search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதி விபத்து"

    • நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). கூலி தொழிலாளி. இவர் திருவலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். சம்பவத்தன்று பெருமுகை அருகே சர்வீஸ் சாலையில் இரவு 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்க கலக்கத்தில் டிரைவர் வாகனம் ஓட்டியதால் விபரீதம்
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்

    போளூர்:

    போளூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் செங்கம் நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

    செங்கத்தில் இருந்து கண்டெய்னர் லாரி போளூர் நோக்கி வந்தது. காங்கேயனூர் அருகே வரும்போது தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதால் லாரி எதிர்பாராத விதமாக எதிரே வந்த பஸ் மீது மோதியது.

    இதில் பஸ் சேதமானது. லாரி சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வர்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 4 பேரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் போலீசார் பஸ்சையும், லாரியும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ இன்று காலை ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை ராஜா சேகரன் என்பவர் ஓட்டி சென்றார்.

    பெட்ரோல் நிரப்பிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத பைக் மீது மோதி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சாலையில் கவிழ்ந்த ஆட்டோவால் ஆம்பூர் -வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து ஆட்டோவை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த போலீசார் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வ. உ. சி நகரை சேர்ந்தவர் சரவணன் என்பவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 17) டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஆர்டிஓ அலுவலக சாலையில் இருந்து கெங்கை அம்மன் கோவில் பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது‌.இதில் லாரி டயருக்குள் விக்னேஷ் சிக்கினார்.அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆர்.டி.ஓ.அலுவலக ரோடு மற்றும் கெங்கை அம்மன் கோவில் இடையே சாலையை கடக்க சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×