search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வகுப்பறைகள்"

    • 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
    • பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், கருணை அடிப்படையில் 49 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்.மா.சுப்பிரமணியன் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது, ஆகிய 2 விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.


    புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோருக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய 5 குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் 2-வது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

    கடந்த 3 வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது, தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    • கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து, நபார்டு திட்டத்தில், புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட, ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்று, கட்டுமான பணிகளை பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாக ராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1 ேகாடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படுகிறது.
    • கட்டிட பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) குமரேசன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா விநாயகமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீது மற்றும் கிராம பிரமுகர்கள் மணிகண்டன், மணிவண்ணன், கலியபெருமாள், குட்டியப்பன், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி வளாகத்தின் கட்டிடப்பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
    • திரைப்பட நடிகா் சின்னிஜெயந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

     தாராபுரம்: 

    தாராபுரம் அருகே உள்ள எலுகாம்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலக்கடை, பொன்னிவாடி, எலுகாம்வலசு உட்பட பல்வேறு கிராமத்தை சோ்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பள்ளியின் வகுப்பறைகள் பழுதடைந்து காணப்பட்டது. அதனை அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவரும், அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருமான சந்திரசேகர் புதிய வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்தார்.

    அதைத் தொடர்ந்து கடந்த வருடம் அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆறுமுகம் அறக்கட்டளை சாா்பில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.சுமாா் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தின் கட்டிடப்பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.விழாவுக்கு அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், உமாமகேஸ்வாி சந்திரசேகா் ஆகியோா் தலைமை தாங்கினர். எலுகாம்வலசு பள்ளி தமிழாசிாியா் முத்தமிழ்வேணி வரவேற்றாா். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனா். திரைப்பட நடிகா் சின்னிஜெயந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

    ஈரோடு பாராளுமன்ற உறுப்பினா் கணேசமூர்த்தி, திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், 4-ம் மண்டல தலைவா் இல.பத்மநாபன், வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் தலைவா் சிவராம்,எக்ஸல் குழும தலைவா் முருகானந்தம், நேச்சுரல்ஸ் நிறுவனா் குமரவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் தாராபுரம் ஆா்.டி.ஓ. குமரேசன், அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிடெட் கவின் நாகராஜ், இளங்கோ, கே. சேம்பா் நிா்வாகி திருப்பூா் பாலாஜி,தாராபுரம் நகா்மன்ற தலைவா் பாப்புகண்ணன், துணைத்தலைவா் ரவிச்சந்திரன்,

    மூலனூா் பேரூராட்சி தலைவா் தண்டபாணி, ஒன்றியக்குழு தலைவா் சுமதி காா்த்திக், தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு, பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவா் பன்னீா் செல்வம், தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளா் ராஜேந்திரன் உள்பட பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

    மேலும் இந்த பள்ளிக்கு 23 வகையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணித உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதோடு இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு கலைக் கல்லூாி அல்லது என்ஜினீயாிங் மேற்படிப்புக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்தையும் அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள உள்ளதாக தொிவித்துள்ளது. அனிதா டெக்ஸின் இந்த கல்வி சேவையை பாராட்டி சந்திரசேகா் குடும்பத்தினரை கவுரவிக்கும் விதமாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டி கேடயம் வழங்கினாா். முடிவில் பள்ளி ஆசிாியா் அரவிந்தன் நன்றி கூறினாா்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சீரங்கப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் தேவை என பொதுமக்கள் நல்லதம்பி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஒட்டி பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்ட ரூ.16.50 லட்சம் மதிப்பில் நல்லதம்பி எம்.எல்.ஏ தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கி பூஜை செய்து பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் வரவேற்றார், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார், வகுப்பறைகள் கட்டும் பணியை பூஜை போட்டு ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் விஜியாஅருணாச்சலம் துணைத் தலைவர் டி. ஆர். ஞானசேகரன், மாவட்ட பிரதிநிதி சரவணன், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் ஏ சி.சுரேஷ், ஜி.ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் துணை தலைவர் மதி நன்றி கூறினர்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட செட்டேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18.50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள் கட்ட பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கவுன்சிலர் ஜெயாசுந்தரேசன், வெலக்கல்நத்தம் ஊராட்சிமன்ற தலைவர் ராமன், துண தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×