search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதள புகழுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை சந்திக்கும். பல வீடியோக்கள் வைரலாகும்.

    அந்த வகையில் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதி சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    டாம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட இந்த வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது. வீடியோவில், இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து ப்ரொஜெக்டர் வைத்து பெரிய திரையில் சிலி மற்றும் பெரு அணிகள் இடையே நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து விளையாட்டு போட்டியை குடும்பத்தினர் பார்ப்பதை காணமுடிகிறது.

    இதனிடையே சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்" என அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
    • பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது.

    சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக கடந்த மே மாதம் 10-ந் தேதி திறக்கப்பட்டது.

    அப்போது முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கேதர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.

    கோவிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி சரோவர் மலையில் அதிகாலை 5 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

    எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதனிடையே கேதார்நாத் கோவிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் பனிச்சரிவை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகின.

    • அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
    • வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன்படி அவை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அவை தொடங்கியது முதல் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்துக்கு சபாநாயகர் ராஜகண்ணப்பனை கடுமையாக விமர்சித்தார். மேலும் அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் நேற்று சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு கீழே எச்சில் துப்புகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


    இது குறித்து இணைய வாசிகள் டிசிப்ளின் கிலோ என்ன விலை?? என்றும், 40/40 வெற்றி பெற்றவர்கள் அவர்கள் வேலையை தொடங்கிவிட்டார்கள் என்று கமெண்டுகளையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.


    • கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார்.
    • ஆர்டர் நிலை ‘இன்று வந்து சேர்ந்துவிடும்’ என்று காட்டி உள்ளது.

    ஆன்-லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து வினியோகம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்-லைன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைந்து சேவையை வழங்கி வருகின்றனர்.

    ஆனால் மும்பையை சேர்ந்த ஒரு வாலிபர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பொருள் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையை சேர்ந்த ஆஹ்சன் கர்பாய் என்ற வாலிபர் பிளிப்கார்டில் ஒரு ஜோடி ஸ்பார்க்ஸ் ஸ்லிப்பர்களை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார். ஆனால் அவை உடனடியாக வினியோகம் செய்யப்படவில்லை.

    பல ஆண்டுகளாக அவரது ஆர்டர் நிலை 'இன்று வந்து சேர்ந்துவிடும்' என்று காட்டி உள்ளது. ஆனால் அந்த நிலை மட்டும் மாறாமலேயே இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் திடீரென பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த ரூ.485 மதிப்புள்ள ஒரு ஜோடி செருப்பு வினியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

    அதன்படி அவருக்கு அந்த ஆர்டர் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தனது அனுபவத்தை அவர் எக்ஸ் தளத்தில் தனது ஆர்டரின் வரலாற்றுடன் கூடிய ஸ்கிரீன்ஷாட்டுகளை பகிர்ந்தார்.

    அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • வீடியோவில் உள்ள நபர் மலையாளத்தில் பேசுவதால் இது கேரளாவில் நடந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் பல விமர்சனத்துக்குள்ளாவதும், வைரலாவதும், பயனர்களை ரசிக்கவும் வைக்கும்.

    அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சாலிஹ்க்ட் முள்ளம்பத் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்கில் மலைப்பாம்பு இருந்த காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

    வீடியோவில், ஒருவர் ஸ்கூட்டரின் இருக்கையை நீண்ட கட்டையை கொண்டு திறக்கிறார். அப்போது, பெட்ரோல் டேங்கில் மலைப்பாம்பு சுருண்டு உருளும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இருப்பினும் வீடியோவில் உள்ள நபர் மலையாளத்தில் பேசுவதால் இது கேரளாவில் நடந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

    வைரலான இந்த வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பல பயனர்கள் ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதில் ஒரு பயனர், வாகனத்தில் டேங்கில் முழு பெட்ரோல் இருக்கிறதா என்று சோதிக்க பாம்பு வந்துள்ளது என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு இருந்தார்.

    • டி 20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

    மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, மேற்கத்திய தீவுகள் சூப்பர் 8 சுற்றுடனும், நியூசிலாந்து பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடனும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியுள்ள நிலையில் சூப்பர் 8 சுற்றிற்கு செல்லும் முன் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் கூறியிருப்பதாவது,

    உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகளின் பெயரை கம்மின்ஸிடம் பேட்டியின் தொகுப்பாளர் கேட்டிருப்பார்.

    அதற்கு பதிலளித்த கம்மின்ஸ் "கண்டிப்பாக ஆஸ்திரேலியா இருக்கும், மற்ற 3 அணிகள் குறித்து எனக்கு கவலையில்லை (Dont Care)" எனக் கூறியிருக்கிறார்.

    டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறிய நிலையில், இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

    • யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ.
    • பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது.

    ஆழமான ஆற்றை யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அது அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞர் சச்சின் பரலி இந்த அரிய காட்சியை படமாக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    யானைக்கூட்டம் பொதுவாக காடுகளை கடந்து செல்வதை பார்த்து இருக்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில்கூட அவை பெருங்கூட்டமாக வந்து நீர்அருந்தி கடந்து செல்லும். ஆனால் அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முயலாது என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

    அந்த எண்ணத்தை மாற்றும் விதமாக, ஆழமான ஆற்றையும் அசாதரணமாக எங்களால் கடக்க முடியும் என்பதைப்போல, ௮௦-க்கும் மேற்பட்ட யானைகள் பெருங்கூட்டமாக பிரமாண்டமான பிரம்மபுத்திராவை நீந்திக்கடக்கின்றன. அவற்றின் முதுகு பகுதிகள் மட்டுமே மேலே தெரியும் அளவில் ஆழமான இடத்தில் அவை நீந்தி செல்லும் காட்சி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

    வழக்கமாக காட்டு மாடுகள்தான் நூற்றுக்கணக்கில் இப்படி மந்தையாக ஆற்றைக்கடக்கும் காட்சியை பார்க்க முடியும். அதுபோல அதிக எண்ணிக்கையிலான யானைக்கூட்டம் நீந்தும்காட்சி அரிதாக படம்பிடிக்கப்பட்டு இருப்பது புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது. இந்த காட்சி வலைத்தளத்தில் 42 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றுள்ளது.

    • ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
    • சாய்பல்லவி முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி இந்தியில் தயாராகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைத்தளத்தில் கசிந்து வைரலாகிறது. சீதை கதாபாத்திரத்துக்கு சாய்பல்லவி பொருத்தமானவர் இல்லை என்று ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் லட்சுமணனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறும்போது,"அனிமல் படம் பார்த்த பிறகு அதில் நடித்திருந்த ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால் அவரது முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை. எனவே சீதையாக அவர் எப்படி நடிக்கப் போகிறார் என்று எனக்கு புரியவில்லை. சாய்பல்லவி நடித்த படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அவர் முகத்தில் தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை'' என்றார். சுனில் லாஹ்ரி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உடனடியாக அருகில் இருந்தவர்கள் அலறிய பள்ளி மாணவிகளை உடனடியாக உதவ முன்வந்தனர்.
    • மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோவில் ஒரு வெள்ளை நிற பள்ளி வேனானது ஒரு குறுகிய தெருவில் ரிவர்ஸ் சென்று உடனடியாக அதிக வேகத்தில் அந்த தெருவை நோக்கி செல்கிறது. அதில் பின்பக்கமாக இரண்டு மாணவிகள் தங்கள் பள்ளி பேக்குடன் குச்சலிட்ட படி கீழே விழுகிறார்கள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அலறிய பள்ளி மாணவிகளை உடனடியாக உதவ முன்வந்தனர்.

    இரண்டு மாணவிகளும் வலியுடன் இருப்பதை இந்த வீடியோவில் காணலாம். உடனே அருகில் மாணவில் ஒருவரை தூக்கி அருகில் உள்ள வீட்டில் அமர வைக்கிறார்.

    இச்சம்பவம் சமூக ஊடகங்களில் அனைவரின் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பயனர்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

    ஓட்டுநரின் கவனக்குறைவால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேன் கதவை சரியாக மூடாததால், மாணவிகள் வெளியே விழுந்துள்ளனர்.

    மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தைத் தொடர்ந்து, மாணவர் பாதுகாப்பில் குஜராத் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    • விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.
    • வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    பொன்னேரி:

    சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை 6 வழி சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை செங்குன்றம், பொன்னேரி மீஞ்சூர், திருவொற்றியூர், பஞ்செட்டி ஆகியவற்றுடன் இணைக்கிறது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் எவ்வித தடையின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும்.

    இந்த சாலைகளில் தடையை மீறி வாரவிடுமுறை நாட்களில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் தொடர்ந்து நடந்து வருகின்றன.போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அவ்வப்போது ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே அருமந்தை என்ற பகுதியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மணி, ஷாம் சுந்தர் ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    மேலும் மோகனகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெபேயர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டு சீறி பாய்ந்து செல்வதும் அதன் பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    ரேசின் போது ஆட்டோ ஒன்று கவிழ்ந்த போது அதனை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில் 2 பேர் பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே ஆட்டோ ரேஸ் செல்வதை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டே ரேஸ் செல்வதை பார்க்கும் போதே அச்ச உணர்வு ஏற்படும் வகையில் சீறிப்பாய்கின்றன.

    வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சாகச ரேசை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நகைக்கடை பிஎன்ஜி ஜுவல்லர்ஸ்.
    • கலிபோர்னியா நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் நகைகளை கொள்ளை அடித்தது.

    வாஷிங்டன்:

    மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பி.என்.ஜி. ஜூவல்லர்ஸ். இதன் அமெரிக்க கிளை கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது.

    கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் பகுதியில் உள்ள நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பல்வேறு நகைகளை சில நிமிடங்களில் கொள்ளை அடித்துச் சென்றது.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு வெளியாகவில்லை.

    விசாரணையில், கொள்ளையர்கள் கடையை தொடர்ந்து நோட்டமிட்டதும், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

    நகை கொள்ளை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்து நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஆட்டோ மீது பைக் ஒன்று வேகமாக மோதியது. இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் சுழன்றடித்தது.

    இதனால், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்," ஆட்டோ ஒன்று யு டர்ன் எடுக்க முயல்கிறது. அப்போது அந்த வழியாக வந்த பைக் ஆட்டோ மீது மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து ஓட்டுனர் இல்லாமலேயே வேகமாக சுற்றி தாறுமாறாக ஓடியது. இதில், பொது மக்கள் மீது மோதி கீழே விழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    ×