என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிமுக கவுன்சிலர்"
- கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல்.
- 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 16வது நபராக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே கைதான ஹரிஹரன் தந்த தகவலின்பேரில், 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அருளின் செல்போன், அதிமுக கவுன்சிலரான ஹரிதரனிடம் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை.
- ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கீரப்பாக்கம் பகுதியில் அன்பரசன் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
முன்பகை காரணமாக கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கொலை வழக்கில் சுதர்சன், பாலாஜி ஆகிய இருவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
- எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மேகலா. அ.தி.மு.க. வை சேர்ந்த இவர் இன்று காலை தனது 10 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
எனது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார். மேலும் எங்களது கோரிக்கைகளை மாதந்தோறும் மன்ற கூட்டத்தில் மனுக்களாக கொடுத்து வருகிறோம், ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.
ஏனென்றால் நான் கீழ் சாதியை சேர்ந்தவர், இதனால் எனது குழந்தைகளை இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டேன், பேரூராட்சியில் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
- புகாரில், தன்னை அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு, விஷ்ணு மற்றும் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்தனர்.
அப்போது 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல் வந்த போது 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் யுவராணி, அவரது கணவர் ராஜா, அ.தி.மு.க. நகர செயலாளரும், 15-வது வார்டு கவுன்சிலருமான பாபு ஆகியோர் அவரை வழிமறித்தனர்.
அப்போது ஞானவேலிடம், நீங்கள் எப்படி எங்களது குடும்பம் பற்றி ஆபாசமாக பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடலாம் என்று கூறி தட்டி கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் பயங்கரமாக ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதனையறிந்த மற்ற கவுன்சிலர்கள் ஓடிவந்து தகராறை விலக்கினர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க. செயலாளர் பாபு, அவரது மகன் கவுதம், கவுன்சிலர் யுவராணி, அவரது கணவர் ராஜா ஆகியோரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனையறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு, முன்னாள் எம்.பி. காமராஜ், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அய்யப்பா, தேவேந்திரன், ராஜசேகர் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
இது குறித்து போலீசாரிடம் நியாயம் கேட்டனர். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பாபு, யுவராணி மற்றும் ராஜா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். கவுதம் மட்டும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு, விஷ்ணு மற்றும் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார்.
அதனடிப்படையில் அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்