search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"

    • இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானாவை சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் வாக்களிப்பில் சாதனை நிகழ்த்தி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறும்போது, "தெலுங்கானா சகோதர, சகோதரிகள் திரளாக வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும். தெலுங்கானா சிறந்த கட்டமைப்புக்கு வாக்களியுங்கள். காங்கிரசை வெற்றி பெற செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
    • பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளராக ED செயல்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பைகுந்த்பூர் மற்றும் கத்கோரா பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    பைகுந்த்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்கே, பா.ஜ.க., பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தொகுதியை மாற்ற முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்பட நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து கத்கோராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளர்களாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன.

    கடந்த செவ்வாய் கிழமை மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இம்மாத இறுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • மாநிலங்களை பொறுத்தவரை ஆம் ஆத்மி, இடது சாரிகள் எதிரிகள்தான்
    • மாநில தேர்தல் முக்கியம் என்பதை கூட்டணி கட்சிகளிடம் எடுத்துரைக்க இருக்கிறோம்

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை உடைக்கக்கூடும். முதலில் தேர்தலை எதிர்கொண்டு, அதன்பின் கட்சிகள் ஒன்று சேர்ந்து, பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். இது பொதுத்தேர்தலுக்கு முன் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செல்ல உறுதியளிக்கும்.

    மாநில தேர்தல் கட்சிகளுக்கு முக்கியமானது என்பது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட மற்ற தலைவர்களிடம் காங்கிரஸ் கட்சி விளக்கமாக தெரிவிக்க இருக்கிறது. அதனால் இந்தியா கூட்டணி நடவடிக்கையில் சற்று ஒதுங்கி இருக்க இருப்பதையும் விளக்க இருக்கிறோம்.

    பா.ஜனதாவை தோற்கடிக்க கூட்டணி, ஒரு அணியாக ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம். மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியோடு எந்தவொரு கூட்டணிக்கும் எதிராக உள்ளது.

    அதேபோல்தான் பா.ஜனதாவிற்கு எதிராக இடதுசாரிகள் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம். ஆனால், கேரள மாநிலத்தில் அவர்கள் எதிரிதான். பிரதமர் வேட்பாளராக முன்னிலைப் படுத்துவதில் ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை. பொதுத்தேர்தலில் முடிந்தவரை ஒற்றுமையாகப் போராட அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு சிறப்ப விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர், ஜார்க்கண்டு முதல்வர் உள்பட பலர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

    ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது.

    நாளை வரை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்தில் கை குலுக்கியும், கட்டி அணைத்தும் வரவேற்பு அளித்தார்.

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த விருந்தில், உலக தலைவர்களை தவிர இந்திய மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர், ஜார்க்கண்டு முதல்வர் உள்பட பலர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த சிறப்பு விருந்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு காங்கிரசும், ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடகா மாநிலம் ஹூப்பளியில் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், " கார்கே காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல, மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவரும் கூட. என்னை பொறுத்தவரையில் கார்கேவை அழைக்காதது தவறு. எனக்கும் பிற வேலை இருப்பதால் ஜி20 மாநாட்டின் விருந்துக்கு நானும் கலந்துக் கொள்ளவில்லை" என்றார்.

    • யாருடைய மதம் பற்றியும் பேச நான் இங்கு வரவில்லை. ஏழைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்.
    • மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ராய்ப்பூர்:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்றார். சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    யாருடைய மதம் பற்றியும் பேச நான் இங்கு வரவில்லை. ஏழைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்.

    மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, ராஜ்நந்தகோன் மாவட்டம் தேக்வா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலுக்காக நாங்கள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தோம். உடனே, நாட்டின் பெயர் 'பாரதம்' என்று மாற்றப்பட வேண்டும் என்று பா.ஜனதா சொல்கிறது.

    இந்தியா, பாரதம் என்ற இரண்டுமே அரசியல் சட்டத்தில் இருக்கிறது. எனவே, ஏன் சர்ச்சையை உருவாக்க வேண்டும்?

    பாரதம் என்ற வார்த்தையை காங்கிரஸ் வெறுப்பதாக பா.ஜனதா சொல்கிறது. நாங்கள் பாரதத்தை நேசிக்கிறோம்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட்ட ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு 'பாரத ஒற்றுமை பயணம்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது.

    நாங்கள் பாரதத்தை ஒன்றுபடுத்த பாடுபடுகிறோம். பா.ஜனதாவோ, நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.

    'இந்தியா' என்ற வார்த்தை மீது வெறுப்பு இருந்தால், ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா என்று திட்டங்களுக்கு பெயர் வைத்தது ஏன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்து விட்டனர்.
    • இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை.

