்சயமாக எட்டப்படும். கோதுமை கொள்முதல் செய்யும் பணி நாடு முழுவதும் தொடங்கி விட்டது என தெரிவித்தார்.

    • மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் 2600 டன் கோதுமை வந்தது.
    • கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் வரும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மத்திய பிரதேசத்தில் இருந்து 2600 டன் கோதுமை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. அங்கிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை விநியோகிக்கப்பட உள்ளது.

      புதுடெல்லி:

      கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்ததால், அதன் விலை உயரத் தொடங்கியது. விலைஉயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

      அதையும் மீறி, கோதுமை விலை உயர்ந்தது. சராசரியாக கிேலா ரூ.50 ஆக அதிகரித்து விட்டது.

      கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா சமீபத்தில் தெரிவித்தார்.

      இந்தநிலையில், கோதுமை விலை உயர்வை குறைக்க வெளிச்சந்தையில் கோதுமையை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

      தனது சேமிப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை மத்திய உணவு அமைச்சகம் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். அதன்படி, மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகம், அந்த கோதுமையை மாவு மில்கள், தனியார் வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யும்.

      வெளிச்சந்தையில் கோதுமை வரத்தை அதிகரித்து, அதன் விலையை குறைப்பதுதான் இதன் நோக்கம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

      • பற்றாக்குறையை சமாளிக்க, பல மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை பெறப்படுகிறது.
      • ஒரு வருட தேவைக்கும் மேலாக உணவு தானியம் கையிருப்பு.

      இந்திய உணவு கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

      இந்திய உணவுக் கழகத்தின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட நிலையம் உள்ளது. 


      இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு வருட தேவைக்கும் மேலான உணவு தானியம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.

      பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் பெறப்படுகிறது.

      பிரதமரின் இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னைப் பிரிவு, 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • அக்டோபர் 1ந் தேதி நிலவரப்படி, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
      • அக்டோபர் 16ந் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

      தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

      உணவு தானியங்கள் கையிருப்பு குறித்த ஆய்வின்படி அக்டோபர் 1-ந் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 113 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 237 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான கரீப் பருவ கொள்முதல் தொடங்கியுள்ளதால் அக்டோபர் 16-ஆம் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக பெய்து வருவதால், இதே அளவிலான நெல் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

      • உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானிய இருப்பு உள்ளது.
      • கோதுமை மற்றும் அரிசி விலைகள் கட்டுக்குள் உள்ளது.

      மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

      வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான சிரமங்களையும் தவிர்க்கவும், மத்திய அரசு, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

      தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உணவு தானியங்களின் இருப்பு, மத்திய தொகுப்பில் இருப்பதையும், விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

      விலைவாசி உயர்வைத் தவிர்க்க 13.05.2022 முதல் கோதுமைக்கும், 08.05.2022 முதல் அரிசிக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் மூலம் கோதுமை மற்றும் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகள் குறைந்துள்ளது.

      கோதுமை விலை கடந்த வாரத்தில் நிலையானதாக இருந்தது. விலைகளைக் கட்டுப்படுத்த வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வெளிச்சந்தை விற்பனைக்கு மாற்றப்பட்டன.

      கோதுமை, கோதுமை மாவு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து, தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.
      • 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது.

      நீடாமங்கலம்:

      திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமாரின் உத்தரவு படி "ஆப்ரேஷன் கருடா" என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை அழித்து வருகின்றனர்.

      அந்த வகையில் சிறப்பு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் ஆவூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

      அப்போது வீட்டின் முன் பகுதியில் டீ தூள் மற்றும் கோதுமை மாவு போன்ற பொருட்களை ஏஜெண்ட் எடுத்து செய்வது போல், பொதுமக்களை நம்ப வைத்து, வீட்டின் மற்ற அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.

      இதில், 65 மூட்டைகள் மற்றும் 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      இதன் மதிப்பு சுமார் ரூ. 25 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

      மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

      • திருச்சியில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் வைப்பதற்கான காலி இடம் உள்ளது.
      • கடந்த 10 நாட்களில் 99 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, 3.5 மெட்ரிக் டன் கோதுமை தனியார் மில்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பிடித்தோம்.

      தஞ்சாவூர்:

      தமிழக அரசின் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

      தஞ்சை விமானப்படை நிலையம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கிற்கு சென்று பார்வையிட்டார்.

      அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்குகளையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும், நெல் மூட்டைகள் லாரிகளில் இயக்கம் செய்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      அதன் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.

      இந்த ஆய்வின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலளார் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

      பின்னர் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

      தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 72 ஆயிரம் எக்டேரில் நடந்துள்ளது.

      மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

      இதே போல கடந்த ஆண்டும் சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. கடந்த ஆண்டு 1.97 லட்சம் டன் குறுவையில் கொள்முதல் செய்யப்பட்டது.

      இந்த ஆண்டு 2.20 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      டெல்டா மாவட்டங்களில் 20 இடங்களில் 2.86 லட்சம் டன் சேமிக்கும் வகையில் குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது.

      வரும் அக்டோபர் இறுதிக்குள்ளாக இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளது.

      மத்திய அரசின் சேமிப்பு குடோன்களில் வைப்பதற்கும் அனுமதி கேட்டுள்ளோம்.

      அதன்படி திருச்சியில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் வைப்பதற்கான காலி இடம் உள்ளது.

      அதை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளனர்.

      திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை பிடித்து வருகிறோம்.

      கடந்த 10 நாட்களில் 99 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, 3.5 மெட்ரிக் டன் கோதுமை தனியார் மில்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பிடித்தோம்.

      மேலும் இரண்டு தனியார் மில்லில் ஆய்வு செய்து மொத்தமாக 120 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

      தமிழகத்தில் தனி நபர்கள் இறந்தவர்கள் என 2.45 லட்சம் பேரும், கூட்டு குடும்ப அட்டையில் இறந்த நபர்கள் என 14.26 லட்சம் பேரும் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க டி.ஜி.பி. ஆபாஷ்குமார் தலைமையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 24 இன்ஸ்பெக்டர்கள், 87 சப் இன்ஸ்பெக்டர்கள் என பணியில் உள்ளனர்.

      அதே சமயம் அரிசியை வாங்கி தனியார் வியாபாரியிடம் விற்பனை செய்யாமல் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

      நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருவதை தடுக்க, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நடப்பு பருவத்தில் 1 மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கியதால் 722 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய ப்பட்டுள்ளது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ×