search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் பீதி"

    • வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப மக்கள் கோரிக்கை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி, பர்கூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. எந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. குளம், குட்டைகளும் வரண்டுவிட்டன.

    இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாள வாடி, பர்கூர் வனப்பகு தியில் கடும் வறட்சி நிலவுவதால் பச்சை பச்சை என காட்சியளித்த மரம், செடி, கொடிகள் காய்ந்து விட்டன.

    இந்த வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அருகே இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு கிராமங்களு க்குள் நுழையும் யானை களால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோ ளம், வாழைமரங்கள், தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடும் ஏற்பட்டுள்ளது. சில சமயம் யானை களால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு விடுகிறது.

    அதேபோன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீருக்காக யானைகள் அந்த பகுதியில் வரும் வாகனங்களை வழி மறைத்து வருகிறது. வாகனங்களை யானை துரத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    கிராமத்துக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் நீண்ட சிரமத்திற்கு பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, `தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

    ஆனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் நஷ்டங்களை சந்தித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதி முழுவதும் ஆங்காங்கே வனத்துறையினர் தொட்டிகளில் நீர்களை நிரப்ப வேண்டும்.

    இதற்கென்று வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து தினமும் காலை, மாலை வேலை என இரு வேலைகளில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீரை நிரப்ப வேண்டும். இவ்வாறு நீர் நிரப்புவதன் மூலம் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் எண்ணிக்கை குறையும்.

    இதேபோல் வனப்பகுதி முழுவதும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வனத்துறையினர் யானை கள் ஊருக்குள் புகாதவாறு அகழிகளை வெட்டி இருந்தனர். தற்போது அவை மண் நிறைந்து சமமாக ஆகிவிட்டது. இதனால் யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மீண்டும் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிறுத்தை உலா வருவதை கண்ட மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானை, சிறுத்தை, புலி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன. சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதை கண்ட பொது மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா? என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை உலா வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதனைப்பார்த்து பீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வருவது போன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடுகளின் ரத்தமா அல்லது மனித ரத்தமா என சோதனை செய்து வருகின்றனர்.
    • நள்ளிரவில் அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட உச்சி சுவாமி கோவில் நான்காவது குறுக்கு தெரு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் லேசானது முதல் பலத்த மழை பெய்து வந்தது. நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் இரவு தூங்கினர்.

    இன்று அதிகாலை பெண்கள் எழுந்து வாசல் தெளிக்க வந்தபோது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியில் உறையச் செய்தது. காரணம் பெரும்பாலான வீட்டின் வாசல்கள் மற்றும் வீட்டு சுவர்களில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. பீதியடைந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே ஒருவருக்கொருவர் தகவல் கொடுத்து திரண்டனர்.

    மேலும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவின் முன்பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பூங்கோதை என்ற மூதாட்டி கூறுகையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால் எங்கள் தெருவின் பின்பகுதியில் இதேபோல் ஒரு வீட்டில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு 1 மணி வரை நான் தூக்கம் வராமல் விழித்திருந்தேன் அதுவரை யாருடைய நடமாட்டமும் இல்லை. அதன் பிறகு இன்று அதிகாலை வழக்கம் போல் வாசல் தெளிப்பதற்காக எழுந்து பார்த்த போது என் வீடு உள்பட சுமார் பத்து வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் எனது வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன்பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது. இதனை யார் செய்திருப்பார்கள், எதற்காக செய்தார்கள் என்று தெரியவில்லை என பதட்டத்துடன் தெரிவித்தார்.

    ரத்தம் தெளிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கிலத்தில் பி.ஆர்.  நேற்று இரவு என்று எழுதியிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரத்தம் தெளிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.

    மேலும் அந்த ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இது ஆடுகளின் ரத்தமா அல்லது மனித ரத்தமா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் மாந்திரீக வேலைக்காக யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நள்ளிரவில் அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.

    • நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
    • கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை பாண்டிபஜார் நாயர் சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழம், 6 அடி அகலத்துக்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அந்த வழியாக சென்றவர்கள் பீதி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர்.

    இதனால் நாயர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பள்ளம் ஏற்கனவே இந்த பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டபோது வாகனங்களோ, பொது மக்களோ யாரும் அதில் சிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.
    • சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தின் தலைநகராக கடலூர் இருந்து வருகின்றது.  மேலும் கடலூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள், கடலூர் சிப்காட் பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அரசு தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய அனைத்து வாகனமும் கடலூர் வழியாக சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.

    மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் பஸ் நிலையத்திற்கும் வருகை தந்து அங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய நகரப் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பஸ் நிலையம் ,செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன. இதன் காரணமாக கடலூர் முக்கிய சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி எந்தவித கட்டுப்பாடும் இன்றி சாலையில் சுற்றி திரியும் மாடுகள் திடீரென்று நடந்து செல்பவர்கள் மீதும் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் முட்டுவதால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகின்றது. மேலும் சிறுவர், சிறுமிகள் அழைத்துவரும் பெற்றோர்கள் மாடுகளை பார்த்து பீதி அடைந்து செல்வதையும் காண முடிகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் சாலை ஓரங்களில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வியாபாரிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது இதில் மிக முக்கியமாக சாலையில் செல்பவர்களை அடிக்கடி முட்டுவதும் , முட்டுவது போல் நெருங்கி செல்வதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது ஆனால் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மாடுகளை வெளியில் சுற்றி திரிய வைத்து பின்னர் இரவு நேரங்களில் பாதுகாப்பாக தங்கள் மாடுகளை அழைத்து செல்வதையும் காணமுடிகிறது.

    இது சம்பந்தமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, அனுமதி இன்றி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் எந்தவித அச்சமும் இன்றி கால்நடை உரிமையாளர்கள் பொதுமக்களை அச்சுறித்திவரும் மாடுகளை சாலைகளில் சுற்றி திரிய வைக்கின்றனர். ஆகையால் கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை உடனடியாக பறிமுதல் செய்து அதிகளவில் அபராத தொகை வசூல் செய்து சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும்.

    கடலூர்,

    கடலூர் கோண்டூர் டி.என்பி.எஸ்சி. நகரில் விநாயகர் கோவில் உள்ளது இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜை முடித்துவிட்டு இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சென்றனர்  இன்று காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் கோவில் உட்புறத்தில் மரக்கதவு இருந்தது. அதுவும் உடைந்து திறந்து இருந்தது. அதற்குள் சென்று பார்த்த போது ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும்.  இதனைத் தொடர்ந்து நகர் தலைவர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடியதும் நேற்று அதிகாலை ரோட்டில் நடந்து சென்ற நபரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றனர்  மேலும் மற்றொருவரை கடுமையாக தாக்கி செல்போன் பறிக்கும் சமயத்தில் அவர் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்   நேற்று நள்ளிரவு கடலூர் அருகே விநாயகர் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது   லும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் தற்போது குறைந்த அளவில் செல்வதை காண முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் கொள்ளை 

    வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே கோண்டூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. இதனை பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது   இதனை தொடர்ந்து வீட்டின் அருகாமையில் டீக்கடை ஒன்று உள்ளது. டீக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் மிக்சியை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதன் அருகாமையில் மளிகை கடை ஒன்று உள்ளது. மளிகை கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் அங்கு இருந்த 10 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றனர். மேலும் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று இருந்தது.

    அந்த ஜெராக்ஸ் கடையின் ஒருபுறம் பூட்டை உடைத்து, மற்றொருபுறம் இருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்தபோது உடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மர்ம நபர்கள் அங்கு திருட முடியாமல் தப்பித்து ஓடினர். இந்த நிலையில் இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, பீதியில் காணப்பட்டனர்  இத் தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடு நடந்த வீடு மற்றும் கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.     இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நள்ளிரவில் 3 கடைகள் மற்றும் வீட்டில் பணம் மற்றும் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு கோண்டூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.
    • நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.

    வனத்தில் இருந்து சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், குரங்கு, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளைநிலங்களில் ஊடுருவி வருகின்றன.

    லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம். லிங்காபுரம்-காந்தவயல் இடையேயுள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளுர் ஆகிய கிராம மக்கள் போக்குவரத்திற்கு பரிசல், மோட்டார் படகில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை லிங்காபுரத்தில் இருந்து பரிசல் செல்லும் இடத்திற்கு செல்லும் சாலையில் 2 காட்டுயானைகள் நடமாடி வந்தன. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் காட்டுயானைகள் வனப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. லிங்காபுரம்-காந்தவயல் சாலையின் இடையே காட்டுயானைகள் நடமாடி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

    • திருச்சி கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்
    • போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மிக வேகமாக வளர்ச்சி பெறும் பகுதியாக இருந்து வருவது கே.கே.நகர். இதன் ஒரு பகுதியான ஆசாத் நகரில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவியின் கழுத்தில் இருந்து மர்ம நபர் செயினை பறித்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு செயின் பறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.

    இவரது மனைவி சரோஜா (70). கணவர் மறைவுக்கு பிறகு சரோஜா, தனது மகன் பாலமுருகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    முன்னதாக தான் வசித்த திருச்சியில் உள்ள வீட்டை பாதுகாப்பதற்காக ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை நியமித்து தனது வீட்டினை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வந்து வீட்டினை பார்த்து விட்டு சென்றிருந்தார்.

    நேற்று மாலை மீண்டும் வீட்டினை பார்க்க வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பணிப்பெண் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வீட்டில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்த நகை திருடப்பட்டு இருந்ததை அறிந்து அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்ததை ஆய்வு செய்த காவல்துறையினர் இதுகுறித்து அமெரிக்காவில் இருக்கும் சரோஜாவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொடர் கொள்ளை சம்பவம் ஆசாத் நகர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×