    புதுடெல்லி:

    ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார்.

    அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள், அனைத்து முதல்-மந்திரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது அப்போது, ராகுல்காந்தி கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்து விட்டனர். அது சில உண்மைகளை உணர்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை.

    இது, மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். இதற்கு பின்னால் எந்த மாதிரி சிந்தனை இருக்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகல் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது துரதிருஷ்டவசமானது. மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

    அத்தகைய நிலையில், எதிர்க்கட்சி தலைவரை அழைக்காதது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேபினெட் மந்திரிகள், மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு
    • இந்திய அரசின் செயலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு

    ஜி20 மாநாட்டையொட்டி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது.

    ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இன்றுகாலை தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேவகவுடா உடல்நலத்தை காரணம் காட்டி பங்கேற்க இயலாது எனக் கூறிவிட்டார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவர் கேபினெட் மந்திரிக்கு சமமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கேபினெட் மந்திரிகள், மாநில முதல்வர்கள் ஆகியோர் அழைக்கப்படடுள்ளனர். இந்திய அரசின் அனைத்து செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகழ்பெற்றவர்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளனர்.

    • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' போன்ற தீவிர நடவடிக்கைகள் நமது ஜனநாயகம், அரசியலமைப்பு போன்ற நடைமுறைகளை நாசமாக்கிவிடும்.
    • 2024-ம் ஆண்டு தேர்தலில் இந்திய மக்கள் முன் இருக்கும், ஒரே நாடு ஒரே தீர்வு, பா.ஜனதாவின் தவறான ஆட்சியை அகற்றுவதுதான்.

    டெல்லி:

    பேரழிவாக இருக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள குழுவில் இருந்தும் அந்த கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பெயரில் ஒரு குழுவை அமைக்கும் இந்த வித்தை இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை சிதைப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகும்.

    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' போன்ற தீவிர நடவடிக்கைகள் நமது ஜனநாயகம், அரசியலமைப்பு போன்ற நடைமுறைகளை நாசமாக்கிவிடும். இதை எளிய தேர்தல் சீர்திருத்தங்களால் சாதிக்க முடியும் என்று கூறுவது பிரதமர் மோடியின் மற்ற யோசனைகளைப் போலவே பேரழிவாக இருக்கும்.

    1967-ம் ஆணடு வரை இந்தியாவில் இவ்வளவு மாநிலங்கள் இல்லை. அதைப்போல பஞ்சாயத்துகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30.45 லட்சம் பிரதிநிதிகள் இல்லை.

    தற்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. அதைப்போல லட்சக்கணக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நம்மிடம் உள்ளனர். அவர்களது எதிர்காலத்தை ஒரே நேரத்தில் தீர்மானிக்க முடியாது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் இந்தியாவை ஜனநாயக முறையில் இருந்து சர்வாதிகார ஆட்சி முறைக்கு மெல்ல மாற்றுவதற்கு மோடி அரசு விரும்புகிறது.

    எனவே 2024-ம் ஆண்டு தேர்தலில் இந்திய மக்கள் முன் இருக்கும், ஒரே நாடு ஒரே தீர்வு, பா.ஜனதாவின் தவறான ஆட்சியை அகற்றுவதுதான்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    இதில் முக்கியமான பல்வேறு கேள்விகள் உள்ளன. அதாவது எந்தவொரு தனிநபரின் அறிவுத்திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல், இந்திய தேர்தல் நடைமுறையில் ஒருவேளை மிகக் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்த திட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழு மிகவும் பொருத்தமானதா?

    தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக இந்த பெரிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமா?

    இவ்வளவு பெரிய திட்டத்துக்கான குழுவில் தேர்தல் கமிஷனில் இருந்து ஒருவர் கூட நியமிக்காதது ஏன்?

    2014 முதல் 2019-ம் ஆண்டு வரை தேர்தல்களுக்காக தேர்தல் கமிஷன் சுமார் ரூ.5,500 கோடி செலவிட்டுள்ளது. இது அரசின் செலவின பட்ஜெட்டில் ஒரு பகுதியே ஆகும். இது செலவு சேமிப்பு குறித்த கருத்தை முட்டாள்தனமாக்குகிறது.

    2014-ம் ஆண்டு முதல் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் மொத்தம் 436 இடைத்தேர்தல்கள் நடந்துள்ள நிலையில், மக்களின் விருப்பத்தை புறக்கணித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதை பா.ஜ.க வழக்கமாக கொண்டுள்ளது.

