என் மலர்
நீங்கள் தேடியது "அங்கன்வாடி கட்டிடம்"
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தன.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நெல்வாய் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜு, திமுக மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோ. ரவி, ஞானவேல், தினகரன், சங்கர், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், முன்னாள் சேர்மன் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
- பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தரையில் தண்ணீர் தேங்குகிறது.
இதனால் இந்த கட்டிடத்தில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
தற்போது அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதா வது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்க ன்வாடி கட்டிடம் கட்டும் வரை மாற்று இடத்தில் அங்கன்வாடி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- ரூ.12 லட்சத்தில் கட்டப்படுகிறது
- பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கியது
திருப்பத்தூர்:
கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஒட்டி ஆதியூர் ஊராட்சி தங்கபுரம் கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் கட்ட பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ. பி. பழனிவேல் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார்.
புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை தொடங்கி வைத்து பேசினர்.
- பூமிபூஜை போட்டு தொடங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியம், பொன்னேரி ஊராட்சி ராமனூர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் கட்டிடம் பணியை க.தேவராஜி எம்.எல்.ஏ. பூமிபூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சிந்துஜா ஜெகன், கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், துணைத் தலைவர் அரவிந்தன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி எஸ் பெரியார்தாசன், ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- சென்னிமலை பார்க் ரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
- மரங்கள் வேர்கள் கட்டிடத்தில் உள்பகுதியில் படர்ந்து கட்டிடம் பழுதடைந்து விட்டது.
சென்னிமலை:
சென்னிமலை பார்க் ரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி பள்ளிக்கூடத்தில் 18 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
தற்போது இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் மரங்கள் முளைத்துள்ளதால் அதன் வேர்கள் கட்டிடத்தில் உள்பகுதியில் படர்ந்து கட்டிடம் பழுதடைந்து விட்டது.
இதனால் அங்கன்வாடி கட்டிடத்தின் சமையலறை மற்றும் பொருட்கள் வைக்கும் அறையின் மேல் பகுதி முற்றிலும் சிதைந்து விட்டதால் மழைக்கா லங்களில் தண்ணீர் வடிந்து அறைகளில் தேங்கி நிற்கிறது.
மேலும் கட்டிடத்தின் மேல் பகுதிகளில் அதிக அளவில் வெடிப்பு காணப்படுவதால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு சமையல் செய்யாமல் வகுப்பறை உள்ள இடத்தில் சமையல் செய்யப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் வகுப்பறை மற்றும் அங்கன்வாடியை சுற்றி மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து விடுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கின்றனர்.
மழை காலங்களில் அங்கன்வாடிக்குள் தண்ணீர் தேங்குவதால் குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் நிலை உருவாகிறது.
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
- அடிக்கல் நாட்டு விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் தன் சொந்த செலவில் செய்து வருகின்றார். அதனடிப்படையில் இன்று களக்காடு ஒன்றியம் ஏர்வாடி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள திருவரங்கநேரி வடக்கு புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிட பணிகளை தொடங்கி வைத்து அவர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பாதை வசதி இல்லாமல் அங்கன்வாடி கட்டிடம் பூட்டிக்கிடக்கிறது.
- ஆக்கிமிப்புகளை அகற்றி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துகுழி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். வயல்வெளியோர பகுதியில் இந்த கட்டிடம் உள்ளதால் மழை காலங்களில் நீர் ஊற்றெடுத்து மையத்தின் முன்பு தேங்கி நின்று சேறு சகதியாக மாறி பாதை வசதியில்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் வழியில் முள் செடிகள் முளைத்து அடர்ந்த வனம் போல் காட்சியளிக்கிறது.
அங்கன்வாடி மையக்கட்டத்தில் சுவர்கள் மற்றும் தரைதளங்கள் அங்காங்கே புதைகுழி போல் பெயர்ந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையத்தை மந்தையில் உள்ள சமுதாய கூடத்திற்கு மாற்றம் செய்து தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி பேவர்பிளாக் சாலை அமைத்து கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
- புதிய கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., ரூ.11.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையகட்டடம் பழுதடைந்து இருந்ததால் புதிய கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., ரூ.11.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார். அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தை எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னப்பன்,பிரேமா பழனிச்சாமி, மற்றும் தண்ணீர் பந்தல் நடராஜன், பானு பழனிச்சாமி, கோகுல், கோவிந்தராஜ், சிவப்பிரகாஷ், மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
- பயன்பாட்டிற்கு வராத கட்டிடத்தால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
வருசநாடு:
கடமலைக்குண்டு அருகே தேவராஜ்நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 கி.மீ தொலைவில் உள்ள கொம்புகாரன்புலியூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். தினமும் காலை, மாலை 1 கி.மீ தொலைவு குழந்தைகள் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.
எனவே தேவராஜ்நகர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டிடம் கட்ட ப்பட்டது முதல் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவராஜ்நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு
திருவட்டார் :
கண்ணனூர் ஊராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சியோன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் சேதமடைந்து இருந்தது. அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரியிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று மாவட்ட பஞ்சாயத்து கமிட்டி கூட்டத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிடத்தின் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட பஞ்சயாத்து கவுன்சிலர் செலின்மேரி தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கன்வாடியை திறந்து வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் பொது க்குழு உறுப்பினர் ரெத்தின குமார், வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, குமரி மேற்கு மாவட்ட பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுசெய லாளர் ஜான் இக்னேசியஷ், மாவட்ட செயலாளர் பென்னட், முன்னாள் வட்டார தலைவர் ஜெக ன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், வார்டு உறுப்பினர் யோவான் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
- நெல்லையப்பபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
தென்காசி:
கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் எஸ்.ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து சின்னக்குமார்பட்டி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய சமுதாய நலக்கூடமும், நெல்லையப்பபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவி சாருகலா ரவி தலைமையில் நடை பெற்றது.
விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
- விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட ரெயில்வே பீடர் ரோட்டில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். கவுன்சிலர் வேல்சங்கரி முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் சுகந்தி, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ் பின் சகாய பிரமிளா, குழந்தை கள் நல அலுவலர் பர்கத் சுல்தானா வரவேற்றனர்.
விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, தி.மு.க. வார்டு செயலாளர் ராமையா, தி.மு.க. தன்னார்வலர் ரொட்டேரியன் வினோத், சீனிச்சாமி, சுப்புராஜ், தாவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முனியசாமி, சமுதாய நிர்வாகிகள் கண்ணன், வேலுச்சாமி, பழனிச்சாமி, தொழிலதிபர் வைரவச்செல்வம், அழகு ராஜ், நகராட்சி ஒப்பந்ததாரர் கருப்பையா தாஸ் மற்றும் பொதுமக்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.