search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 269386"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கடந்த 13-ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில் மர்ம நபர்கள், தீ வைத்தனர்.

    இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம் (22) ஆகியோர் தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்வந்த் (19), கோகுல் (23) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகிராம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விபத்து குறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    திருவொற்றியூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 19). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவொற்றியூர் பெரியார் நகரில் தங்கி எல்லையம்மன் கோவில் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் மணலியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகர பஸ்சை (56டி) இடது புறமாக முந்தி செல்ல முயன்றார். அப்போது சாலையோரத்தில் சென்ற சரக்கு ஏற்றி செல்லும் சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் நிலை தடுமாறிய ரகு மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த மாநகர பஸ்சின் சக்கரத்தில் அவர் சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூகவலை தளத்தில் பரவி வருகிறது.

    • 15 அடி உயரத்தில் நின்று கொண்டு இருந்தார்.
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கோவை,

    உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ராம்பால் (வயது 27). இவர் கோவை வந்து அன்னூரில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று ராம்பால் அன்னூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றார். அங்கு 15 அடி உயரத்தில் நின்று பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராம்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×