search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 283979"

    • வள்ளி கும்மியாட்டம் கலை விழா நடைபெற்றது.
    • தமிழர் திருநாளாம் தை 3ம் நாள் தமிழர் கலைமன்றத்தின் கலை நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

    காங்கேயம் :

    காங்கேயம் தமிழர் பாரம்பரியகலை மன்றத்தின்சார்பில் கவுண்டம்பாளையம் தனியார் கலை அரங்கில் வள்ளி கும்மியாட்டம் கலை விழா நடைபெற்றது. இதில் காங்கேயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்கு மார் தலைமை தாங்கினார். மன்ற காப்பாளர் லதா மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். அனைவரையும் மன்ற நிர்வாகிகள் வரவே ற்றனர். அப்போது மன்ற பெண் நிர்வாகிகள் உ்்ட்பட 200 பேர் கலந்து கொண்டு வள்ளி கும்மியாட்டம் ஆடினர். விழாவில் கலந்து கொண்டு் சிறப்பாக ஆடிய அனைவருக்கும் பாராட்டும், பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தமிழர் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்,ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் திருமணம், கும்பாபிஷேகம், கோவில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு நடத்துவது , அழிந்து வரும் கலைகளை வளர்க்க தகுதியான ஆசிரியர்களை கொண்டுவருடம் முழுவதும்சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பு கள் நடத்துவது , தமிழர் திருநாளாம் தை 3ம் நாள் தமிழர் கலைமன்றத்தின் கலை நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

    இந்த விழாவில் காங்கேயம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், பொதுநல ஆர்வலர்கள், மன்ற நிர்வாகிகள் உள்பட சுமார் 750 பேர் கலந்து கொ ண்டனர்.

    • கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது
    • நடிகர் மனோபாலா பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் 21 ஆம் ஆண்டு கலை விழா மற்றும் மாநாடு, கலைஞர்களின் ஊர்வலம், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு சங்க காப்பாளரும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நடிகர் சங்க கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியை அடைந்தனர். முன்னதாக ஊர்வலத்தை திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா, குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கே.எம். பூபதி, அமெரிக்க தமிழ் சங்கத்தின் ஆலோசனை குழு தலைவர் மெய்யர்தன், தமிழ்நாடு நாடக மன்ற நாட்டுப்புற கலைஞர்களின் மாநில சங்கத்தின் மாநில தலைவர் தங்கவேல், கௌரவ தலைவர் சிங்காரவேலன், மாநில துணைத்தலைவர் சின்னசாமி, ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் ஆனந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், சாதனை புரிந்த மாணவர்கள், சான்றோர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலாளர் ஜெ. சிவகுமார், சங்கத் தலைவர் புலவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மு. ஜெய்பிரகாஷ் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மாநாட்டில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    குடியாத்தம் நகரில் கலையரங்கம் அமைத்து தர வேண்டும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை ஆண் கலைஞர்களுக்கு 55 வயதாகவும், பெண் கலைஞர்களுக்கு 50 வயதாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும். கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு, வீட்டு மனை பட்டா, பஸ்பாஸ் ஆகிவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும்.

    தமிழக அரசு வழங்கும் கலைஞர்களுக்கான உயர்ந்தவிருதான கலைமாமணி விருதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலா இரண்டு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு வழங்கும் இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணக்கான நிதி உதவி அனைத்து தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

    உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பாரம்பரிய கலை விழா நடந்தது.
    • ஆசிரியை சுமதி, மாணவி முத்து ஜீவனா ஆகியோர் பாரம்பரிய கலைகளை பற்றி எடுத்துரைத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தமிழரின் பாரம்பரிய கலை விழா நடந்தது. தமிழர்களுக்கே உரித்தான ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் இன்னர்வீ=ல் சங்க தலைவி சத்யா குப்புசாமி, ரோட்டரி சங்க தலைவி டாக்டர்.ராதா ஆகியோர் பங்கேற்றனர். மாணவி பிரதீபா வரவே

    பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், துணை நிர்வாகி அரவிந்த் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுமதி, மாணவி முத்து ஜீவனா ஆகியோர் பாரம்பரிய கலைகளை பற்றி எடுத்துரைத்தனர். மாணவர்களின் குழு நடனம் நடந்தது. மாணவி செல்வபிரியா நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது.
    • 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது. சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்றார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல், மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் குமார், மேலாண்மை குழு கல்வியாளர் பால கிருஷ்ணன் மற்றும் உறுப்பி னர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் தனித்தி றனை ஊக்குவித்தனர்.

    மாணவர்கள் கிராமிய பாடல்கள், ஓவியம், நாடகம், நாட்டியம், பறையடித்தல், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.

    • ஒடுகத்தூர் அரசு பள்ளியில் போட்டி நடந்தது
    • வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலை திருவிழா கொண்டாட்டம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டனர் வெற்றிப்பெற்றனர்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் இருந்த பல்வேறு கலைகளை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிக்கொண்டு வரப்படும் எனும் நோக்கத்தில்

    ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் துர்காராணி தலைமையில் நேற்று கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது. இதில் பள்ளி மாணவிகள் ஆர்வ முடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இதில், நடனம், நாடகம், ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கடைசியாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தற்போது இந்த கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்ப டுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கலை விழா நடந்தது.
    • மேல்நிலை இரண்டாமாண்டு மாணவி மதுமிதா நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்துர் லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் 44-வது கலைச் சங்கம ஆண்டு விழா பள்ளித் தாளாளர் லயன் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது.

    மேல்நிலை முதலாமா ண்டு மாணவர் கோகுல்பிரசாத் வரவேற்றார். முதல்வர் எம்.பி.முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க ஆளுநர் விசுவநாதனும், லயன்ஸ் சங்க மகளிர் முதல் பெண் இயக்குநர் கலையரசி சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பா ளர்களை துணை முதல்வர் ஜெயராமகிருஷ்ணன் அறிமுகம் செய்தார். மாணவ, மாணவிகளுக்கு தனித்திறமைக்கான பரிசு மற்றும் கல்வியாண்டிற்கான பரிசுகளை சிறப்பு அழை ப்பாளர்கள் வழங்கினர்.

    லயன்ஸ் பள்ளியின் மாணவ-மாணவிகளின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் பரதம், நாட்டுப்புற நடனம், வரவேற்பு நடனம், பல்சுவை நடனம், மைம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் லயன் ரெங்கராஜா, பள்ளிச் செயலாளர்-தாளாளர் வெங்கடாசலபதி, பொருளாளர் குணசேகரன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேல்நிலை இரண்டாமாண்டு மாணவி மதுமிதா நன்றி கூறினார்.

    ×