    பா.ஜ.க.வின் இந்த உள்ளார்ந்த அதிகார பேராசை ஏற்கனவே நமது அரசியலை சீரழித்துவிட்டது மற்றும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தை வலுவற்றதாக்கி விட்டது.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

    • 9.5 ஆண்டுகள் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை கொள்ளை அடித்த மோடி அரசு
    • தற்போது தாய், சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்டி வருகிறது

    கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி, இரண்டு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது ஆகியவற்றின் காரணமாக, பா.ஜனதா அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. பிரதமர் மோடி, அவருடைய நாற்காலியில் ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் மேலும் சலுகைகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் ''மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த கருணையற்ற மோடி அரசு தற்போது தாய், சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்டி வருகிறது.

    200 ரூபாய் மானியம் வழங்குவதன் மூலம் 2024 பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை மோடி அரசு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுவது நல்லது மோடி ஜி. பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பினால்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

    மோடியால் திடீரென சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்?.

    இரண்டு முறை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வெற்றிகரமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். 3-வது கூட்டம் அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

    கர்நாடகா அரசு 100 நாட்களுக்குள் ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான் அரசு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

    ஐந்து மாநில தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், உறுதியான தோல்வியை பா.ஜனதா பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் மக்களை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும் நிலையில்,  திருப்தியற்ற நிலையில் இருக்கிறது. பிரதமர் நாற்காலியில் மோடி ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் இதுபோன்ற பரிசுகளை இன்னும் எதிர்பார்க்கலாம்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு கடந்த 9.5 ஆண்டுகளாக 31.37 கோடி மக்களிடம் சிலிண்டர் விலையை உயர்த்தி கொள்ளை அடித்துள்ளது. அதுவும், 8.33 லட்சம் கோடியை மக்கள் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளது.

    உஜ்வாலா திட்டத்தில் பயனடையும் பெண்கள் பாக்கெட்டில் இருந்து, 2017-ல் இருந்து 68,702.76 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி மோடி அரசு நினைவு கூர்ந்துள்ளது.

    மோடி ஜி, 9.5 ஆண்டுகள் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த 8,33,640.76 ரூபாயை இந்த 200 ரூபாய் மானியத்தால் இன்னும் சில மாதங்களில் ஈடுகட்ட முடியுமா?. 68,702.76 கோடியை கொள்ளையடித்த உஜ்வாலா சகோதரிகளுக்குப் பிராயச்சித்தம் செய்வீர்களா?.

    2024 தேர்தலில் நாட்டு மக்கள் நிச்சயமாக உங்களை அதிகாரத்தில் இருந்து இறக்கி, நீங்கள் கொடுத்த பரிசை, இதன் மூலம் திருப்பி கொடுப்பார்கள்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் 33 சதவீதம் அளவில் குறைப்பு
    • தற்போது 14.42 கோடி பேர் இத்திட்டத்தில் கீழ் வேலை செய்யும் நபராக உள்ளனர்

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    2005-ம் ஆண்டு இதே தேதியில் (ஆகஸ்ட் 23-ந்தேதி) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம், கோடிக்காணக்கான மக்களுக்கு வேலை உரிமை என்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது.

    தற்போதைய நிதியாண்டில் மோடி அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் 33 சதவீதம் அளவில் குறைத்த போதிலும் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படக் கூடிய 6,366 கோடி ரூபாய் சம்பளத் தொகையை பாக்கி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் கொண்டு வந்த இந்த திட்டத்தின்மூலம், 14.42 கோடி பேர் வேலை செய்கிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவார்கள்.

    கொரோனா தொற்றின்போது வேலைவாய்ப்பு இல்லாதபோது, இந்த திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைக்கொடுத்தது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் இருந்தபோது, கோடிக்கணக்கான மக்களை இது பாதுகாத்தது. அவர்களது கடுமையான காலத்தில் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை :

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை கே.எஸ்.அழகிரி இன்று சந்திக்கிறார். பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    • இந்தியாவின் சாதனைகளை அடுத்த வருடம் இதே இடத்தில் பட்டியலிடுவேன்- மோடி
    • மோடி அவர் வீட்டில்தான் கொடியேற்றுவார்- கார்கே கிண்டல்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    அதன்பின் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, ''என்னுடைய 2-வது பிரதமர் பதவி காலத்தில் 10-வது முறையாக உரையாற்றியுள்ளேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை, அடுத்த வருடமும் இதே இடத்தில் மக்களிடம் பட்டியலிடுவேன்'' எனத் தெரிவித்தார்.

    இதன்மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை அடுத்த வருடம் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வருடம் அவரது வீட்டில் கொடியேற்றுவார்'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ''மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவது கடைசி இதுதான் முறை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ''சுதந்திரம் வாங்கி 75 வருடங்கள் ஆன நிலையில், இந்தியாவில் வளர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், விரும்பிய இலக்கை இன்னும் எட்டவில்லை'' என்றார்.

    26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி மோடியை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளது.

    ×