என் மலர்
நீங்கள் தேடியது "கலைத்திருவிழா"
- சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார்.
- விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடைக் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே "இக்னீஷியா " என்னும் தலைப்பில் கடந்த 10 ஆண்டுகளாக கலைப்போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் 2 நாட்களாக நடைப்பெற்றது.
முதல் நாள் விழாவினை அடல் இன்குபேஷன் சென்டர்(ஏஐசி ) முதன்மை செயல் அலுவலர் பெரியசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஏ.எப்.டி. துறைத் தலைவர் அருந்ததி கோஷல் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார். ஜி.டி.பி. துறைத் தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார். முக ஓவியம் ( பேஸ் பெயிண்டிங்), சுவரொட்டி விளக்கக்காட்சி (போஸ்டர் பிரசன்டேஷன்), சிகை அலங்காரம் (ஹேர் டு) , காய்,பழங்களில் அலங்காரம் செய்தல் (வெஜிடபிள் ப்ரூட் கார்விங்), படத்தொகுப்பு (கொலாஜ் வொர்க்), வரைதல் திறன் (ஸ்கெட்சிங்), புகைப்படக்கலை (போட்டோகிராபி), மின்னணுக்கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
2-வது நாள் தனி நபர் நடனம் , குழு நடனம் , மெய்ப்பாடு , ஆடை அலங்கார அணிவகுப்பு ( சிறந்த வடிவமைப்பாளர் ,அதிகபட்சப் பொருத்தம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு மேடையில் தங்களின் அபரிமிதமான கலைத்திறமைகளை வெளிக்காட்டி காண்பவர்களை கவர்ந்தனர்.மாணவர்களின் மூன்று ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. அனுராக் மண்டல் நடுவராக இருந்தார். விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா எம்.சண்முகம் தலைமை தாங்கினார்.கல்லூரி தலைவர் மோகன்,கல்லூரி துணைத்தலைவர்கள் பழனிச்சாமி , ரங்கசாமி, பொதுச்செயலாளர் விஜயகுமார், இணைச்செயலாளர் சீனிவாசன்,நிர்வாக குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பெற்றது.போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- வட்டார அளவில் 29ந்தேதி முதல், மாவட்ட அளவில் டிசம்பா் 6ந் தேதி முதல், மாநில அளவில் ஜனவரி 1ந் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.
- மாநில அளவில் வெற்றி பெற்று தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
திருப்பூர்:
அரசுப் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தி அவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலைப் பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
போட்டிகளில் 6 முதல் 9, 9 முதல் 10, 11 முதல் 12ம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக நுண்கலை, கவின் கலை, நடனம், நாடகம், வாய்பாட்டிசை, கருவி இசை, மொழித்திறன், இசை சங்கமம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
பள்ளி அளவில் போட்டிகள் தொடங்கி உள்ளது.வட்டார அளவில் 29ந்தேதி முதல், மாவட்ட அளவில் டிசம்பா் 6ந் தேதி முதல், மாநில அளவில் ஜனவரி 1ந் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.
இதில் வெற்றி பெறும் மாணவா்கள் அடுத்தகட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவாா்கள். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பரிசு, சான்றிதழ் மற்றும் கலையரசன் மற்றும் கலையரசி ஆகிய விருதுகள் வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெற்று தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இந்த போட்டிகள் திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது.
- இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது. இதில் பள்ளித் தலைமையாசிரியை ரமா தலைமை வகித்தார். ஆசிரியை சுமதி வரவேற்றார். முத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா செந்தில்குமார் கலைத்திருவிழா மற்றும் மாணவ–-மாணவியரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரேவதி சசிகுமார், உறுப்பினர்கள் பிரபாகரன், மாதேஸ்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிறைவாக, ஆசிரியை மலர்கொடி நன்றி கூறினார்.
இதேபோல் பொன்னா ரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திரு விழாவிற்கு, பள்ளித் தலைமையாசிரியை புனித ஞானதிலகம் தலைமை வகித்தார். பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ–மாணவியருக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பிரபாகரன், முன்னாள் தலைவர் வசந்தா காசிவிஸ்வநாதன், துணைத் தலைவர் கலா வதி பூவராகவன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனி சாமி, ஆசிரியர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
- 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 36 வகை போட்டிகள் நடைபெற்றது.
- கட்டுரை, ஓவியம், கதைகூறுதல், பேச்சு, நடனம், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
கோவை,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கலைத்திருவிழா நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 36 வகை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலைத்திறன், கட்டுரை, ஓவியம், கதைகூறுதல், பேச்சு, நடனம், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவை கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) புனிதா அந்தோணியம்மாள், பேரூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீகலா ஆகியோர் பார்வையிட்டனர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கலைத்திருவிழாவில் பங்கேற்கும் வகையில் தயார்படுத்தி இருந்தனர். பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் அடுத்து வட்டார அளவிலும், பின்பு மாவட்ட அளவிலும் பங்கேற்பார்கள். மாநில அளவில் வெற்றி பெறுவோர் பள்ளிக்கல்வித்துறை மூலம் துபாய் அழைத்து செல்லப்படுவர்.
முழுைமயான வளர்ச்சி என்பது மாணவர்கள் தன்னைத்தானே ஆராய்ந்து தன்னம்பிக்கையுடன் கலைநிகழ்வுகளில் பங்கேற்க விழைதல் ஆகும். கல்வி என்பது புத்தகம் மட்டும் சார்ந்தது அல்லாமல் கலைகள், விளையாட்டுத்திறன்கள் ஆகியவற்றையும் உள்ளடங்கி வளர்ப்பதாக இருத்தல் வேண்டும். கலைத்திருவிழா தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு ஆகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கிலிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை விஜயராணி முன்னிலை வகித்தார். தேவராட்டம், கரகாட்டம், கும்மி, இயற்கை விழிப்புணர்வு நாடகம், களிமண் உருவ பொம்மை செய்தல், பாட்டுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நாட்டுப்புறப் பாடல் என பல்வேறு பிரிவுகளில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் கனகராஜ், ஆசிரியர்கள் பிரியா, புனிதா, லீலா, சீதாலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.
- தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழக கலைத்திரு விழா நடைப்பெற்றது.
- மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஓசூர்,
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, மா ணவர்களை மென்மையான வர்களாகவும், உயிர்ப்புள்ள வர்களாகவும் மாற்றும் சக்திமிக்க பலதரப்பட்ட கலைவடிவங்களில், அவர்களது தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழக கலைத்திரு விழா நடைப்பெற்றது.
இதில் மாணவியர்கள் கலந்து கொண்டு நாட்டியம், நடனம் ஆகிய பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர்.
இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவியருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
துணை மேயர் ஆனந்தய்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எல்லோரா மணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோவிந்தராஜ், முனிராஜ் , ஒசூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கஜேந்திர மூர்த்தி, பகுதி செயலாளர் ராமு, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், மாமன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியை லதா, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாபோட்டியில் பங்கேற்க உள்ளனர்.
- பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் கடந்த வாரம் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.
கலைத்திருவிழாவை தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலர் (உயர்நிலை) பக்தவச்சலம் துவக்கி வைத்தார். இந்த கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, பாட்டு, கட்டுரை, ஓவியம், தனி நடனம், குழு நடனம், களிமண் வேலைப்பாடுகள் ஆகியவற்றை மாணவ மாணவிகள் செய்து காண்பித்தனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாபோட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கலைத்திருவிழாவானது வட்டார அளவில் 29 ந்தேதி 9, 10 ம்வகுப்பு மாணவ மாணவிகளுக்கும், 30 ந்தேதி 6, 7,8 மாணவ மாணவிகளுக்கும் இன்று 1 ந்தேதி 11, 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இந்த கலைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வெள்ளகோவில் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனாட்சி, வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.
- திருமங்கலத்தில் நடந்த கலைத்திருவிழாவில் 31 பள்ளிகள் பங்கேற்றன.
- இந்த கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திருமங்கலம்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022-2023ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
6-ம் வகுப்பு முதல் முதல் 8-ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட உதவித்திட்ட அலுவலர் கார்மேகம், மாவட்ட கல்வி அலுவலர் செல்வகணேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் சின்னவெள்ளைச்சாமி, நமச்சிவாயம், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீதேவி சண்முகம் ஆகி யோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த கலைதிருவிழாவில் 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாநில மற்றும் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
- அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவையாறு:
திருவையாறு ஒருங்கி ணைத்த பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டார வள மையம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் கலைத்திருவிழா நடந்தது.
அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா, வட்டார கல்வி அலுவலர்கள் விர்ஜின் ஜோனா, தங்கதுரை ஆகியோர் கலை திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
திருவையாறு ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைத்தார்
- பல்வேறு போட்டிகள் நடந்தது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் கலைத்திருவிழா நடைபற்றது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் கூட்டுறவு சங்க துணை தலைவர் சி.ஏ.முருகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சி. என்.அண்ணாதுரை எம்.பி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், பரதநாட்டியம், வயலின் இசை, பறை இசை, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிளில் மாணவர்கள் கலந்து கொண்டு கலை திறன்களை வெளிபடுத்தினர். விழாவில், வட்டார வளமைய பொறுப்பாளர்கள், கலை திருவிழா நிர்வாகிகள் பொய்யாமொழி, வேலு, வெங்கடேசன், அய்யாசாமி, முருகன், குமார், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகள் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறும் என விழா குழுவினர்கள் தெரிவித்தனர்.
- வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
- மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.
திருப்பூர் :
மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையிலும், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைசார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, வட்டார அளவில் தொடங்கி நடந்து வருகிறது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தின் அமைச்சர்கள், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் பங்கேற்க செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வருகிற 7 மற்றும் 9-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
- 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா போட்டிகள், புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கடந்த 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பள்ளி அளவில் இப்போட்டிகள் நடைபெற்று, அதில் வெற்றி பெற்றவர்கள் இந்த 3 நாள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர். கமுதி வட்டாரத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் 30 வகையான கலைபோட்டிகள் நடைபெற்றன.
இவ்விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெனிட்டாமேரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளமைய பயிற்றுநர்கள் ஜெகநாதன், கந்தசாமி, ராஜரஹீக், சந்தனகுமார், கவுசல்யா, நித்யா, நூருல்குதா மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் டேவிட், ராமச்சந்திரன், நாகராணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.