search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.சி.ஐ.டி."

    • முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலமோசடி வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் 15 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கேரளாவிற்கே சென்று கைது செய்துள்ளனர்.

    இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த அவரது எக்ஸ் பக்க பதிவில், "கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் என்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

    அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், அவரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சென்னை, ஜூலை. 16-

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கரூர் மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப் பதிவு செய்து விட்டதாகவும், இதுபற்றி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் போலீஸ் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர்.

    இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளை யில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர்.

    அரசியல் முன் விரோதத்தில் பொய் புகார் அளிக்கப் பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    ஏற்கனவே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகி இருந்த நிலையில் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜய பாஸ்கரை தேட தொடங்கினார்கள். இதை அறிந்ததும் விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவர் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. ஒரு மாதமாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீசார் கரூருக்கு அழைத்து வருகிறார்கள்.

    • 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை தேடுதல், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சம்பவத்தன்று நடந்தவற்றை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலமாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இன்று ஜெயக்குமார் மரண வழக்கில் ஏற்கனவே போலீசாரால் விசாரிக்கப்பட்ட அவரது உறவினர்கள், தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். இதற்காக ஒரு குழு கரைசுத்துபுதூருக்கு சென்று இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர்.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசி 2 நாட்கள் வந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை கேட்டறிய முடிவு செய்துள்ளனர்.

    அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு.
    • சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், வருகை பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள போலீசாருக்கு விசாரணையை துரிதப்படுத்துதல், விசாரணையை கையாளும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

    இந்த ஆய்வின் போது சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், சிவக்குமார், இன்ஸ்பெக்டர் உலக ராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியன், முனியாண்டி, கார்த்திகா செல்வி ஆகியோர் இருந்தனர். முன்னதாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்த எஸ்.பி. முத்தரசிக்கு போலீசார் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு திடீர் வருகையால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்காமல் இருந்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி வருகையினால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரிகளில் நடந்தது

    திருவட்டார் :

    சமத்துவ மக்கள் கட்சியின் குமரி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் குலசே கரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ யராஜ் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அமலன், குமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கால்டுவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செய லாளர் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ரமேஷ் ஆன்றனி, விணு, பால்ராஜ், குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநி லங்களுக்கு கனிம வளங்கள் வெட்டி கொண்டு செல் வதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். காலை, மாலை பள்ளி, கல்லூரி களுக்கு மாணவ-மாணவி கள் செல்லும் நேரங்களில் கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு அதிவேக மாக டாரஸ் லாரிகள் செல்கிறது. இதனால் பல விபத்துக்கள் நடை பெறுகிறது. மேலும் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாண விகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்ல முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்லும் வாக னங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.

    குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் இதுவரை பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும். கல்லூரியில் போலி இருப்பிட சான்று களுடன் படிக்கும் வெளிமாநிலத்தவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    கல்லூரி நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலை களை மீட்க நடவடிக்கை எடுக்க வே ண்டும். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்க ளில் கொண்டுவந்து கொட்டு வதை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.

    • அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் பெயர் சேர்த்து உள்ளனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூர்யாவை கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது பணியில் இருந்த 15 போலீசார் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் துருவி, துருவி விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • விளையாடச் சென்ற 7-ம் வகுப்பு மாணவன் வீடு திரும்பவில்லை.
    • 2 நாட்களுக்கு பிறகு ஓரு குளத்தில் பிணமாக மிதந்தான்.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜிபு. இவரது மகன் ஆதில் (வயது 12).

    7-ம் வகுப்பு மாணவனான இவன், கடந்த மே மாதம் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். மே 6-ந் தேதி வீட்டில் இருந்து விளையாடச் சென்ற அவன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு மணத்திட்டை பகுதியில் உள்ள ஓரு குளத்தில் முகம து ஆதில் பிணமாக மிதந்தான். அவன் எப்படி இறந்தான்? என்பது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தாமதமானதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கேரள முதல்-மந்திரி பிணராய் விஜயனுக்கு, மாணவனி ன் தந்தை நிஜிபு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பிணராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆதில் முகமது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை விரைந்து கைது செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் முகமது ஆதில் மரணம் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சிஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    • திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததால் பலி
    • பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு

    நாகர்கோவில்:

    களியக்காவிளை அருகே படந்தாலுமூடு மெதுகும்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).

    இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அஸ்வினுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அஸ்வினை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய் யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து இருப்பதால் சிறுநீரகம் செயல் இழந்திருப்பதாக கூறி னார்கள். இதைத்தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இதை யடுத்து அஸ்வினின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வந்த அஸ்வின் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று டாக்டர்கள் கொண்ட குழு வினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய் யப்பட்டது. இதற்கு பிறகு அஸ்வினின் உடல் அவரது உறவினிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ஆனால் அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் உடல் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக் கப்பட்டுள்ளது. அஸ்வின் மர்மமான முறையில் இறந்தது குறித்து களியாக்கா விளை போலீசார் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு மாற்றப்பட்டது.

    நாகர் கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசார ணையை இன்று தொடங்கி யுள்ளனர். டி.எஸ்.பி. சங்கர், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உட்பட அனைத்து தகவல்களையும் சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    முதற்கட்டமாக சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு நேரில் சென்று அவர்கள் இன்று விசாரணை மேற் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரி யைகள் மாணவ-மாணவி களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் விசாரணை நடத்து கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஆஸ்பத்திரி மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.மேலும் அஸ்வினின் பெற்றோரி டமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
    • மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது.
    • அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.18-

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).

    இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அஸ்வினுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அஸ்வின் சேர்க்கப்பட்டான்.

    அப்போது அவனை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின், ஆசிட் போன்ற ஏதோ திரவத்தை குடித்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிறுநீரகம் செயலிழந்திருப்பதாகவும் கூறினர். இதையடுத்து சிறுவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அப்போது அஸ்வின், பெற்றோரிடம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வரும்போது பள்ளி சீருடையில் வந்த மற்றொரு மாணவர் ஒருவர் தனக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க கூறியதாகவும், அதை குடித்ததாகவும் தெரிவித்தான்.

    அந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருக்கலாம் என்று அஸ்வினின் பெற்றோர் சந்தேகிக்கிறார்கள் .இது குறித்து அஸ்வின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இந்த நிலையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை சந்தித்தும் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் உடல்நிலை மோசமான அஸ்வின் நேற்று மாலை பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.மாணவன் அஸ்வின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அஸ்வினின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை முழுவதையும் சி.சி.டி.வி. பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் தான் அஸ்வின் இறப்பிற்கான முழு விவரமும் தெரியவரும்.

    மேலும் அஸ்வினுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார் ? என்பது இன்னும் மர்மமாக உள்ளது .

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது. அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ×