என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயணி கைது"
- விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
- சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் இருந்து வியாபாரிகள் குருவிகளாக சென்று அங்கிருந்து தங்கத்தை திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேடிக் ஏர் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.35,02 ,800 மதிப்பிலான 556 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த சிம்பத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- அமிர்தசரஸ் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
- விமானம் அமிர்தசரஸ் வந்து இறங்கியதும் ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
அமிர்தசரஸ்:
துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜலந்தரை சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற பயணி இருந்தார்.
குடிபோதையில் இருந்த அவர் விமான பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து விமான பணிப்பெண் அவர் மீது புகார் அளித்தார்.
இதுகுறித்து அமிர்தசரஸ் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் அமிர்தசரஸ் வந்து இறங்கியதும் ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
- நீண்ட நேரம் நடத்திய சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
- வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று ஒரு விமானம் புறப்பட தயராக இருந்தது.
விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்த சில வினாடிகளில் விமான நிலையத்திற்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்னை விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதை கேட்டதும் அதிகாரிகள் பதறி போனார்கள். உடனே அவர்கள் விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சென்னை விமானத்தை புறப்பட வேண்டாம் என உத்தரவிட்டனர்.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறக்கப்பட்டனர். அதன்பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விமானத்திற்குள் சென்று சோதனை நடத்தினர்.
நீண்ட நேரம் நடத்திய சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன்பின்னரே வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விமான நிலையத்திற்கு வந்த டெலிபோன் நம்பர் குறித்தும் சோதனை மேற்கொண்டனர்.
இதில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதே விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணி என தெரியவந்தது. உடனடியாக அவரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்தேன். ஆனால் விமான நிலையத்திற்கு வர தாமதம் ஆகிவிட்டது. இதன் காரணமாக அதிகாரிகள் என்னை விமானத்தில் ஏற்றவில்லை. பயணம் செய்யவும் முடியாமல் போனது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தேன், என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண் ஊழியரிடம் பயணி ரகளையில் ஈடுபட்ட காட்சிகளை விமானத்தில் பயணம் செய்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
- தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்பட தயராக இருந்தது.
விமானத்திற்கு வந்த பயணிகளை பெண் ஊழியர்கள் அவரவர் இருக்கையில் அமரவைத்தபடி இருந்தனர். அப்போது பயணி ஒருவர், பெண் ஊழியர் ஒருவரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார்.
அவருடன் வந்த இன்னொரு பயணியும் பெண் ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார். இருவரையும் சக பயணிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் இருவரும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டபடி இருந்தனர்.
இச்சம்பவம் குறித்து பெண் ஊழியர் விமான பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் உடனே விமானத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட பயணிகள் இருவரையும் விமானத்தில் இருந்து இறக்கினர். பின்னர் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி டெல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட பயணி அப்சர் ஆலம் என்பவரை மட்டும் கைது செய்தனர்.
இதற்கிடையே பெண் ஊழியரிடம் பயணி ரகளையில் ஈடுபட்ட காட்சிகளை விமானத்தில் பயணம் செய்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அது தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
- விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் பலத்த சோதனை செய்தனர்.
- ரூ.42 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கேப்ஸ்யூல் வடிவில் விழுங்கி குடலுக்குள் பதுக்கி வைத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் பலத்த சோதனை செய்தனர்.
இதில் ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடலில் சோதனை செய்தபோது அவர் வயிற்றுக்குள் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
ரூ.42 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கேப்ஸ்யூல் வடிவில் விழுங்கி குடலுக்குள் பதுக்கி வைத்துள்ளார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கத்தை கடத்தி வந்த பயணி ரசாக்கை அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்