search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 269239"

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை-பணம் அபேஸ் செய்யப்பட்டது.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பொங்கல் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சிவகாசிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மினி பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக தான் கையில் வைத்திருந்த பையில் மணிபர்சை எடுத்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 காணாமல் போய் இருந்தது. யாரோ மர்மநபர் நகைகளையும், பணத்தையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    கோவை,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி( வயது 30). நேற்று இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள 2 ஏடிஎம் மையங்களுக்கு சென்றார். ஏடிஎம் கார்டு பயன்படுத்தி விஜயலட்சுமி பணத்தை எடுக்க முடியவில்லை இதனையடுத்து அவர் அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை நாடினார் அவர் உதவி செய்வது போல நடித்து விஜயலட்சுமியின் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார் இது குறித்து விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் இன் புகார் செய்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து அவரது வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலகுருணை குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(36). இவர் அருப்புக்கோட்டையில் இருந்து மேலகுருணை குளத்திற்கு பஸ்சில் சென்றார். அப்போது டிக்கெட் எடுப்ப தற்காக தான் வைத்திருந்த பையில் மணிபர்சை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. அதில் 11/2 செயின் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வைத்திருந்தார். பஸ்சில் யாரோ மர்மநபர் அவரது மணிபர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 பவுன் நகை, ஏ.டி.எம் கார்டு, செல்போன் மற்றும் 4,500 ரூபாய் பணம் இருந்ததை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை, செல்போன் திருடப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் அருகே உள்ள பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (வயது 32). சம்பவத்தன்று இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்சில் தனது ஊருக்கு செல்வதற்காக ஏறினார். பின்னர் ஸ்ரீவித்யா தனது கட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பொருட்களை பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 2 பவுன் நகை, ஏ.டி.எம் கார்டு, செல்போன் மற்றும் 4,500 ரூபாய் பணம் இருந்ததை காணவில்லை.

    இதனை தொடர்ந்து ஸ்ரீவித்யா உடனடியாக பஸ் முழுவதும் பொருட்கள் உள்ளதா? என தேடிப் பார்த்த போது கிடைக்கவில்லை. இது மதிப்பு சுமார் 90 ஆயிரமாகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடமிருந்து நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடினார்களா? அல்லது பொருட்கள் எப்படி மாயமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.
    • பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன்.அவரது மனைவி பூங்கோதை (வயது 37). இவர் தனியார் மகளிர் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அன்று தனியார் பஸ்சில் சின்னசேலம் செல்வதற்கு பேருந்தில் ஏறி உள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.

    பஸ் முழுவதும் தேடியும் கிடைக்காததால் சின்னசேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்து திருடியவர் யார் என்று போலீசார் தேடி வந்தனர்.

    அப்பொழுது அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்பு திருடிய நபரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×